நேர்காணல் : அய்யா சி. சாமுவேல் பறையர்

Sam - 1தமிழகத்தின் தலித் போராட்டக் களத்தில் நன்கு அறிமுகமானவர் அய்யா சி. சாமுவேல் பறையர். விருதுநகர் மாவட்டம் சோமையாபுரத்தைச் சார்ந்தவர். இளமைக்கல்வியை தனது கிராமத்தில் முடித்து விட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தனது பட்டப்படைப்பைத் தொடர்ந்தார். சிறந்த புத்தக வாசிப்பாளர். இந்திய சுதந்தரத்துக்குப் பின் தன் பெயருக்குப் பின்னால் “பறையர்” என்கிற அடைமொழியை ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாளாகப் பிரயோகித்து, அவர்களின் சமூக – அரசியல் நடவடிக்கைகளில் தனித்த அடையாளத்தை நிறுவியர் இவராகத்தான் இருக்க முடியும். கிறித்துவராக இருந்தாலும் மதம் என்கிற கருதுகோலின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, ஆதிகுடிகளின் வரலாற்றில் நின்று பயணிப்பவர். தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவர். பறையர் குரல் என்கிற பத்திரிக்கையின் ஆசிரியர்.
மதுரை தலித் ஆதார மய்யத்தின் சார்பில் 2002 -ல் தமிழகத்தில் உள்ள சில‌ தலித் தலைவர்களுடன் ஓர் உரையாடலைத் தொடங்கிய‌போது, 2002 ஆகஸ்டு மாதம் சென்னையில் முல்லை அச்சகத்தில், அய்யா சாமுவேல் பறையர் அவர்களுடனும் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. விறுவிறுப்பான, சுவராஸ்யமான உரையாடலாக இருந்தாலும் அவருக்கே உரித்தான விமர்சனப்பார்வையில் இது அமைந்தது. சூழல் சார்ந்து அன்றைக்கு “தமுக்கு” ஆங்கில இதழில் வெளியிடப்படாத இந்த நேர்காணலை அவரின் நினைவேந்தலுக்காக வெளியிடுவது காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
கேள்வி : அய்யா வணக்கம். தலித் ஆதார மய்யத்தின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிங்க?
பதில். அது கிடக்கட்டும். அது என்னா தலித்து. எவன்டா இத கண்டு புடிச்சது. இருக்கிற பறையன எல்லாம் கூப்பிட்டு மதுரையில தலித்து, தலித்துன்னு கூட்டம் போட்டுக்கிட்டு. இதுல தலித்து கலை விழாவாக்கும். வெளிநாட்டு பணத்தை வாங்கி உயிர்பொழைக்கிறதுக்கு எங்கள ஏன் அடகு வக்கிறீங்க. இதுல என் ஊர்கார பயலுவல்லாம் கூட்டம் சேத்துக்கிறீங்க. (நேர்காணலை தொடரலாமா – வேண்டாமா என எனக்குள் தயக்கம். நண்பர் யாக்கனை பார்த்தேன். அவர் ஒரு பரிதாபப் புன்முறுவலோடு அச்சகத்திலிருந்து வெளியேறினார். சரி என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என உரையாடலைத் தொடர்தேன்).
இப்போ தமிழ்நாட்டுல இருக்கிற எல்லா தலித் தலைவர்களோடேயும் ஒரு உரையாடல் நடத்தி வருகிறோம். உங்களையும் இச்சமூகத்தின் முன்னோடியாகக் கருதி தான் இந்த உஅரையாடல் நடத்த விரும்புகிறோம்.
இது வரைக்கும் யார் யாரை சந்தித்து உரையாடல் நடத்தியிருக்கீங்க? (நான் சிலரின் பெயர்களை குறிப்பிட்டேன்). ஹூம், பறைய‌னா பொறந்து தலித்து தலித்துன்னு சொல்லிக்கிட்டு திரியிர இந்த தெருப்புழுதியெல்லாம் உங்களுக்கு த‌லைவனா தெரியுறானுங்க. ஏங்க இவனுங்கல்லாம் என்ன செய்யப்போறானுங்கன்னு நெனைக்கிறீங்க? இதுல வேற தலித்து கலை விழாவுக்கெல்லாம் கூப்பிட்டு அந்த தெருப்புழுதிகளுக்கு மாலை மரியாதை செய்றீங்க‌. என்னத்த சொல்ல.
இல்லீங்கய்ய உங்களையும் நிச்சயமா விழாவுக்கு கூப்பிடுவோம்.
எதுக்கு? நான் தான் பறையானாச்சேப்பா. என்னை கூப்புடறது இருக்கட்டும். நான் வரனுமில்ல. அதுவும் ஒரு பறையானா, பறையங்கிற அடையாளத்தோட, அதுவும் ஒரு பறையர் விழா மேடையாக இருந்தா வருவேன்.
அம்பேத்கர் சொன்னது போல நாம சாதி ஒழிப்பை மையமாக வைத்து தான் இயங்க வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும்போது பறையர் என்கிற அடையாளம் ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இருக்குமே. அது நம்முடைய நோக்கத்துக்கும், விடுதலைக்கும் எதிரானதாக இருக்காதா?
Sam - 3ஒனக்கு அம்பேத்கர் சொன்னது இருக்கட்டும். எனக்கு எங்க தாத்தன் ரெட்டமலை சீனிவாசனும், அயோத்திதாசப் பண்டிதரும் சொன்னத நான் பின்பற்றனுமா – வேணாமா? வரலாற்றில் “பறையர்” என்கிற இனம் எப்படி இருந்திச்சின்னே இன்னைக்கு நிறைய பறையர்களுக்கு தெரியாது. பறையர்களுக்கே தெரியாத போது ஒங்க தலித்துகளுக்கு எங்க தெரியபோவுது. அதுக்கு காரணம் வரலாற்றை ஆரம்பத்துல இருந்து படிக்காம, நுனிப்புல் மேய்ஞ்சிட்டு படிச்சா அது ஒரு சாதியாகத்தான் தெரியும். அது ஒரு சாதியில்ல, தமிழக தொல்குடி வரலாற்றில் மூத்த குடியினம் பறையர் சமூகம் தான். இத நான் சொன்னா சாமுவேலு பறையர் பேரவை வச்சிருக்கான், பறையர் குரல் பத்திரிக்கை நடத்துறான் அதனால தான் சொன்னான்னு சொல்லுவானுங்க. நீங்களும் கூட சொல்லுவீங்க. எம்பாட்டன் வள்ளுவன் சொல்லியிருக்கான். சித்தப்பன் தொல்காப்பியன் சொல்லியிருக்கான். அவனுங்க சொன்னத எல்லா பயலும் வரலாறு, இலக்கியம்னு இங்க படிக்கிறான். அத இந்த சாமுவேலு பறையன் சொன்னா சாதியா தெரியுதா? .
வரலாறு, இலக்கியம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னைக்கி நடைமுறையில் பறையர் என்பது ஒரு சாதி தானே?
நீ என்ன தம்பி திரும்ப திரும்ப இதையே சொல்ற. ஆயிரக்கணக்கான ஆண்டுகளா ஒரு சமூகம் எப்படி ஒரு அடையாளத்தை பாதுகாத்து வந்திருக்கும்? என்பத புரிஞ்சா தான் அது சாதியா இல்ல ஒரு சமூகமா இல்ல ஒரு இனமான்னு கண்டுபிடிக்க முடியும். அதுக்கு ஆதாரமா இருப்பது எதுன்னா அந்த சமூகம் செய்து வந்த தொழில், அதைச்சார்ந்த பண்பாடு, அதன் மீது அது கட்டியெழுப்பியிருக்கிற வரலாறு. அப்படி பார்த்தா இந்த தமிழ்நாட்டுல “பறையர்” தவிர்த்து வேறு எந்த இனத்தையும் சொல்ல முடியாது. மற்றவை எல்லாம் பறையர் என்கிற ஒரு இனத்துக்கு எதிரா உருவானது தான் இன்னைக்கு நம்ம கண்ணு முன்னாடி தெரியுற சாதிகள், பிராமணியம், அது இதுன்னு.
அப்படி இருக்கும்போது பறையர்கள ஏன் இன்னைக்கு தீண்டப்படாதவரா கருதனும்?
நீங்க சொல்லலையா தலித்துன்னு. அந்த மாதிரி வரலாறு தெரியாத பல பல பட்டறைங்க சொல்லுது. விவசாயத்தையும், மறை ஓதுவதையும் கொண்டிருந்த ஒரு சமூகத்தை எப்படி தீண்டப்படாதவனாக்க முடியும்? இந்த சமூகத்துல விவசாயம் செய்வதையும், மறை ஓதுவதையும் யார் செய்ய முடியும்னா எல்லா மக்களையும் நேசிக்கிற, சமத்துவமா நடத்துற, வேறுபாடு காட்டாம பழகுகிற குறிப்பா வரலாறு கட்டத்தெரிந்த அறிவு சமூகம் தான் செய்ய முடியும். இலேன்னா இந்த நாட்டுல, இந்த மண்ணுல திருவள்ளுவன் எப்படி மூத்தகுடி தலைவனா இருந்திருக்க முடியும். அவுனுக்கு எங்க இந்த தீண்டாமை இருந்திச்சு. அவுனுக்கு இல்லாத ஒரு கொடுமை எனக்கு ஏன் பணிக்கப்பட்டது. ஏன்னா நான் அநீதிய ஏத்து போகல, விவசாயத்தை தவிர வேற எதையும் உருவாக்கி யாரையும் அடிமைப்படுத்தல, சைன்ஸ் எங்கிட்ட இருந்திச்சு, வான சாஸ்திரத்துல நான் கெட்டிக்காரன், நாட்டு நடப்ப கணிக்கத் தெரிஞ்சவன், ஒரு சேதிய சொல்லத் தெரிஞ்சவன். இந்த குணம் மத்தவங்களுக்கு ஏற்றுப்போகனும்னா அவர்களும் என்னை மாதிரியே நடந்துக்கனும். அதுக்கு எந்த சமூகம் சாத்தியம் இல்லையோ அது என் தொழிலை, என் பிறப்பை, என் பண்பாட்டை அசிங்கப்படுத்தி என்னையும் அசிங்கப்படுத்துது. இதுக்காக வரலாற்றையே திரிக்கும் வேலையை செய்து நான் பூர்வகாலமா தீண்டப்படாதவனா சொல்வது நுனிப்புல் மேயிறவன் பேசறது. அந்த நுனிப்புல் வரலாறு நமக்கு வேண்டாம். உண்மையான வரலாற்றை பேசுவோம்.
Sam - 2அப்போ இன்னைக்கி இருக்கிற சாதிகள எப்படித்தான் ஒழிக்கிறது?
சாதிய பறையனாகிய நான் உருவாக்கல. எனக்கு எதிரா உருவாக்கப்பட்டது தான் சாதி. அந்த சாதியின் எல்லா விஷமத்தனங்களையும் பறையர்கள் ஏற்றுப்போகாத‌தால் அவர்கள் மீதே கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் போது எங்க பகுதியில தேவர்கள் எங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் பண்ணுவாங்க. அதுக்கு காரணம் நிலம் இல்ல, பொழைப்பு இல்ல, உழைப்பு ஒன்னு தான் மூலதனம். அதனால அவன சார்ந்து நான் வாழவேண்டியிருக்கு. இல்லேன்னா ரோடு போடற வேலைக்கு போக வேண்டியிருக்கு. அவன் மட்டுமா அடிக்கிறான். பள்ள‌னும் தான் சேர்ந்துக்குறான். இராஜபாளையத்துல 1985 -களில் மிகப்பெரிய அளவில் சாதிக்கொடுமைகள் நடந்தது. பல இடங்களில் வேலை செய்து பறையர்கள் அப்போது நிலம் வாங்கினார்கள். அது பல சாதிகாரப் பயலுகளுக்கு பொருக்கல. இதனால பல இடங்கள்ல சாதிக்கலவரம் நடந்திச்சு. 1992 -ல் தமிழ்நாடு பறையர் பேரவையை தொடங்கியதற்கு காரணமே சாதிக்கொடுமை தான்.
பறையர் பேரவையின் எழுச்சிக்கு சாதிக் கொடுமை காரணமா? அல்லது அம்பேத்கரின் நூற்றாண்டு காரணமா?
சொல்லப்போனா ரெண்டுமே இல்ல. அறிவு தான் காரணம். அறிவில் சிறந்த பறையன் ரெட்டமலை சீனிவாசன் காரணம். ஒன்னு தெரிஞ்சிக்கோங்க. அம்பேத்கருக்கு முன்பே திருவள்ளுவப் பறையன், கந்தசாமிப் பறையன், காத்தவராயப்பறையன், எம்..சி. ராஜா பறையன்னு பலர் முன்னோடியாக இருந்தாங்க என்பத மறந்திட்டு அம்பேத்கர்னு நுனிப்புல் மேயாதீங்க. அவர் மகாராஷ்டிராவுல பறையர் மாதிரி இருந்த ஒரு மஹார் சமூகத்தின் வெளிச்சமாக வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பறையன் அறிவாளி. அதனால தான் ரெட்டமலை சீனிவாசப் பறையர் “பறையன்” என்கிற பேர்ல ஒரு பத்திரிக்கை நடத்துனாரு. அதன் தொடர்ச்சியா பறையர் பேரவை சார்பில் “பறையர் குரல்” என்கிற பத்திரிக்கையையும் தொடங்கி நடத்தி வருகிறோம். (ஒங்களுக்கு அறிஞர் குணாவை தெரியுமா? என்று என்னிடம் கேட்டார். நான் தெரியும் என்றேன். அவருடைய நூல்களை கொஞ்சம் வாசிச்சிட்டு வாங்க என்றார். சரி என்றேன்).
தலித் மக்களுக்கு வேறு என்ன பணிகளை செய்து வருகிறீர்கள்?
பறையர் பேரவை பறையர்களுக்கான இயக்கம் மட்டுமல்ல. சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிற எல்லா மக்களுக்கும் உரியது. குறிப்பாக மலம் அள்ள‌க்கூடிய, பிணம் எரிக்கக் கூடிய பறையர், சக்கிலியர் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம். ஒரு சமூகத்த இழிவா பார்ர்க்குறதுக்கு இந்த மாதிரியான தொழிலை நிரந்தரமா திணித்து வருவதற்கு எதிராக இந்த போராட்டம். எல்லாத்தையும் விட ஒரு சமூகத்த அறிவார்ந்த சமூகமா வளர்த்தெடுக்கனும். அதற்கு தான் ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர் போன்றவர்களின் அறிவாயுதங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லனும். அதுக்காக பேரவை சார்பில் பல பயிற்சிகள், கருத்தரங்குகள் நடத்தி வருகிறோம்.
ஒரு முக்கியமான விஷ‌யத்த உங்களுக்கு சொல்லனும். ஒங்க மய்யத்துல தலித்துன்னு ஒரு கலை விழா நடத்துறீங்களே. அதுக்கு முன்னாடியே 80 -கள்ல எங்கூர்ல பறையர் விழா நடத்தியிருக்கிறோம். இன்னைக்கி அதத்தான் பறையர் கலை விழா என்று பறையர் பண்பாட்டு மீட்டுருவாக்கத்துக்காகவும், அறிவு நிரூபணத்துக்காகவும், மறை துலங்கலுக்காகவும் நடத்தி வருகிறோம். அத நீங்க வெளிநாட்டுக்கு காசாக்கிட்டீங்க.
வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அவுங்களுக்கு சொல்றது இருக்கட்டும். மொதல்ல எங்கள தலித்து தலித்துன்னு சொல்லி எங்க மூளைய காயடிக்கிறத நீங்க நிப்பாட்டுங்க. இருக்குற பறையனுங்க எல்லாரையும் திரட்டி தலித்துன்னு புராஜக்டு போடறத நிப்பாட்டி இருந்தீங்கன்னா தமிழ்நாட்டுல பறையர் இனம் ஒரு மாபெரும் வளர்ச்சிய கண்டிருக்கும். அந்த வளர்ச்சிய தடை பண்ணதுமில்லாம பறையனுங்கள புராஜக்டுக்கு காயடிச்சீட்டிங்க. இந்த வேலைய நீங்க மொதல்ல நிப்பாட்டுங்க. அமுங்கி போகக்கூடிய தெருப்புழுதிய எல்லாம் தலைவன்னு வளர்த்து விடாதீங்க. ஒங்க மய்யத்த பறையர் ஆதார மய்யம்னு பேர் மாத்துங்க. எல்லாம் அதுபாட்டுக்கு நடக்கும்.
Advertisements
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

