செயல்பாடுகள்


பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு பத்திரிக்கைக் செய்தி
2001 செப்டம்பர் 11-ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமுக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் 19-20.09.11 ஆகிய இரு தினங்களில் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.
21.09.2011 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.
•    பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும். அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் முலம் கண்டோம்,
•    திரு. ஜான் பாண்டியன் அவர்களை கைது செய்த‌தால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்கக் கட்டுக்கதை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்படச் சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம்,  ஜான் பாண்டியனை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20-ல் இருந்து 30 பேர் மட்டுமே.  ஆர்ப்பாட்டம் நடக்கும்போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும், வந்தும் கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டு குறிப்பிட்ட அந்த சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே, அன்றைக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திரளானவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்துக்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ, காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.
•    மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிஞ்ஞைகள் எதையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்ப‌தை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டுகாயம் இடுப்புக்கு மேலேதான் உள்ளது,  காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் கூட்டம் சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கிச் சூட்டை மீண்டும் தனித்த‌ முறையில் நடத்தி இருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில் கிடைப்போரை எல்லாம் சுட்டதோடு, அவர்களைப் பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர்.  (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
•    ஊடகங்களில் வெளியானது போல் காவல்துறையினரது வஜ்ரா வாகனமும் பிற வாகனங்களும் மக்களால்தான் கொளுத்தப் பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல்துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதை பலரின் சாட்சியங்களின் மூலம் சந்தேகமாகக் கருதுகிறது,  ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறைக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கச் சான்றுகள் மூலம் அறிகிறோம்,
•    சட்டப்பேரவையில் முதலமைச்சரும். ஊடகங்களும் தெரிவித்ததைப் போல் இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாகக் கையாண்டிருக்கக் கூடிய விஷயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறைச் செயல் என்றே சொல்ல முடிகிறது.  ஒடுக்கப்பட்ட தேவேந்திர குல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது. அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காகத் திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.
•    துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. உரிய சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை.  தாக்கப்பட்டக் குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை என்று அலைக் கழிக்கப்பட்டுள்ளனர். ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
•    துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களில் உள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களைக் கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் மூலம் அறிந்தோம்.  தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,  குறிப்பாக எச். பரளை என்ற கிராமத்தில் 18.09.2011-ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி. கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இருதரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
•    வன்முறையாளர்கள் சுட்டதாகக் காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட வ‌ர்களில் ஒருவர் கூட ஜான்பாண்டியன் ஆதரவாளர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
•    இந்தத் துப்பபாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ. பத்திரிக்கைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
•    கலவரத்திற்குக் காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சேரி சம்பவம் முழுக்க இட்டு கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும், பரமக்குடி வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே எம் குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுபடுத்தி எழுதியதாகக் கூறப்படுவதற்கும். பழனிகுமாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  அவரை இழிவுபடுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவரோ எவரும் இல்லை.  மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பட்டில் உள்ள இடம்.  எனவே, இந்த சம்ப‌வத்திற்கும். பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை.  ஜான்பாண்டியனைத் தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல் துறையினர் அழைத்து வந்திருக்கமுடியும்.
பரிந்துரைகள்
•    காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்குப் பயந்து மருத்துவ‌மனையில் சேர்ந்து உரிய சிகிச்சைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.  எனவே, தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.
•    தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வழக்குப் பதிவு செய்தால் அதை எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.
•    இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும், தகுதியானவர்களுக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்,
•    இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை.  எனவே, சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.
•    விரிவான பொது விசாரணை வேண்டும்.
பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த‌வர்கள்
1.    பேரா. சந்திரசேகர், முன்னாள் முதல்வர், கவின் கலைக்கல்லுரி, சென்னை
2.    பேரா. அன்புசெல்வம், புதுச்சேரி
3.    பேரா. ஸ்டாலின் இராஜாங்கம், மதுரை
4.    எழுத்தாளர் யுவபாரதி, சென்னை
5.    எழுத்தாளர் அ. ஜெகநாதன், மதுரை

—————————————————————-

My Lecture on: Towards an Understanding of the Response to Dalit Aesthetics

Posted on March 26, 2012

University of Madras

The Faculty members, Students and Alumni of The Department of English Organized and cordially invite you to attend

India Studies Endowment Lecture on

 “ Towards an Understanding of the Response to Dalit Aesthetics ” 

Lecture By

Prof. Anbuselvam

Researcher,Activist and Chronicler

French – Dalit Studies, Puducherry 

Date    : 29th March, 2012

Time    : 2.00 pm

Venue : Modern Classroom

Department of English – University of Madras

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s