நேர்காணல் : பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகம்

மதுரையின் மேற்கு கன்னத்தை முத்தமிடும் மலை முகடு. அதன் கழுத்தில் சறுக்கிவிழும் குட்லாடம்பட்டியின் கொடியருவி. ஒடிந்து கிடக்கும் சாரல் பசுமையில் அலங்கை பாடும் அந்த ஊர் – அலங்காநல்லுர். ஊரை ஏய்த்துக் களைப்பில் ஓய்வெடுக்கும் காரைக் கட்ட‌டங்கள், எர்ரம்பட்டிக் கலவரத்தில் எரிந்த. அடங்க மறுக்கும் சேரிகள். சேரிகளின் குறுக்குச் சந்துகளை விழுங்கிய நெரிசல் குடிசைகள். வெடித்துக் கிடக்கும் குட்டிச் சுவர்களின் ஒற்றை நிழலில் குடும்பமாக வாழும் அந்த குட்டை உருவம். பறை, பம்பை, உருமி, தவில், தமுக்கு என தோற்கருவிகளை வார்த்துக் கட்டும் தொல்முகன். பார்க்கப் பார்க்கப் பேசத் தூண்டும் மானுடவியலின் மண்முகம். அவர்தான் அலங்காநல்லுர் ஆறுமுகம்.
ஜல்லிக்கட்டில் மேட்டுப்பட்டி காளைகளை பறை முழுக்கிச் சீற வைக்கும் பறை இசைக்கலைஞன். தமிழக தலித் இயக்க அமைப்புகளுக்குப் பறையை பயிற்றுவிக்கும் பாரம்பரியப் பயிற்சியாளன். சில நேரங்களில் மக்களை மறந்து மாக்களை அசைபோடும் வாழ்வியல் அறிஞன். கலைஞனாக, பறை செய்யும் தொழிலாளியாக, எதுவுமே இல்லாத போது விவசாயக்கூலியாக. இப்படி தலித்துக்கே உரிய பன்முக அடையாளமும் கூட. சேரிகளைக் கடந்து உலகத்து வீதிகளில் பறை முழுங்க வேண்டும், பறைத் தொழில் புரிய வேண்டும் என முழுக்கமிடுகிறார் இந்த இருபத்தெட்டு வயது இளைஞர்.
பறையாட்டம் ஆடறதிலும், பறை செய்யறதிலும் உங்களுக்கு எப்படி நாட்டம் வந்திச்சு?
parai - 1நான் ரெண்டாங்கிளாசு படிக்கிறப்பவே ரொம்ப துருதுருன்னு இருப்பேன். வம்படிக்கி என்னமாச்சும் செஞ்சு பசங்கமேல கைய வெச்சிருவேன். கள்ள வூட்டு வாத்தியாரும் விட்டு வெளு வெளுன்னு வெளுத்திடுவாரு. பொறவு நானும் ரெண்டு நாளு தங்கிப் போவேன். அப்புறமேக்கு சண்டியர் மாதிரி என்னமாச்சும் செஞ்சு அங்கனயே மாட்டிக்குவேன். ஒரு நாளு வாத்தியாரு எம்மேல் சட்டய உருவிட்டு வெளுவெளுன்னு வெளுத்துட்டாரு. அப்போ எனக்கு ஆறு வயசு இருக்கும். தம்மாத்தண்டி இருப்பேன். அடி தாங்க முடியாம பொள்ளாச்சி ஓடி ஒரு கேரளாகாரு ஓட்டல்ல வேலை செஞ்சேன். ஒரு நாளைக்கு ரெண்டு ருவா சம்பளம். நாலு வருஷம் அங்கனயே வேல செஞ்சு, பொங்கலுக்கு ஊரு வர்ரயில எங்கண்ணன் மாத்திரம்தான் அலங்காநல்லூர்ல ட்ரம்மு செட்டு வச்சிருந்தாரு. நானும் திருசா முடிஞ்சி பொள்ளாச்சி போலாம்னு இருந்தப்ப, பக்கத்து ஊர்ல கேதம். சாவுக்கு ட்ரம்மு செட்டுக்கு கேட்டுவிட்ங்க. அப்ப சாவுக்குப் போவயில ஆள் கொறையவே, எங்கண்ணன் என்னிய கூப்புட்டுவுட்டாரு. மொதல்ல மொரக்கசு குலுக்கத்தான் சொல்லி கூப்புட்டாங்க. நான் சரின்டு போயிருந்தேன்.
எனக்கு தப்படிச்சியும் பழக்கமில்லை. நானும் ஒதுங்கி நின்னு சிரிக்கறத பாத்துட்டு எங்கண்ணன், வந்திருந்த அணா சுள்ளாங்கிட்ட ஒழக்கு சாராயத்த எனக்கு குடுக்கச் சொல்லி சாடை காட்டுனாரு. அப்பல்லாம் தப்படிக்கப் போனா சாப்பாடுக்கு கெடைக்காது. அவுகளும் கஞ்சி எதுவும் ஊத்த மாட்டாக. அதுக்கின்டே கேன்ல பட்ட சாராயத்த வச்சிக்கிறது. நானும் அடிக்கிற அடிக்கி மொதல்ல ஆட்டம் போட ஆரம்பிச்சேன். அதே சூட்ல ஒரு தப்ப வாங்கி கண்டமேனிக்கி அடிச்சேன். அன்னைக்கி அடிக்க ஆரம்பித்தவன் தான், இப்போ இருவத்தெட்டு வயசு எனக்கு. ரொம்ப வருசமா நானே பழகி கத்துக்கிட்டிருக்கேன். ஒரு முப்பது அடவுக்கு என்னலா இப்ப ஆட முடியும்னா பாத்துக்குவேன். இப்ப நானும் செட்டு வச்சிருக்கேன்.
எங்கூட வேலு, குமாருன்னு பத்துபேரு இருக்கோக‌. அவுகளும் செட்டு வச்சிருக்காங்க. எடையில மத்த‌ரம் ரெண்டு வருசம் விட்டிருச்சி. ஏன்னா, அப்பவே பதினாலு வயசு வர்ரயில எங்கூறு மேப்படி மூப்பனாரு பொண்ண கூட்டி கல்யாணம் முடிச்சேன். ரெண்டு புள்ளைங்க எனக்கு. சின்னவன் இப்பவே தப்பத்தான் தலைக்கு வச்சுக்குவான். அவனுக்கும் சிறுசிலே இதுகள நாட்டம் வந்திருக்சி. தப்பு கட்டறதிலும் எங்கூட என் சம்சாரி நல்லா கத்துக்கிடுச்சு. பத்து வருஷத்துக்கு முன்ன கூடி தப்பு கட்ற தொழிலையும் எங்கண்ணந்தான் பழக்கிக் குடுத்தாரு.
மதுரையில தலித்து கலை விழா பொறந்ததும் எங்க செட்ட மேடை ஏத்தி ஆட விட்டாங்க. மொதமொதல்ல காசு பணம் கூட குடுத்து ஒரு மதிப்பா ஆடுனதும் தலித்து கலைவிழாதான் அப்புறம் தெக்க நாகர்கோயிலு, மதுர, மெட்ராசு அங்க இங்கன்னு இயக்கத்துக்காரங்களுக்குப் பயிற்சி குடுத்துட்டு வர்ரயில பல பேரும் பயிற்சிக்கு கேட்டாங்க். தப்பு வேணும்னு ஆடரும் குடுப்பாங்க. ஒன்னு ரெண்டுன்னு செய்வேன். அப்ப முன்னூத்தம்பது ருவா வித்துச்சி. மாசத்துக்கு இத்தனன்னு இல்லன்னாலும் அதுக்குத் தக்கன பத்தஞ்சின்னு வரும். அதுக்கேத்தாப்புல நானும் என் சம்சாரியும் இத‌ தொழிலா செஞ்சிட்டிருக்கோம்.
இன்னைக்கு யாரு வேணும்னாலும் பறை செய்ய முடியுமா? நீங்க எப்படி பறை செய்றீங்க?
தப்பு – பறை எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். இத எல்லோரும் செய்ய முடியும். செய்யணும். அதுக்குத்தான் நாம‌ இருக்கோம். மொதல்ல செய்யும்போது கொஞ்சம் தோதுபடாதுதான். கத்துக்கிட்டா வந்துரும். மொதல்ல கட்டைய செஞ்சு வச்சுக்கணும். இப்ப புதுசா தப்பு வேணும்னு யாராச்சும் கேட்டாங்கன்ன வாடிப்பட்டிக்குப் போயி கட்டைக்கு சொல்லிட்டு வருவேன். கட்டை ஒண்ணு நூறு நூத்தம்பதுன்னு வரும். ஆசாரி ஆளுங்கதான் செய்வாங்க. கட்டைய செய்யச் சொல்லையில வேம்போட மரத்து வேருலதான் செய்யச் சொல்வோம். அதுவும் ரோட்டுமேல நிக்கற வேம்புன்னா இன்னும் தரம் கூடும். ஏன்னா ரோட்ல போற பஸ்சு, காரு, லாரி இதுகளோட‌ சத்தம், ஆரன் சத்தம் கேட்டு, கேட்டு ரோட்டடி மரத்துல சத்தம் ஏறியிருக்கும். அதுல தப்பு செஞ்சு அடிச்சா. அடி எட்டு பட்டிக்கும் தெறிக்கும். எனக்கு பயிற்சிக்கி தப்பு இதுலதான் போட்டிருக்கேன்.
வாடிப்பட்டியில் இருந்து கட்டய கொண்டு வந்து மாட்டுச்சாணி பூசி காயப் போடுவோம். சாணத்தைப் பூசி காயப் போட்டாத்தான் கட்ட வெறைக்கும். பகல் முழுசும் காஞ்சதும் எடுத்து துணி வச்சி தொடைக்கணும். கட்டைய தொடைக்கையில சந்தனம் மேனிக்கு கட்டை மணக்கும்.
parai - 2அப்புறம் தொலிய (தோல்) தயார் பண்ணிக்கணும். தப்பு செய்யறதுக்குன்னே தொலி தனி. அதுக்கின்டே எரும கன்டு வாங்கணும். பால் மறந்த கண்ட வாங்கி கறிய வித்தாச்சும் இல்லேன்னா கருவாடு தச்சி. தொலிய மாறுகாலு மாறுகையின்னு ஆணி அரஞ்சி போட்டுருவோம். பகல்ல காஞ்சதும் தொலிய சூடு தேங்குன மேனிக்கு அப்புடியே சுருட்டி வச்சி, வெள்ளனே எடுத்து முடி இருக்குற பக்கமா காயப்போடுவோம். அப்பல்லாம் சாம்பல் போட்டு ஊர வச்சி செரட்டைய தேச்சி முடி எடுப்போம். இப்ப கத்தி வச்சயே எடுத்துருவோம். அதுன்டா வாடை வீசும். கத்தி வச்சி எடுக்கறதிலியும் கோளாறு இருக்காது. அப்புறமேக்கு காஞ்ச தொலிய விரிச்சிப் போட்டு, கட்டய வெச்சி அளவெடுத்து அறுக்கணும். அப்படி அறுத்தா கன்டுக்கு ரெண்டு முணுன்னு வரும். அறுத்த தொலிய தண்ணியில ஒரு நாலு மணி நேரத்துக்கு ஊர வைக்கணும்.
தொலி மத்தரம் தரமா இருக்கணும். எரும கன்ட வித்து பசுங்கன்டுன்னா, பெருசுன்னா அடி கனக்காது. தொலிய பொத்தி இழுக்கையில அறுந்து வந்துரும். அடியும் சலசலன்னு விழும். சொல்லு பேசாது. இல்லே கூடி காய வக்கையில தெறிச்சிடும். பால் மறந்த கன்னுன்னா தோதோ இருக்கும் அதுவும் கழுத்துப் பக்கத்து தொலிய பொத்துனா இறுக்கம் இன்னும் நிக்கும். ஏன்ன. கழுத்து மடிப்பு அசைஞ்சு மடிஞ்சதுல தொலிக்கு, இழுவைக்கு வேலை இருக்காது.
இப்ப ஏத்த மாதிரி எரும கன்டு கெடைக்காது. அப்ப எங்க ஊர் பக்கத்துல பொதும்பு, அம்மலத்தடி, குலமங்களம் இங்கன்னு ஊர்த்தோட்டி வேல பாக்குவறங்க்கிட்ட பத்து நுறுன்னு அட்வான்சு குடுத்து வச்சிருப்போம். நம்ம ஊர்ப் ப‌க்கம் ஊர்த்தோட்டி வேல பாக்குறவங்களுக்குத்தான் செத்த மாடு அதுன்டு சொந்தம். அந்த கன்டு தொலியே முன்னுறு முன்னுத்தம்பதுன்னு வாங்குவோம். டவுனு பக்கம்னா கறி போடற எடத்துல தொலி கெடைக்கும். மதுரையில மேலவாசல், ஒத்தப்பட்டி, வண்டிக்காரு மண்டகப்படி இங்கன்னு கெடைக்கும், தொலி வாங்கையில, கன்ட வாங்கையில இந்த நுணுக்கத்த பாத்துத்தான் தொலி வாங்கணும். இல்லன்னா தப்புக்கு பேரு கெட்டுரும்.
அடுத்தாப்புல பசை கிண்டணும். கட்டையும், தொலியும் தயார் பண்ணி வைக்கையில புளிய முத்த (புளியங்கொட்டை) தண்ணியில ஊரப் போடணும். நல்ல ஊரன முத்த அள்ளி, அம்மியில வச்சி அரைச்சி ச‌ன்னமா வந்த‌தும் எடுத்து தண்ணிய விட்டு அனல்ல அஞ்சு நிமிசம் வச்சிருந்து கிண்டணும். நல்ல கிண்டனதும் பச களி மாதிரி வரும், அத எடுத்து வச்சுக்கணும். பசையோட எதுவும் சேத்துக்க‌த் தேவையில்லை.
parai - 3இப்ப தப்ப மூக்கணும். இப்ப நம்மகிட்ட மாட்டு சாணத்துல காய வச்ச கட்டயும் இருக்கு. நாலு மணி நேரத்துக்கு தண்ணியில ஊர்ன தொலியும் இருக்கு. இது ரெண்டையும் வச்சிகிட்டு காய்ச்சின புளிய முத்து பசைய கட்டயில பூசணும். ஊர்ன தொலிய, கட்டைக்கு ஏத்தாப்புல வட்டமா அறுத்து, இழுத்து மூட்டுறதுக்கு தோதா கயிற மாட்டி வச்சுக்கணும். இழுவ நிக்குறதுக்கு ஏத்தாப்புல ஒரு இரும்பு வளையத்த கட்டைக்கு நடுவுல வக்கிறமாரி சிறுசா செஞ்சு வச்சிக்கணும். பச பூசன கட்டய தெலிக்கு நடுவுல வச்சி தொலிய நாலாப்பொறமும் இழுத்துக் கட்டணும். இழுக்கையில பதமா இழுக்கணும். இல்லேன்னா தொலி அந்துடும். ஒரு அரைமணி நேரஞ்சென்டு மறுவடியும் இழுக்கணும். அப்பத்தான் இழுவ பலமா நிக்கும். இப்ப கட்டுன தப்ப அப்புடியே வச்சிருந்து, வெள்ளென எடுத்து வெயில்ல போடணும். பகல் முழுக்கே வெயில் கனத்துச்சின்னா போதும், சாந்தரமா எடுத்து கயிற அறுத்து வளையத்த வெளிய எடுத்துடணும். தொலிய்யும் கட்டைக்கு ஒட்டுன மேனிக்கு அறுத்தெடுக்கணும். இப்ப சரியான தப்பு ரெடி. இத மதிப்பா ஒரு பை தச்சு அதுலதான் தப்ப குடுக்கணும். நெர‌மா வித்தா அஞ்சு நுறுக்கு குடுக்கலாம். இப்புடித்தான் நான் செஞசிட்டு வர்ரேன். மூலனுரு, தஞ்சாவூரு, திருவண்ணாமலை அப்படின்னு அங்கிங்க பல பேரு பலமாரி செய்யறாங்க. அதுல ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல. அங்கித்திய மொற வேற மாறியும் இருக்கும்.
இப்பத்தான் பிளாஸ்டிக் தோலு வந்திருச்சே. கட்டையில வளையத்த மாட்டி போல்ட் போட்டு டைட் பண்ணிக்கலாமே. நீங்க இன்னும் ஆதி காலத்து கதைய சொல்லிக்கிட்டிருக்கீங்க?
ஏங்க, என்னங்க பேசுறீங்க. நான் என் விசயத்த பேசிக்கிட்ருக்கேன், இது இருக்குறதுங்க. இது என்னா சபரிமலை அய்யப்பனுக்கு சிங்கு செஞ்சி தட்றதா. நெசமாத்தான் சொல்றேன். இந்த வருசம் ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லுருக்கு வாங்க. எந்தப்ப காச்சி அடிச்சா மேட்டுப்பட்டி காளையும், சும்மா நிக்குற சொன்டி காளையும் சீறிப்பாய்றத கண்ணால பார்க்கலாம்.ஏந்தெரியுமா? நான் அடிக்கிற தப்பு தொலி எரும கன்டுது. காளைக்கு ஆகாது. கோவம் அப்புடியே பொத்துக்கிட்டு வரும். கொம்ப சொழட்டும். முழிய அப்புடி இப்புடின்னு பிதுக்கும். வால‌ விசுறும். தொடய உருட்டும். இம்புட்டு வேலய என் தப்பு செய்ய வைக்கும்ம். எங்க உன் பெளாஸ்டிக்கு தப்பு, இந்த வித்தய செய்யச் சொல்லு பாப்பம். என் ஒத்த காத அறுத்துக்கிறன். ஏங்க, பெளாஸ்டிக்கு வந்தா அதயல்லாம் உள் விடக்கூடாதுங்க. நாங்களே அத எதுப்போம். ஒடைப்போம்.
ஆனா, என் அடி கேட்டு எரு மாடுக வரும். அது ஒன்னும் செய்யாது. கையில இருக்கற தப்ப பாக்கையில அதோட புள்ளன்னு நெனச்சுக்கும். மோந்து பாக்கும். அப்படியே புடிச்சு ஒரு முத்தி விடுவேன்.
அப்படின்னா வேலயில்லாத நம்ம சனங்க, இளவட்டங்க பறை செய்யத ஒரு தொழிலா செய்ய முடியுமா?
 செய்ய முடியுங்க. அதுக்குத்தான் இம்புட்டு நேரம் பேசிக்கிட்டிருக்கேன். எங்கூர்ல இப்புட்டு சுள்ளான்ல இருந்து தப்பு செய்யத் தெரியும். இன்னைக்கி இயக்கத்தில, பெரிய பெரிய நிறுவனங்கள்ல காலேஜ்கள்ல நெறய‌ பேரு கத்துக்க வர்ராங்க. அன்னைக்கி இத தொட்டா, பாத்தா தீட்டுன்னு ஒதுங்கின‌வங்களும் இத கத்துக்குறாங்க. அப்ப தப்புக்கு இன்னைக்கி ஏத்தம் இருக்குன்னு தெரியுது. தப்புக்கு ஏத்தம் இருக்குன்னா, அத செய்யறவங்களுக்கும் ஒரு மவுசு கூடும்தானே. அத நாம புரிஞ்சிக்கணும். இப்ப நாலா பொறமும் தலித்து கலைவிழா வந்துகிட்டிருக்கு. தெனந்தெனம் நிகழ்ச்சி வருது, அதுக்கேத்தாப்புல தப்பு செஞ்சாத்த்தான் இம்புட்டு வேலயும் செய்ய முடியும், நாலா மூலைக்கும் செய்யச் சொல்லணும். படிச்சிட்டு சும்மா திரிற நம்ம இளவட்டத்துங்களுக்கும் கத்துக் குடுக்கணும். இதுக்குத்தான் நம்ம நிறுவனங்க ஒதவணும். ஒதவணும்ணா பணம் காசு கேக்குறதில்லீங்க. அய்யய்யே, தப்பா நெனச்சுக்காதீங்க.
 இப்ப எனக்குத் தொழில் தெரியும். நானும் இத ஒரு மில்லுன்னு வச்சி, பத்து பேரு வேல பாத்து, தெனந்தெனம் தப்பு செஞ்சு, நாலா பக்கத்துக்கும் குடுக்கணும்னுதான் இருக்கேன். இதுக்கு பேங்குல லோனு தேவப்படுது. கடங்கேட்டா குடுக்க மாட்டேங்கறாங்க. இந்த நேரத்துலதான் நம்ம நிறுவனங்க ஒதவி செய்யுணும். பேங்குல எப்புடி லோனு வாங்குறது? யாருகிட்ட கேக்குறது? நம்ம சனத்துக்கு மானியம் இருக்குன்னு சொல்றாங்க. அது கெடக்குமா? இப்புடிங்கிற நெசத்த வெசாரிச்சு, அதுக்கு வேண்டியத செஞ்சு குடுக்கணும்னு கேட்டுக்குறன்.       நான் செஞ்ச தப்பு, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா இங்ககூட போயிருக்கு. அந்தளவுக்கு பேரு இருக்கு. ஆனா உள்ளுர்ல லோனு குடுக்க மாட்டேங்கிறான். அப்ப எங்களுக்கு ஒதவனுமா இல்லயா?
 உங்களுக்கு வேண்டிய நல்லத, கெட்டத செய்யறதுக்குன்னு சங்கம் எதுவும் இல்லயா?
 parai - 4இருக்கே. தப்பாட்ட கலைஞர் சங்கம்னு இருக்கோம். மதுர மாவட்டத்துல பன்னெண்டு ஒன்றியத்துல இருக்கு. நம்ம தமிழ் நாட்டுக்கே மொதமொல்ல தப்பு அடிக்கறிவங்களா சேர்ந்து சங்கம் வச்சது நாங்கதான். எங்களுக்குன்னு கார்டு இருக்கு. மொத மாதிரியெல்லாம் இப்ப எங்கள பார்க்க முடியாது. நெறய மாறிட்டம். சாவுக்கு கண்டதுக்குன்னு போறதில்லை. ஆட்டம் நடக்கையில யாரும் போதையில இருக்க மாட்டோம், சம்பளமும் கூட்டித்தான் வச்சிருக்கோம். அங்கங்க தப்படிக்க போனாலும் ஒரு நிகழ்ச்சிக்குன்னு அம்பது ரூவா மேனிக்கு சங்கத்துல போட்டுருவோம். மொதல்லாம் தப்பு எடுத்துகிட்டு பஸ்ல போவ முடியாது. ஏத்த மாட்டாங்க. தொனைக்கின்னே பெரிய ட்ரம்ம எடுத்துட்டுப் போணும். அப்பத்தான் பஸ்ல ஏத்துவாங்க. இப்ப சங்கத்துக் கார்ட காட்டி ஏறிடுவோம். இல்லேன்ன கரைச்சல் பண்ணுவோம். எங்க சங்கமும் இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா முன்னேறி வருது.
எடுக்கிற இந்த முயற்சி வலுவா நிக்கணும்னா, இப்ப எந்த மாதிரி நடவடிக்கையில ஈடுபடணும்?
 சரியா கேட்டீங்க. இப்ப எங்களுக்கு தோலுக்குப் பஞ்சம் வந்துகிட்டிருக்கு. மொதய்ய மாதிரி கெடைக்க மாட்டேங்குது. நம்ம ஊரு எரும கன்டுகள கேரளாவுக்கு கொண்டு போறாங்க. நான் கேரளாகாரு ஓட்டல்ல வேல பாத்த‌தால சொல்றன். எருமகண்டு தலையப் பாத்தாத்தான் அவேன் கறிய வாஙகுவான். அதுக்கின்டே இங்கனயேயிருந்து எரும மாடுக அடிமாடா தெனந்தெனம் லாரியில் கொண்டு போறான். மொதல்ல இத தடுக்கணும். உள்ளுர்ல வித்துகிட்டுதான் கொண்டு போனும்னு ஒரு பேச்சு வச்சுக்கணும். இல்லேன்னா இங்காரு கேரளா போயி தொலி வாங்குறது.
 அப்புறமேக்கு தப்பு செய்றத நூறு ருவாய்க்கும், எரநூறு ருவாய்க்கும் செய்யச் சொல்லுவாங்க. அதுக்கு ஒத்துகக்கூடாது. இப்ப நான் ஒரு தப்ப அஞ்சு நூறுக்கு குடுக்குறேன். தப்பு ஒன்னும் தவுலுக்கு கொறைஞ்சதில்ல. அப்படியே வெலய கொறச்சி செஞ்சா தப்பு சத்தம் நல்லாயிருக்காது தப்பு மேல உள்ள நாட்ட‌ம் போயிடும். இயக்கத்துக்காரங்க அதுக்கு இதுக்குன்னு கூப்புட்டு, ஆட விட்டுட்டு பணம் கொடுக்க மாட்டேங்கிறாங்க. இந்த மாதிரி செஞ்சா மனசுக்கு ரொம் சங்கடமாக இருக்கு. அவேனும் அதத்தான் செய்யறான். அதனால் அதல்லாம் இல்லாம பாத்துக்கணும்.
 இப்ப சிப்காட்டு சிறு தொழில் மாதிரியே எங்களுக்கும் லோனு குடுத்து ஒரு தொழிலா ஏத்துக்க்ணும். இத யாரெல்லாம் தொழிலா செய்யறாங்களோ அவுங்கள உசுப்பி விடணும். அதுக்கு நம்ம இயக்கங்க, அமைப்புங்க, நிறுவனங்கன்னு உதவி செய்யணும். எங்களுக்குன்னு சங்கம் இருக்கச்சே நல்லத கெட்டத பேசித் தீத்துக்கிறோம். இந்து கோயிலுக்குன்னு, ஊர்வலத்துக்குன்னு (ஆர்.எஸ்எஸ்.,இந்து முன்னணி) நிகழ்ச்சிக்கி கூப்பிட்டா போறதில்லைன்னு முடிவெடுத்துருக்கோம். அந்த மாதிரி நாலாபொறமும் சங்கம் வரணும். இப்ப எங்க சங்கத்தையும் அரசாங்கத்தோட வாரியத்துல பதிவு பண்றதுக்கு வேண்டிய நடவடிக்கையை செஞ்சு வர்ரோம். இதுல நமக்கு வேண்டியது கெடைக்கும்னு சொல்றாங்க. அதையும் பாப்பன்னு இருக்கோம்.
 நான் சிறுசா இருக்கைய எதச் செஞ்சாலும் தப்பா செய்யறேன்னு வைவாக. இப்ப வெறும் தப்பாத்தான் செஞ்சுகிட்டிருக்கேன். இதான் சரிங்கறாங்க. காது குடுத்து கேக்க எதமா இருக்கு. அதனால பூரா பேரும் தப்பு செய்யணும்னு கேட்டுக்கிறேன்.
நன்றி : தலித் முரசு 2003 அக்டோபர் இதழுக்காக பறைக்கலைஞர் அலங்காநல்லூர் ஆறுமுகத்துடன் ஒர் நேர்காணல்
Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

ஆசிரியர் பணியிடங்களில் தலித் இடஒதுக்கீட்டை மறைக்கும் “வெயிட்டேஜ்” அரசியல்

reservation - 1ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் பொருளாதார அரசியல் வரலாற்றில் இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பான பின்னணியம் உண்டு. அவர்களுக்கான வாய்ப்பு என்ற நோக்கத்திலேயே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இதனை முன்மொழிந்து, பத்தாண்டுக்கு ஒருமுறை நீட்டித்தும் வருகிறது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் நடப்பு சமூக – அரசியல் போக்கின் திசை மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், தலித்துகள் உள்ளிட்ட எவருடடைய ஒதுக்கீட்டின் சாதக – பாதக அம்சங்களும் இது வரை மறு ஆய்வு செய்யப்படாதது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த இட ஒதுக்கீட்டு முறை நீடிக்க வேண்டுமா என்கிற கேள்வியும் தலித் சிந்தனையாளர் மத்தியில் தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. காரணம் இட ஒதுக்கீடு உண்மையிலேயே பாதிக்கப்படுகின்ற தலித் மக்கள் மீதான சமகால ஒடுக்குமுறைகளை கவனத்தில் கொள்ளாமல், எண்ணிக்கைப் பெரும்பாண்மைவாதம் மற்றும் அதிகாரம் சார்ந்த அனைத்து சாதிகளுக்கும் என்கிற நடைமுறையில் தீவிரமாகி, அதிகாரம‌ற்றவர்களுக்கு அதிகாரம், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக நீதி என்று அரசியல் அமைப்புச் சட்டம் வழிகாட்டிய இட ஒதுக்கீட்டுத் தத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக காலாவதியாகி வருகிறது.
Reservation - 2குறிப்பாக, தமிழ்நாட்டில் பிராமணர்களை எதிராக வைத்து பிராமணர் அல்லாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்திய திராவிட இயக்கங்களும் அது கொண்டு வந்த வகுப்புவாரி ஒதுக்கீடுகளும், சாதிவாரி கணக்கெடுப்பு முழக்கங்களும் தான் காரணம் என்பது கடந்த காலங்களில் மக்கள் மனங்களில் எளிமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தலித்துகள் மீது நேரடியாக நிகழ்த்தும் ஒடுக்குமுறைகளை முற்றிலும் மறைத்து, அதிகாரம‌ற்ற – வாய்ப்பு மறுக்கப்பட்ட தலித்துகளைப் போலவே சமூக, பொருளாதார அதிகாரங்களில் வளர்ச்சியடைந்த தலித் அல்லாத சாதிகளுக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தியது. ஏற்கனவே பெற்றிருக்கும் சாதிய அதிகாரங்களோடு அரசியல் கட்சிகளின் வழியாக இன்றைய நவீன அரசு ஈட்டித்தரும் இட ஒதுக்கீட்டு அதிகாரங்களும் சேர்ந்து தொகுப்புச் சாதி அதிகாரம் கொண்ட பெரும்பாண்மைவாத சமுதாயத்தை மெல்லக் கட்டியெழுப்ப சாதகமாகியும் வருகிறது. 2012 -ல் “சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை” முறையை தீவிரப்படுத்த யாரெல்லாம் முயன்றார்களோ அவர்களின் முயற்சியை கவனத்தில் கொண்டால் இந்த உண்மையின் பின்புலம் ஆழப்புலப்படும்.
 எனவே தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தில் “பிராமணர் – பிராமணர் அல்லாதோர்” என்கிற எதிர்வைக் கையாளாமல் “தீண்டப்படுவோர் – தீண்டப்படாதோர்” என்கிற கருத்து அணுகுமுறையைக் கையாள்கிறார். அது இன்றைக்கு நடைமுறையில் கொஞ்சமாவது பின்பற்றப்படுகிறதா என்பது தான் இப்போதைய ஆசிரியர் தகுதித் தேர்வு முறையின் விவாதம்.
 சட்ட‌த்தின் ஆட்சி என்கிற வகையில் தீண்டப்படாதோருக்கு ஆங்காங்கே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தாலும், வளர்ந்து வரும் இன்றைய நவீன அரசின் இட ஒதுக்கீட்டு அணுகுமுறைகளப் பார்க்கும்போது எண்ணிக்கையில் அதிகம் கொண்ட பெரும்பாண்மை சாதிகளுக்கே இட ஒதுக்கீடு சாதகமாகி வருகிறதோ என்கிற ஐயம் நடப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் தென்படுகிறது. ஒரு வகையில் வெயிட்டேஜ் என சொல்லப்படும் தகுதி காண் மதிப்பெண் முறைகளை மட்டுமே முன்னிறுத்தி ஆசிரியர்களுடன், இன்றைய‌ திராவிடக் கட்சிகளும் சேர்ந்து தனது அரசியல் ஆதாயத்துக்காக குரல் எழுப்பியதன் விளைவாக‌ உயர்நீதி மன்றம் ஓர் இடைக்காலத் தடையை வழங்கியிருக்கிறது. ஆனால் நிரந்தரமாகவே ஆசிரியர் தகுதித் தேர்வு முறையை தடை செய்து அதனை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை தங்களது கோரிக்கைகளில் அக்கட்சிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொண்டன.
 Reservation - 3இது வரையிலும் ‘அறிவிக்கை’ (Notification) எதுவும் வெளியிடாமல் இரண்டு முறை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகளை எதிர்த்து நீதிமன்றங்களை அணுகிய பிறகு இப்போது மூன்றாவது முறையாக நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கு 2014 -ல்’அறிவிக்கை’ வெளியிடப்பட்ட பின்னரே இந்த விவாதம் இப்போது மேலோங்கி வருகிறது. பொதுவாக ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க 69 % இட ஒதுக்கீடு சாதிகளுக்கு ஏற்றார்போல நியமிக்கப்படுவதோடு ஒதுக்கீடு முடிந்து விடுவதாக அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் மீதம் உள்ள பொதுப் பிரிவில் 31% எந்த அடிப்படையில் ஒதுக்கீடுகள் பின்பற்றப்படுகின்றன அல்லது பின்பற்றப்பட வேண்டும் என்பது தான் கேள்வி.
 பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
பட்டதாரி ஆசிரியர் மொத்தம் 10,900 பொதுப்பிரிவு 3000
பொதுப்பிரிவில் பி.வ – 1866 – (62.2%) – மி.பி.வ – 753 – (25.10%) – பி.வ. இஸ்லாமியர் – 9 – (0.3%) – இதர. வ. 97 – (3. 23%) – எஸ்.சி – 254 – (8.47%) எஸ்.சி அருந்ததியர் – 21 – (0.7%) எஸ்.டி – 1 – (0.03%)
 இடைநிலை ஆசிரியர் மொத்தம் 830 பொதுப்பிரிவு 257
பொதுப்பிரிவில் பி.வ – 169 – (66%) – மி.பி.வ – 81 – (31%) – பி.வ. இஸ்லாமியர் – (0%) – இதர. வ. 7 – (3%) – எஸ்.சி – (0%) எஸ்.சி அருந்ததியர் – (0%) எஸ்.டி – (0%)
 இட ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவு என்பது இதர சாதிகளுக்கு என வரையறை செய்யப்பட்டது. தகுதித் தேர்வில் வெறும் 3 % தேர்ச்சியடைந்த உயர் சாதியினர் தான் இதர சாதிகள். ஆனால் வேலை வாய்ப்பு பட்டியலில் அவர்கள் யார் என்றால் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வுப்பட்டியல் கூறுகிறது. அதாவது ஆசிரியர் தகுதி தேர்வு -2 -ன் படி 10,900 மொத்த பட்டதாரி ஆசிரியர்களில் 3000 பேர் பொதுப் பிரிவில் வருகின்றனர். இதில் எஸ்.சி 8.47 %, எஸ்.சி அருந்ததியர் 0.7 % தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள‌னர். அதே போல 830 இடைநிலை ஆசிரியர்களில் 257 பேர் பொதுப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள‌னர். இதர சாதிகளுக்கு என சொல்லப்படும் 31 % பொதுப்பிரிவில் வெறும் 3 % தான் உயர் சாதியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 66 % பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், 81 % மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கூட எஸ். சி / எஸ். சி அருந்ததியர் இல்லை. அதே சமயம் இதர சாதிகள் என சொல்லப்படும் உயர் சாதியினர் கூட எவரும் இல்லை. அப்படியானால் பொதுப்பிரிவு என்கிற ஒதுக்கீடு உண்மையிலே யாருக்கு பயனளிக்கிறது?
 இதற்கு சொல்லப்படும் பிரதானக் காரணம் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு எஸ்.சி யாரும் மெரிட்டில் வருவதில்லை என்கின்ற‌னர். மெரிட்டில் 18 % எஸ். சி வர முடிவதில்லை என்பது கொஞ்சமும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற‌ ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.சி மாணவர்களை பின்னடைவு காலிப்பணியிடங்களில் (Backlog Vacancies) கொண்டு போய் நிரப்பி விடுகின்றனர். பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பின்பற்றும் சிறப்புச் சேர்க்கை (Special Drive) நடைமுறையையோ அல்லது மாநில வேலை வாய்ப்பின் பதிவு மூப்பு முறையையோ (Seniority) பின்பற்றியிருந்தால் மெரிட்டில் ஆசிரியர் தகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். சி யை கொண்டு போய் அங்கு நிரப்ப வேண்டிய அவசியமில்லை. தனியாகவே தேர்ந்தெடுக்க வழி வகைகள் இருக்கின்றன. தேவைப்படும் மொத்த ஆசிரியர் வேலை வாய்ப்புகளோடு ஒப்பிடும்போது 23 % எஸ். சி -க்கள் பதிவு செய்து மூப்பு அடிப்படையில் வேலைக்காக காத்திருக்கின்றனர். அதே சமயம் கடந்த 2012 -ல் மட்டும் ஆசிரியர் பணிக்கு 47 % பின்னடைவு காலிப்பணியிடம் எஸ்.சி -க்கு நிலுவையில் இருக்கிறது. பழங்குடியினர் அதிகம் உள்ள மலைப்பகுதிகளில் இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
இவற்றுக்கும் அப்பால் தலித் மற்றும் பழங்குடி ஆசிரிய மாணவர்களை முற்றிலும் வடிகட்ட வெயிட்டேஜ் (Weightage) மதிப்பெண் முறைகளும், எல்லோருக்கும் சமமாக வழங்கப்படும் 5 % மதிப்பெண் தளர்வும் (relaxation) தலித் இட ஒதுக்கீட்டு தத்துவத்தின் நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கிற‌து. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் பணிக்கென்றே படித்துக் காத்திருக்கும் ஒரு தலைமுறையையே பணிக்கு வர‌ விடாமல் செய்து விடுகிறது. ஏன் இந்த இட ஒதுக்கீட்டு ஏற்றத்தாழ்வு நிலை எஸ்.சி – எஸ்.டி -க்கு மட்டும் காலம் காலமாக நீடிக்கிறது? இத்தகைய‌ சூழலில் இப்படியொரு ஆசிரியர் தேர்வு முறையை திடீரென யார் உள்ளே புகுத்தியது? இந்த முறை இனி தமிழ்நாடு பொதுப்பணித் தேர்விலோ அல்லது தமிழ்நாடு வேலைவாய்ப்பு முறையிலோ புகுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என மூன்று வாரங்களாகப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப்போராட்டத்தில் போராடிக் கொண்டிருக்கின்றவர்களில் 60 % தலித் பட்டதாரிகள். நீதிமன்ற விவாதங்களைப்பார்த்தால் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட 5% மதிப்பெண் தளர்வும் நீக்கலாம் என்கிற வகையில் அரசு வழக்கறிஞர் வாதிடுகிறார்.

1. முதலாவது ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்கிற பணிக்காக +2 முதல்  DTEd, BEd, என ஒவ்வொரு படிப்பிலும் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு TET சொல்லப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு முறை தேவையா? என்பதை சிந்திக்க வேண்டும். மருத்துவம், ஆட்சிப்பணி படித்த ஒருவருக்கு இது போன்ற தேர்வு முறையை புகுத்தி அதற்கு நீ தகுதியானவர்தானா என கண்டறிதல் இல்லாதபோது ஏன் ஆசிரியர் பணிக்கு மட்டும் அதற்காக படித்த ஒருவரை நீ தகுதியானவர்தானா என சோதித்தறிய வேண்டும்?

2. சரி அப்படியே சோதித்தறிவது ஒருவகை எண்ணிக்கை வடிகட்டல் என்று வைத்துக் கொண்டாலும் அதில் ஏன் அரசியல் அமைப்புச்சட்டங்கள் துறைவாரியாக வழிவகுக்கும் அறிவிக்கைகள், வழிகாட்டுதல்கள், இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படுவதில்லை. பின்பற்றத்தேவை இல்லை என விதிகள் ஏதாவது உள்ள‌னவா?

3. சூழல் சார்ந்து ஒரு வகை வடிகட்டல் முறையை ஆசிரியர் தேர்வு வாரியமே முடிவெடுக்குமானால் மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர், எஸ்.சி/எஸ்.டி, எஸ்.சி அருந்ததியர், இஸ்லாமியர், மொழிச்சிறுபாண்மையினர் என்பவரை இந்த வடிகட்டல் முறை புறக்கணிக்கிறதா? புறக்கணிக்கவில்லை என்றால் ஒவ்வொருவரையும் தகுதிப்படுத்த சிறப்புத்தன்மை சார்ந்த இடஒதுக்கீட்டு முறைகள் விண்ணப்பம் கோரல், பணம் செலுத்துதல், கட்டணமுறை, மதிப்பெண் அளவீடு போன்றவற்றில்  இருக்கும்போது, ஆசிரியர் தேர்வுமுறைக்கு மட்டும் எப்படி அனைவருக்கும் பொதுவான – சமமான அளவுகோலை (5%) நிர்ப்பந்திக்க முடியும்? அப்படியானால் யாரை வடிகட்டுவது தேர்வு வாரியத்தின் நோக்கம்?

4. ஒருவரை அரசு பணிக்குத் தேர்வு செய்வதற்காக அரசால் கொண்டு வரப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பதிவு மூப்பு மற்றும் பணி மூப்பு முறையைப் பின்பற்றி காத்திருப்பவரை என்ன செய்வது? அல்லது ஆசிரியர்களை தேர்வு செய்வதில் இனி வேலைவாய்ப்பு அலுவலகங்களின் வேலை என்ன?

5. பொதுப்பிரிவு முறையில் ஆசிரியரைத் தேர்வு செய்ய என்ன வழிவகைகள் பின்பற்றப்படுகின்றன. பொதுப்பிரிவு என்பது இட ஒதுக்கீட்டில் பொருந்துமா? திடீரென ஒரு குறிப்பிட்ட சாதியினர், சமூகத்தினர் அதில் பெரும் எண்ணிக்கையில் எப்படி இடம்பெற முடியும்? இந்த தேர்வுமுறையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் எப்படி எண்ணிக்கையில் அதிகமாக தேர்ச்சிபெற முடியும்?  

இந்த கேள்விகளை “கல்வியை இலவசமாக்கு” என நூறாண்டுக்கு முன்பே பண்டிதர் அயோத்திதாஸரால் முழங்கப்பட்டுவிட்ட ஒரு கருத்தை வெற்று முழக்கத்துக்காக கையில் எடுத்து, வெறும் மாநாடுகளாக வாய்ப்பந்தல் போடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கல்விஉரிமை மாநாட்டில் பேசியிருக்க வேண்டும். வெயிட்டேஜுக்காக நாடகமாடும் திராவிடக்கட்சிகளை நிர்ப்பந்தித்திருக்க வேண்டும். அப்படி ஒன்று நிகழாது என்பது தலித்துகள் அறிந்த ஒன்றுதான்.

Ambed தலித் அர‌சியலில் இருந்து தடம் புரண்டு விட்ட தலித் கட்சிகளும், அதன் இயக்கங்களும் இப்படியான தலித் மாணவர்களின் – ஆசிரியர்களின் – கல்வி உரிமைகளின் அடிப்படை பிரச்சனைகளை கூட கையிலெடுத்துப் போராட முடியாத திராவிட பொதுப் பக்திப் பரவசத்தில் மூழ்கித் திளைப்பது அருவறுப்பான அரசியலாக இருந்தாலும், அரசாணை 44 -ஐ நடைமுறைப்படுத்த வேண்டும், இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மறுக்கின்ற துறைகளுக்குரிய நிதியை நிறுத்த வேண்டும், இட ஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும், தனியார் துறைகளில் இடஒதுக்கீடு வேண்டும் என போராடி வரும் தலித்துக‌ளின் போராட்டங்கள் ஒரு புறம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும் இத்தகைய நடைமுறை நவீன அரசு நடைமுறைப்படுத்தும் ஒரு வகையான தீண்டாமையின் சமூகப்பாகுபாடு, அதனை கடைப்பிடிக்கும் மனப்போக்கு என்பதைத் தவிர வேறென்ன?
 கடந்த ஆட்சிக்காலங்களோடு ஒப்பிடுகையில் தலித்துகளுக்கு வழங்கப்படும் சிறப்பு உட்கூறுத் திட்டத்திலும், தலித் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித் தொகையிலும் கூடுதலாக நிதி வழங்கி சிறப்புச் சேர்க்கும் தற்போதைய ஆட்சி முறையில் பிற்படுத்தப்பட்ட‌ சிலரால் புகுத்தப்படும் இத்தகைய ஏற்றத்தாழ்வான இட ஒதுக்கீட்டு அணுகுமுறை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் அதிகாரம‌ற்ற – வாய்ப்பு மறுக்கப்பட்ட தலித்துகளுக்கு இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கிய இடஒதுக்கீட்டின் தத்துவம் கேள்விக்குறியாகி, சமத்துவ சமுதாயம் உருவாக தடைகள் ஏற்படும். – அன்புசெல்வம். anbuselvam6@gmail.com
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஜல்லிக்கட்டு : தடையை வரவேற்கிறோம் – ஏன்?

Cruelty Stage 3: Arena: Avaniapuram: Bull’s left horn broken in Jallikattuஜல்லிக்கட்டு  ரேக்ளா, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு, எருதுவிடும் விழா, வடம்புடி, வாடி வாசல் போன்ற பல பெயர்களில் மாடுகளைக் கொண்ட விளையாட்டுக்களை தமிழகம் உள்பட நாட்டின் எந்தப் பகுதியிலும்  நிகழ்த்தக் கூடாது என உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பினாகி சந்திரகோஸ் அடங்கிய அமர்வு அதிரடியாக அளித்த தீர்ப்பு (7.4.2014) காலம் கடந்து வழங்கப்பட்டிருந்தாலும் மானுட விடுதலைக் காககவும், சமூக நல்லிணக்கத்துக்காகவும் இதனை மனமுவந்து வரவேற்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல கடந்த 16 ஆண்டுகால தலித் போராட்டங்களின் வெற்றியாகவும் கொள்ளலாம்.
இதற்கு மறுப்பாக  ஜல்லிக்கட்டு எம் வீர விளையாட்டு, தமிழர்களின் பண்பாடு, வட்டார நாட்டுப்புற அடையாளம் என்பதால் உச்ச நீதி மன்றமே தடை விதித்தாலும் நாங்கள் விளையாடியே தீருவோம் என தமிழக வீர விளையாட்டு பாதுகாப்புப் பேரவை அறிவித்துள்ள அறிவிப்பானது “உச்சநீதி மன்றம் என்ன! இந்திய ஜனாதிபதியே வந்து எங்க பஞ்சாயத்தில் போட்டியிட்டாலும் தேர்தல் நடத்த விடமாட்டோம்” என பாப்பாபட்டி – கீரிப்பட்டி – நாட்டார்மங்கலம் வட்டாரத்தில் கடந்த காலத்தில் ஒலிக்கப்பட்ட ஜனநாயக விரோத சமூக அரசியல் தொனியோடு தொடர்புடையது என்கிற கோணத்தில் பார்த்தால் ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை உள்ளூர‌ப் புரிந்து கொள்ளலாம். மேலும் அது எந்த வகையான ஆபத்துக்களை உண்டாக்கும் என்பதையும் உண‌ரலாம்.
————————————————————
Jalli - 2எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டில் மட்டும் 5 முக்கிய சேனல்கள் ஜல்லிக்கட்டு விளையாட்டை நேரடியாக ஒலிபரப்புச் செய்தன என்பது நினைவிருக்கலாம். இதனையொட்டி தமிழகத்தின் திசைசார்ந்த மண்டல ரீதியான (மேற்கு – மத்திய – தெற்கு) ஜல்லிக்கட்டு பாதுகாப்பு – வீரவிளையாட்டுப் பாதுகாப்புப் பேரவைகளும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட‌ன. வழக்கு செலவுகளுக்கான நிதியைத் திரட்டி டெல்லியில் வழக்கை நடத்த பேரவைகளும் தயாராகின. இத்தகைய நேர் – எதிர் அவசர முரண்களை வைத்தே ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கதி கலங்கிய நெருக்கடியை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.
அதே சமயம் 2000 -க்கு முன்பே ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தலித்துகளால் ஏற்படுத்திய நெருக்கடியானது அதன் அக – புற உள்ளீடுகள் மீது ஒரு முறைப்படுத்துதலையும், ஒழுங்கையும் (Regulations) மாவட்ட நிர்வாகம், விலங்குகள் பாதுகாப்பு நலவாரியம் மற்றும் – நீதிமன்ற தலையீடுகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டதில் தற்போது காணுகின்ற, விவாதிக்கின்ற நேரலையையும், 2000 -க்கு முன்பு நிகழ்த்திய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்களின் ஒலிபரப்புதல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த‌ வேறுபாட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
வர்த்தக நுணுக்கம் கொண்ட இந்த மாற்றங்கள் வரவேற்கக் கூடியதே என பலர் நினைக்கலாம். இருப்பினும் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்றால், ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய் என்கிற முழக்கமும் தொடர்ந்து கொண்டு தானிருக்கும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிகழ்ச்சி நிரல்கள் அந்த ஒரு நாளோடு எல்லாம் முடிந்து விடுவதில்லை. அதன் பிறகு அந்த காளையும், அதன் உரிமையாளரும், அதனை அடக்கி வெற்றி கொண்டவரும் அங்கு தான் வாழ்ந்தாக வேண்டும். விடியலின் தொடக்கமும், இருட்டின் முடிவும் அதன் தொடர்கதைகளோடும், நிகழ்வுகளோடும் அன்றாட வன்கொடுமைகளை உள்ளடக்கியது என்பதைப் புரிவதற்கு 2000 -க்கு முந்தைய காவல் நிலைய புகார்களை ஆதாரமாகக் கொள்ளலாம்.
Indian villagers compete in a bullock caஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும், தலித் எழுத்தாளர்களான ஜல்லிக்கட்டு ஒழிப்புக் குழுவினரை உள்ளடக்கியவர்களும்  இணைந்து 1998 -லிருந்து இதனை தடை செய்யப்போராடி வருகிறோம் என்பது அறிந்ததே. 1995 -ல் கொடியங்குளம் அதனைத் தொடர்ந்து மேலவளவு, சங்கரலிங்கபுரம், தாமிரபரணி, சேத்தூர், சிவகிரி, ராஜபாளையம், அலங்காநல்லூர் – பாலமேடு, காரியாப்பட்டி, அமராவதி புதூர் என அடுக்கடுக்காக தலித் மக்கள் மீது வன்கொடுமைகள் நிகழ்ந்த காலத்திலேயே தலித் இயக்கங்களும், தலித் சிந்தனையாளர்களும் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டையும் மற்றும் வட – தென் மாவட்டங்களில் கபடி விளையாட்டுக்களையும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை முன் வைக்கப்பட்டு விட்டது. காரணம் அப்போது தென் மாவட்டக் கலவரமாக நிகழ்ந்து கொண்டிருந்த தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் எவை எவற்றால் நிகழ்கின்றன என்று காவல் நிலையங்களில் அளிக்கப்பட்டுள்ள 700 புகார்களை கணக்கெடுத்து ஆய்வு செய்ததில் ஜல்லிக்கட்டு, கபடி இத்துடன் கிரிக்கெட், சேவல் – ஆட்டுச் சண்டை, பாரி வேட்டை போன்றவை காரணங்களாகக் கண்டறியப்பட்டன. தென் மாவட்ட சாதிய மோதல்களுக்கான காரணங்களைக் கண்டறிந்த மோகன் கமிஷன் கூட இவைகளைத் தொட்டுக்காண்பித்துள்ளன.  அப்போதெல்லாம் ஜல்லிக்கட்டு விளையாட்டை ஒழுங்குபடுத்தும் பேச்சை எவரும் பேச முடியாத நிலை இருந்தது. அதனை பாதுகாக்க வேண்டும் என்பதாக களம் இறங்கியுள்ள வீர விளையாட்டு பாதுகாப்புப் பேரவை, ஜல்லிக்கட்டு போராட்டக் குழு என்பவை கூட 2008 -க்குப் பிறகு தொடங்கப்பட்டவை. எழும்பூரில் இருக்கிற ஒரு சாதிச் சங்கம் தன்னை இவ்வாறாகப் பெயர் மாற்றி ஜல்லிக்கட்டு நம் தமிழ்ப் பண்பாடு, அது ஒரு வீர விளையாட்டு என உச்சநீதி  மன்றத்தையே இன்றைக்கு சவாலுக்கு அழைக்கும் நிலை இருக்கும்போது  15 ஆண்டுகளுக்கு முன் எந்த நிலை இருந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
———————————-
காளைகள் சீற ஜல்லிக்கட்டு விளையாட்டு நிகழ வேண்டுமானால் தலித்துகள் பறையடிக்க வேண்டும் என்கிற தீண்டாமை மரபு இன்று வரையிலும் அலங்காநல்லூர் உட்பட சில கிராமங்களில் பின்பற்றப்படுகின்றன. இதனை நியாயப்படுத்தும் சடங்குகளும் உடைபடாமலே நீடித்து வருகின்றன. அலங்காநல்லூரைப் பொறுத்தவரையில் வாடி வாசலில் காளையை சீறவைக்க பறையடிப்பது வழக்கம். பறையடித்து காளையை சீற வைத்த பின்னர் மாடுபிடி தொடரும். இங்கே ஊர்வலம் போகும்போதும், வாடிவாசலிலும் எல்லோருக்கும் (மேற்படி வகையறாக்களுக்கு) மரியாதை செய்வார்கள். ஆனால் தலித்துகள் தப்படித்து காளைகளை சீற வைப்பதோடு வேலை முடிந்துவிடும். அந்த வகையறாக்களின் முதல் மரியாதையை தலித்துகளுக்குத் தர மாட்டார்கள். ஒரு ஆண்டில் (2004 என்று நினைக்கிறேன்) தலித்துகள் தப்படிக்க மாட்டோம் என்று சொன்னதும் முதல் மரியாதையை பட்டமாகக் கட்டாமல் வெறும் துண்டு கொடுத்து சமாளித்தார்கள். இதனைக் கேள்விப்பட்ட சில கிராமங்கள் தலித்துகளைப் புறக்கணித்து பறையடிக்கும் குறுந்தகடு ஒலியை போட்டும் காளையை சீறவைத்து மாடுபிடித்தார்கள். விநாயகர் ஊர்வலத்துக்கு பறையடிக்க மாட்டோம் என்று சொல்லப்பட்ட விவாதம் இன்று மழுங்கடிக்கப்பட்டு, கூடுதலான ஊதியம் என்கிற பெயரில் எப்படி பறையடிக்க ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டதோ அது போன்றே இன்றைக்கு எல்லா நவீன நிகழ்வுகளுக்கும் தலித்துகள் காலம் காலமாக பறையடிக்கும் வழக்கம் ஜல்லிக்க‌ட்டிலும் ஏற்கப்பட்டு விட்டது என்பது தலித் விடுதலைக்கு நேர்ந்த ஒரு பின்னடைவு தான்.
இன்றைக்கு ஒருசில கிராமங்களில் தலித்துகள் காளை வளர்க்கவும், மாடு பிடிக்கவும் அனுமதிக்கப்பட்டது. அது தான் மேற்படி அவர்களுக்கும் வசதியாகப்பட்டது. 2000 -க்கு முன்பு வரையிலும் தலித்துகள் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதில்லை. அதே சமயம் காளைகளை தனியாக வளர்ப்பதும் இல்லை. வெறும் தலித்துகள் மட்டும் உள்ள சில கிராமங்களில் சிலர் காளைகள் வைத்துள்ளனர். அவர்களுக்குள்ளேயும் (பறையர் – தேவேந்திரர்) ஜல்லிக்கட்டு விளையாடுகின்றனர். இதனால் பெருமளவு மோதல்கள் – படுகொலைகள் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஒன்றியங்களில் தலித்துகளுக்குள்ளே நிகழ்ந்துள்ளன. உச்சநீதி மன்றம் தடை பிறப்பிப்பதற்கு முன்பே அமராவதி புதூர் போன்ற கிராமங்களில் அரசாங்கமே சில ஆண்டுகள் 144 தடையுத்தரவு பிறப்பித்து தடை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தலித் தலைவர்கள் தலைமையில் சமாதானப் பேச்சு வார்த்தைகளும் நடந்துள்ளன என்பது கடந்த கால அனுபவங்கள்.
வீர விளையாட்டு என்கிற பெயரில் வளர்க்கப்படும் மச்சக்களை, மயிலக்காளை, காரிக்காளை, மரையங்காளை, நாட்டுவெள்ளை என்கிற காளை வளர்ப்பு முறைகளே இங்குள்ள முக்கிய ஆதிக்க சாதிகளோடு தொடர்புடையது. சிலர் இந்த காளைகளின் பெயரையே தங்கள் பெயராகவும் / வகையறாகவும் வைத்திருப்பதைக் கொண்டு இன்னாரை வட்டார சாதி ரீதியாக சண்டியர் என அடையாளம் காணுவ‌து எந்த வகையில் தமிழ்ப்பண்பாடாகும். சில கிராமங்களில் மணிமண்டபம் கட்டும் அளவுக்கு காளைகளுக்கு தனிச்சரித்திரம் இருக்கிறது. இன்னார் இன்னார் மட்டும் தான் அடக்கியிருக்கிறார்கள். உள்ளூரில் உள்ள அந்தந்த தலித்துகளுக்கு சில கிராமங்களில் உள்ளூரிலேயே மாடுபிடிக்கத் தடை எழுதப்படாத சட்டமாக இன்றும் உள்ளது. தலித்துகள் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்க மட்டுமல்ல ஆண் நாய்களைக் கூட‌ வளர்க்கக்கூடாது என்கிற நாய்த் தீண்டாமை மரபும் தென் மாவட்டத்துக்கே உரியது.
இன்றைக்கு ஜல்லிக்கட்டு என்பது உள்ளூர் கிராமப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சார்ந்த வியாபாரமாக மாறிவிட்டது. இந்த வியாபாரத்தில் கிராம நிர்வாகம், பணம் வசூல், குத்தகை, ஏலம், மண்டகப்படி வரி வசூல், கேலரி நுழைவுச்சீட்டு டெண்டர், வழிபாடு என்பதில் தலித்துகளின் தலையீடு எத்தனை கிராமங்களில் உள்ளன. இப்போது தான் அலங்காநல்லூரில் கூட கேலரி நுழைவுச்சீட்டு உரிமம் கொடுத்துள்ளார்கள். ஏனைய உரிமைகளை எப்போது கோறுவது? இதனால் தலித்துகளின் பொருளாதாரம் எந்த அளவுக்கு உயர்ந்து விடப்போகிறது? சில‌ தலித்துகளைக் கையில் வைத்துக் கொண்டு அஞ்சுக்கும், பத்துக்கும், மது பாட்டில்கள் கொடுத்து தான் அந்த வியாபார ஒதுக்கீடுகள் தலித்துகளின் பங்கேற்பாக இன்றைக்கு பூர்த்தி செய்யப்படுகின்றன.
————————————————
Jalli - 1ஆனால் ஜல்லிக்கட்டின் மீது கடந்த காலத்தில் கேட்கப்படாத பொதுவான கேள்விகளுக்கு இன்னும் எவரும் பதில் சொல்லவில்லை
———————————
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டென்றால் ஏன் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் உள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவதில்லை? ஏன் மொரீசியஸ், பினாங்கு, ஆப்பிரிக்கா, ஈழம் – இலங்கை, அந்தமான், கனடா, பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்ற தொப்புள்கொடி தமிழர்கள் இதனை நினைத்து கூட பார்ப்பதில்லை?
தமிழர்பண்பாட்டில் வீரம் என்பதன் மதிப்பீடு என்ன? த‌மிழ் இலக்கியத்திலும் அதன் பண்பாட்டிலும் “வீரம் – கற்பு” இவை இரண்டும் பெண்களை அடிமைப்படுத்தும் ஆதிக்கக் குறியீடுகள் தானே? ஜல்லிக்கட்டு காளையை அடக்குகின்ற ஆண்களுக்கு தான் வீரம் இருக்கிறது என்றால்  தமிழர் பண்பாட்டில் முற‌த்தால் புலி விரட்டிய பெண்களுக்கான இடம் என்ன? அவர்களுக்கு வீரம் இல்லையா? அல்லது பெண்களுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இல்லையா? வேடிக்கை பார்க்கின்ற அளவுக்காவது பெண்களுக்கு அனுமதி இருக்கிறது என்றால் காளைகள் தங்கள் மகன்களை கொம்பால் குத்தி தூக்கி எறிவதை பார்த்து, கை தட்டி ரசிப்பார்களா? உயிர் உற்பத்தி செய்யும் பெண்கள் விளையாட்டுக்காவது உயிரைக் கொல்ல அனுமதிப்பார்களா?
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டெனில் குறிப்பிட்ட மூன்று சாதியினர் பெரும்பாண்மையாக இருக்கின்ற மாவட்டங்களில் மட்டும் ஏன் விறுவிறுப்பாக விளையாடப்படுகிறது? ஏன் பிற சாதிகள் உள்ள வேறு எந்த மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இல்லை.
மண்ணையும், மாட்டையும், உழைப்பையும் நம்பி வாழும் மண்ணின் மக்கள் கிடை மாட்டு ஆண் கன்றை தெரிவு செய்து, மூக்கணாங்கயிறு போடாமல் வளர்த்து, எலுமிச்சம்பழத்தை குத்தித் தூக்குகிற பயிற்சியைக் கொடுத்து, கொம்பு சீவி, திமிலை கசக்கி, வாலை மடக்கிச் சுருட்டி, மது வாடையூட்டி, கோபக் குறியை உண்டாக்கி, வதைப்படுத்தி விளையாடுவார்களா? இவ்வாறு விளையாடுவது தான் தமிழரின் வேளாண்குடிப் பண்பாடா? விவசாயத்திற்கு மாடுகளை உற்பத்தி செய்யும் காளைகளை நேசிப்பவர் அந்த காளைக்கு செய்யும் குறைந்த பட்ச நன்றிக்கடன் இது தானா?
ஜல்லிக்கட்டில் காளையை அடக்குபவர் வீராதி வீரர் என்றால் அந்த காளையால் சேதப்படுத்தப்படும் அல்லது காளையால் கொல்லப்படும் ஒரு ஆண் வீரரின் உயிருக்கு அதிக பட்ச விலை மதிப்பு சுவர்க்கடிகாரம் – அண்டா குண்டா – சூட்கேஸ் விலை தானா? அல்லது எந்தப்பரிசுமே கிடைக்காமல் இதுவரை வேடிக்கைப் பார்த்து கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களின் “போஸ்ட்மார்ட்டம்” அறிக்கைதான் விலையுயர்ந்த பரிசா?
மக்கள் நம்பிக்கைக்குரிய குலசாமி பெயரில் “கொழுப்புக்குப்பி – விந்து வீரியத் திணவு” கொண்ட ஒரு காளையை உருவாக்கி, ஊரறிய, தொலக்காட்சிப்பதிவுகளோடு, பட்டப்பகலில், வீரம் என்கிற பெயரில் இளைஞர்களைப் படுகொலை செய்தும், படுகாயமடையச் செய்தும் வரும் ஒரு காளையையும் அதன் உரிமையாளரான கொலையாளியையும் ஏன் எந்த சட்டப்பிரிவிலும் கைது செய்து தண்டிக்கவில்லை? இதனை அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும், வனத்துறையினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொது மக்களும் (யானையிடமிருந்த்து, புலியிடமிருந்த்து மக்களை பாதுகாப்பது போல் பாதுகாக்கத் தவறி) ஏன் வேடிக்கை பார்த்து – லயித்து மகிழ்கின்றனர்?
Jalli - 4இப்படி எண்ணற்ற கேள்விகள் இதனுள் புதைந்து கிடக்கின்றன. இத்தகைய பின் புலத்தில் தான் இந்த வழக்கை மதுரையில் இருந்து பதிவு செய்தால் பிரச்சனைகள் கூடுதலாக இருக்கும் என்கிற அச்சத்தின் மத்தியில் ஒரு பொதுநல முறையீடாக தடை செய்வதன் கருத்துப்பரவல் அன்றைக்கு மக்கள் முன்வைக்கப்பட்டது. 1995 -ல் “விலங்கு சோதனைகள் ஆய்வு மேற்பார்வை மற்றும்  கட்டுப்படுத்துதல் நோக்கம் கொண்ட குழு” Committee for the Purpose of Control and Supervision of Experiments on Animals (CPCSEA) -வின் தலைவராக மேனகாகாந்தி நியமிக்கப்பட்டதும், ஆம்புலன்சைக் கொண்டு தெரு நாய்களை காயடிக்க அந்த அம்மையார் தலித்துகளுக்கான சிறப்பு உட்கூறுத் திட்டத்தின் நிதியை (SCP)  எடுத்து விரயமாக்கிக் கொண்டிருந்தபோது தான் அவரது வாரியத்தின் கவனத்துக்கு மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் இப்படியொரு பிரச்சனை மகாராஷ்டிராவிலிருந்தும் – தமிழகத்திலிருந்தும் முன்வைக்கப்பட்டது. எனினும் பல விளக்கங்களுக்குப் பின்னரே “மிருக வதை தடைச் சட்டம் 1960” -ன் கீழ் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என 2002 -ல் விலங்குகள் பாதுகாப்பு வாரியம் அக்கறையுடன் ஏற்றுக் கொண்டது.
குறிப்பாக 2002 – ல் இதற்கான வழக்கு தகுந்த ஆதாரங்களுடன் தமிழக உயர்நீதி மன்றத்தில் பதிவு செய்யப்பட்டாலும் இது குறித்து அன்றைக்கு எவரும் பேச ஆர்வம் கொள்ளவில்லை. மாறாக இந்த வழக்கை ஆதாரமாகக் கொண்டு “ஜல்லிக்கட்டு மறு சீரமைப்பு” என்பதை உருவாக்கி சென்னை உயர் நீதி மன்றம் 2008 -இல் ஒரு இடைக்காலத் தடையை விதித்தது. இதனை எதிர்த்து சாதிச்சங்கங்களின் உதிரிகளாக இருந்தவையெல்லாம் திடீரென முளைத்து, ஜல்லிக்கட்டு போராட்டக் குழு, வீரவிளையாட்டு பாதுகாப்பு பேரவை  என்கிற பெயரில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்யக்கோரி மீண்டும் உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உயர் நீதி மன்றமும் சில ஒழுங்கு முறைகளை விதித்து மீண்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பொறுப்பை ஒப்படைத்தது. இதே கால கட்டத்தில் மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் வழக்கில் இணைந்து தன் தரப்பு வாதங்களை முன் வைத்து பிறகு உச்ச நீதிமன்றத்திலும்  வழக்கைப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில் சில விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த வழங்கிய அனுமதியை மாவட்ட நிர்வாகம் 2012 -ல் ஏற்று ஜல்லிக்கட்டு நடத்த ஆர்வம் காட்டியது. அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் திருமிகு. சகாயம் தனது தமிழ் விசுவாசத்தின் நன்றிக்காக தார்மீக அடிப்படையில் ஒரு நவீன அனுமதியை அளித்தார். இதனை எதிர்த்து,  மத்திய அரசு வழக்குரைஞர் ரவீந்திரன் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 43 பேரின் சாவு ஆதாரங்களை முன் வைத்து மீண்டும் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடினார். இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருமிகு.சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்த ஒரு இடைக்கால அனுமதியை மதுரை கிளை உயர்நீதி மன்றத்திலிருந்து  12.1.2012 -ல் பிறப்பித்தனர்.
Jalli - 5இருப்பினும் சாவுக்குப் பறையடித்து இழவு செய்தி சொல்வதை நிறுத்தியது போல், ஜல்லிக்கட்டு காளை அழைத்து வர பறையடிப்பதை நிறுத்த வேண்டும். கேவலம் ஒரு முழம் துண்டுக்காக முதல் மரியாதைக் குழுவில் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். காளை அடக்குவதையும், வளர்ப்பதையும் கைவிட வேண்டும். நாட்டுப்புறவியல் என்று சொல்லிக் கொண்டு ஆய்வில் நேரம் செலவிடு வதைத் தவிர்க்க வேண்டும். விலங்குகளை வதைப்படுத்துவதற்கு எதிராகவும், உயிர்ப்பலிக்கு எதிராகவும் போராட வேண்டும் என்கிற நோக்கில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முற்றிலும் தடை செய்யக்கோறும் கடிதங்கள் 2013 ஜனவரி 28 – ஆம் தேதிக்குள் நீதியரசர்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் விலங்குகள் பாதுகாப்பு வாரிய உறுப்பினர்கள் டாக்டர் மணிலால் வால்யதே, அபிஷேக் ராஜே குழு கடந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுாரில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஜல்லிக்கட்டு எப்படி விளையாடப்படுகின்றன? மாடுகள் எப்படி நடத்தப்படுகின்றன? என்பதை நேரில் கண்டறிந்து 3 அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தன. இந்த அறிக்கைகளின்படி மாடுகளை வாடி வாசலில் இருந்து தள்ளிவிடுதல், வாலை கடித்தல், மதுபானத்தை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றுதல், அடித்தல் போன்ற துன்புறுத்தல்கள் செய்வதை குழு கள ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.  உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் விதிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் விதித்ததாகச் சொல்லப்படும் அனைத்து ஒழுங்குகளும் மீறப்பட்டுள்ளன என்பதை நிரூபணம் செய்துள்ளது.
இதன் பொருட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகளை மனிதர்களுடன் சண்டை போடவைப்பதையோ, இதர விலங்குகளுடன் முட்டிச் சண்டை போடவோ – துாண்டக் கூடாது. ஒவ்வொரு ஜீவராசியும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு. மற்ற நாடுகளில் இந்த சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அரசியல் சாசன உரிமையாகக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். எந்த விலங்கும் துன்புறுத்தப்படாமல் இருப்பதை விலங்குகள் நல வாரியம் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தாமல் இருப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள், விலங்குகள் நல வாரியம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலங்குகளை துன்புறுத்தினால், கூடுதல் அபராதம், தண்டனை வழங்கும் வகையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். தமிழக அரசின் 2009-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விதிமுறைகள் சட்டம், மத்திய அரசின் மிருக வதை தடைச் சட்டத்தை மீறுவதால், தமிழக அரசின் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிரடியாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Jalli - 6ஜல்லிக்கட்டு வேண்டாம் என்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில், வட்டாரப் பண்பாட்டுப் பார்வையில், பெண்ணியப் பார்வையில், சுற்றுச்சூழல் பார்வையில் இருக்கும் பல காரணங்களை கடந்த காலங்களில் விவாதித்து விட்டோம். இருப்பினும் இந்த விளையாட்டை தடை செய்ய எடுத்துக் கொண்ட கருத்துப் பரவலாக்கமும், நீதி மன்ற வழக்குப் போராட்டமும் சாதிய தமிழ்ச்சூழலில் எளிமையாக முன் வைக்கப்பட்டு விடவில்லை. கந்தறு கோலமான பல வன்கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும், இடைவிடாதப் போராட்டங்களையும் முன்வைத்து பெறப்பட்டது என்பதால் இந்த தீர்ப்பானது கபடி, சேவல் சண்டை – ஆட்டுச் சண்டை போன்றவைகளை வைத்துக் கொண்டு தலித்துகளோடு மோதி சுகம் காணும் ஆதிக்க சாதிகளுக்கும், ஆணாதிக்க வில்லன்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு சவுக்கடியாக அமையும். by ANBUSELVAM
Posted in Uncategorized | 3 பின்னூட்டங்கள்

கழகங்களில் காணாமல்போகும் தலித் அரசியல்

Parliamentநூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது.
இன்றைய தமிழ்த் தேசிய  – திராவிட அரசியலின் கருத்தியல் வளர்ச்சிக்கு பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி. ராஜா, சத்தியவாணிமுத்து போன்றோர் செய்த பங்களிப்பை திராவிட அரசியல் வரலாறு இருட்டடிப்பு செய்த போதிலும் தலித் எழுச்சியானது அதனை சுட்டிக்காட்டத் தவறியதில்லை. எனினும் இதுகாறும் வரலாற்றின் ஊடாக கட்டியெழுப்பபட்ட தலித் அரசியலின் இலக்குகள் தேர்தல் களத்தில் திராவிட அரசியலால் வீழ்த்தப்படுவதைக் காணும்போது சமகால தலித் அரசியல் வார்த்தெடுப்புகளின் ஒரு அங்கமான தலித் கட்சிகளின் “அரசியல் அதிகாரம் கோறும் நிலை” கடந்த காலத்தில் களமாடிய  தலித் அரசியல் போராட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறது.
தமிழைக் காட்டியும், சாதிவாரி தொகுப்பை முன் நிறுத்தியும் மிகு சிறுபாண்மையிலிருந்து எண்ணிக்கைப் பெரும்பாண்மைக்குள் தன்னைத்தானே வலுப்படுத்திக் கொண்ட திராவிட அரசியலுக்கும் – சாதி ஒழிப்பை முன் நிறுத்தும் தலித் அரசியலுக்குமான முரண் அவ்வளவு எளிதில் தீர்வு காணக்கூடியதல்ல‌. எனினும்  அத்தகைய திராவிடக் கட்சிகளோடு கூட்டணி என்கிற பெயரில் தலித் அரசியலை வார்த்தெடுக்க விரும்பும் தலித் கட்சிகள் இது வரை சாதித்தது என்ன என்பது 2014 மக்களவைத் தேர்தலின் தொகுதிப் பங்கீடுகளில் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. தலித் கட்சிகளை காலந்தோறும் “எடுப்பார் கைப்புள்ள” கட்சிகளாக மட்டுமே எண்ணி அரசியல் பண்ணுவதில் காங்கிரசை விஞ்சிய சாணக்யர்கள் திராவிடக் கட்சிகள். வெறும் வாக்கு வங்கிக்காகவும், தங்களின் ஏக – போக அரசியல் நலனுக்காக மட்டுமே தலித் கட்சிகளை பயன்படுத்தி வருவதாகக் கருதியது தவறு. அதிலிருந்து ஒரு படி கடந்து தலித் கட்சிகளின் வெகு மக்கள் திரட்சியை மறுதலித்து, ஒற்றைத் தலைவரை வளர்த்தெடுக்கும் கழக விசுவாச சூக்குமத்தையும் பாவிக்கின்றது.
Se.ku.thaதிராவிடக் கட்சிகளின் இத்தகைய கழகப் பொது மன நீரோட்டத்தில் இன்றைய தலித் கட்சிகளும் அதன் தலைவர்களும் இளகித் திளைத்தாலும் திராவிட அரசியலால் வீழ்ந்த அன்றைய தலித் தலைவர்கள் எச்சரிக்கையாகவே இவர்களுடன் அரசியல் செய்துள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் பெரியாருக்கும் – அண்ணாவுக்கும் இடையிலான திராவிட அரசியல் மறுமலர்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன் போன்றோருக்கு கொடுத்த அங்கீகாரத்தை சத்தியவாணிமுத்துவுக்கு தர மறுத்த திமுக -வையோ அல்லது பெருந்தலைவர் காமராஜர் போன்றோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எல். இளையபெருமாள், தியாகி இம்மானுவேல் சேகரன், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி போன்றோருக்கு தர மறுத்த காங்கிரசையோ நம்பியதில் பயனெதுவும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தனர். இந்த படிப்பினை இருந்ததாலேயே தேசிய அளவில் அகில இந்திய ஷெட்யூல்டு இனப்பேரவையிலும் (SCF), இந்திய குடியரசுக்கட்சிகளுக்கு (RPI) உள்ளேயும் – வெளியேயும் நின்று திராவிட – காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்த தலித் அரசியல் தேவை எனக் கருதினர். அரசியலில் சாதி நீங்கலான கூட்டாட்சித் தத்துவம் வலிமையாக ஒலிக்காத காலமாக அது இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் கிடைத்த வஞ்சிக்கப்பட்ட விழுப்புண்களுக்கு தலித் தலைவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறியதில்லை.
இந்த அனுபவம் புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டுக்கு முன்பே 1985 -வாக்கில் தமிழக அரசியலில் “ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் – (Scheduled Caste Liberation Movement – SCALM)” என்று ஒன்று உருவாக திராவிட – காங்கிரஸ் தலைமையையும், அதன் கூட்டணியையும் புறக்கணித்த தலித் கட்சிகளின் அரசியல் எழுச்சி காரணமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எல். இளையபெருமாள், திமுக -விலிருந்து வெளியேறிய வை. பாலசுந்தரம், பெரியாரை கடுமையாக விமர்சித்த ஆ. சக்திதாசன் போன்றோர் ஒருங்கிணைத்து உருவாக்கிய அரசியல் இயக்கம் அது. 1989 -ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் பிற கட்சிகளைச் சாராமல் அனைத்து தனித் தொகுதிகளிலும் தலித் கட்சிகளின் உறுப்பினர்களே போட்டியிட வேண்டுமென கன்ஷிராம் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர். அத‌ன்படி அருந்ததியர் – பறையர் – தேவேந்திரர் என்கிற அடையாளங்களைக் கடந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் வழக்கம்போல இத்தகைய முயற்சியை முறியடிக்க திமுக -வின் சார்பில் செ. குப்புசாமியும், காங்கிரஸ் சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தியும் தலித் தலைவர்களை தங்களின் கட்சிகளுக்கே தேர்தல் வேலை செய்ய அழைப்பு விடுத்தனர். தலித் அரசியலை தனித்த அடையாளத்துடன் வென்றெடுக்க முற்பட்ட தலித் கட்சிகளின் திரட்சி, குறுகிய காலத்தில் எதிர்பாராத திசைகளில் சிதறடிக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதி வரையிலும் அந்தந்த கட்சிகளின் விசுவாசிகளாக நடந்து கொள்ள கொடுக்கப்பட்ட விளம்பரம் தலித் தலைவர்களுக்கு நேர்ந்த ஒரு சாபக்கேடு.
Thiruma - 190 -களுக்கு பிறகு இடிமுழக்கமாக எழுந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகளிடமாவது ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்படாதா என்று கணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் நடப்பு தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டு  நடவடிக்கைகளைக் காணும்போது தலித் அரசியல் எழுச்சிக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை. இதன் விளைவு திராவிடக் கட்சிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம் என சொல்லிக் கொண்டே யாரிடமும் சொல்ல‌ முடியாமல் கூட்டணியாகப் புலம்பித்தவிக்கும் கையறு நிலை.
2001 அக்டோபரில் புதுச்சேரி மையக்குழுவில் ஏன் திராவிடக் கட்சிகளை ஏற்கிறோம் – நிராகரிக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் வரையறுத்த நீண்ட நெடிய கூட்டாட்சிக் கொள்கையும், 2002 செப்டம்பரில் நெல்லை மாநாட்டில் திராவிடக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என பிரகடனப்படுத்திய புதிய தமிழகத்தின் புரட்சிகர அரசியல் முடிவும், இந்திய குடியரசுக் கட்சியின் இறுதி நிலவரங்களும் வெகு மக்களைக் கொண்ட தலித் கட்சிகளின் தலித் அரசியல் எழுச்சிக்கும் அதன் தார்ப்பரியங்களுக்கும் வலு சேர்ப்பதாக அமையவில்லை என்பதை அந்தந்த தலைவர்களே பலமுறை கூறியிருக்கின்றனர். இன்றைக்கு மீண்டும் அதே புலம்பலை தலித் மக்களிடம் எந்த முகம் கொண்டு சொல்வது என்கிற தயக்கம் இருக்கிற காரண‌த்தால் திமுக -வுக்கு ஒரு திருமாவளவன், அதிமுக -வுக்கு ஒரு செ.கு. தமிழரசன், இரண்டுக்கும் ஊடாக டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை. ஜெகன் போன்ற ஒற்றை ஆண் தலைவர்களே அந்தந்த கட்சிகளின் நிரந்தர கூட்டாளர்களாகி விடுகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய ஒவ்வொரு காலச்சூழலும் ஐந்தாண்டுகளையும், பத்தாண்டுகளையும் கண் எதிரே பறித்துக் கொள்கிறது. அதற்குள் ஒரு கட்சி புதிதாகத் தோன்றி, இன்னொரு தலித் கட்சியை வெளியேற்றுவதில் களமிறங்கி விடுகிறது. இதில் தலித் பெண்களின் தலைமையைக் கொண்ட தலித் அரசியலுக்கான சிந்தனை அறவே இல்லை.
Thiruma -2மிகக் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இன்ன பிற கட்சிகளின் அமைப்புகள் 8 சீட்டுகள் வாதாடிப் பெறும் ஸ்திரத்தன்மையை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இந்த உணர்தல் இல்லாததாலேயே திமுக -வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சி என சொல்லப்படும் விடுதலைச்சிறுத்தைகள், தென்மாவட்டங்களின் தேசியம் என சொல்லப்படும் புதிய தமிழகம் ஆகிய கூட்டணி தலித் கட்சிகளை வெறும் ஒன்னறை சதவீத வாக்களர் கொண்ட கட்சிகள் என கணக்கிட்டு ‘ஒரேயொரு சீட்’ முறையை தொடர்ந்து திராவிடக் கட்சிகள் கையளித்துள்ளன. தமிழகத்தின்பிரதான தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைக்கு வழக்கம்போல சிதம்பரம் தனித் தொகுதியும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தனித் தொகுதியும் கிடைத்துள்ளது. அதாவது சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர். கிருஷ்ண்சாமியை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆசைப்பட்டு, கட்சியை வளர்க்காமல் தன்னந்தனி தலைவராய் இருந்து டெல்லியிலே முடங்கிக் கிட என்றும், தொல். திருமாவளவனை இருப்பதையாயது தக்க வைத்துக்கொள் என்றும் சூசகமாக சொல்வதை விட வேறென்ன. அதிமுக -வோ மருந்துக்கு கூட தலித் கட்சிகளின் ஆதரவை எதிர் பார்க்கவில்லை. மும்முனைப்போட்டிகளின் தளகர்த்தாக்களான பாஜக – தேமுதிக போன்ற கட்சிகள் அங்கீகரிக்கப்படாத தலித் கட்சிகளை அடையாளம் காணும் என்கிற எதிர்பார்ப்பு கூட “இருந்துட்டு போகட்டும்” என்பதாக இருக்கிறது. குறைந்த பட்சம் இடதுசாரி கட்சிகளைப்போல எதிர்ப்பை கூட பதிவு செய்ய முடியவில்லை. அல்லது அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க எது தடையாக இருக்கிறது என்பது தெரியவில்லை. 1977 -ல் எம்.ஜி.ஆரிடம் மண்டியிட்டு பெற்ற “ஒற்றை சீட் முறை” எனும் “ஒத்தைக்கு ஒத்த நோயை” தமிழக தலித் கட்சிகளும் இன்று வைரஸாக்கிக் கொண்டன.
Krishnasamyஅடிப்படையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் தலித்துகளின் ஒட்டு மொத்த வாக்கு வங்கிகளையும் கணக்கில் கொண்டால் எந்த தனித் தொகுதிகளிலும் பிற கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் அவற்றை தங்களுக்கு ஒதுக்க தலித் கட்சிகள் கோரியிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளும் இக்கருத்தை ஆதரித்து, தங்களிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி எடுத்துக் கொண்டதால் குறைந்த பட்சம் மும்மூன்று தொகுதிகளாவது ஒதுக்குகிறோம் என அறிவித்திருக்க‌ வேண்டும். இல்லையேல் தனித்து போட்டியிட்டாவது நாங்கள் ஒன்னரை சதவிகித வாக்கு வங்கியாளர்கள் இல்லை என்கிற முயற்சியை எடுத்திருக்கலாம். அப்படியொன்று இங்கே நிகழவில்லை. காரணம் இந்த தேர்தல் அமைப்பு முறையில் ஒவ்வொரு தலித் கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சிக்குள் அடைக்கலமாகி ஆங்காங்கே ஆளுக்கு ஒரு சீட்டை தக்க வைத்து தான் 20 சதவிகித வாக்கு வங்கி தலித் அரசியல் விகிதாசாரத்தைக் கூ(கா)ட்டமுடியும் என கணித்திருக்கலாம். தன்னைத் தானே தேற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த கணிப்புகள் பயனளிக்கும்.  மேலும் கிடைக்கிற ஒரு சீட்டை செயலாக்க மனோபவம் கொண்ட இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கொடுத்து விட்டு முதன்மைத் தலைவர்கள் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் இத்தகைய ஒற்றை சீட் முறையால் தடைபடுகிறது. அதற்கு பேசாமல் அந்தந்த தலித் கட்சிகளைக் கலைத்து விட்டு நேரடியாகவே கழகங்களில் கரைந்திருந்தால் கூட தலித் ஆளுமைகளில் செறிவு கொண்ட உறுப்பினர்கள் பிற கட்சிகளுக்குள் ஊடுறுவி 10 தனித் தொகுதி இடங்களையாவது கைப்பற்றியிருக்கக்கூடும் என்பதும் ஒரு வகை ஆவேசம் தான்.
Krishna - 1மற்றபடி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்தும், கடந்த காலங்களில் தலித் கட்சிகள் வெளியிட்ட‌ கூட்டணி தேர்தல் அறிக்கையை நிறைவேற்றக் கோரியும் கடந்த பத்தாண்டுகளில் தலித் கட்சிகள் போராடியிருக்க வேண்டும். எதிர்பார்த்த வகையில் நம்பிக்கையளிக்கும் பெரிய சாதனைகள் எதுவும் நிகழவில்லை. மாறாக  தங்கள் கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கோஷங்களில் நேரம் செலவிடுவதும், ஒரு கட்டத்துக்கு மேல் திராவிடக் கட்சிகளின் அன்றாட நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் போராளிகளாகவும், தேர்தல் இடைத்தூதுவர்களாகவும் மாறியது தான் ஊடகத்தில் மிச்சம்.
அரசியல் ஆடுகளத்தில் திராவிடக் கட்சிகள் தங்களின் நீட்சியை ஒற்றைத் தலைவர், ஒற்றை கட்சி, ஒற்றை வளர்ச்சி என்பதிலிருந்து விடுபட்டு பல்லாண்டு கடந்தும் பன்மை அரசியல் பண்ண முடிவதால் தான் ஒரு தலைமையோடு, ஒரு கட்சியோடு அதன் அரசியல் முற்று பெறாமல் தொடர் ஓட்டத்தில் வெல்ல முடிகின்றது. ஆனால் தலித் அரசியல் வரலாற்றில் தோன்றி மறைகிற ஒவ்வொரு தலித் தலைவரின் ஆயுளோடு ஒரு தலித் கட்சியின் ஆயுளும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக நிறைவு பெறுவதற்கு காரணம் ஒருசீட் பெறும் ஒத்தைக்கு ஒத்த நோய் தான். அம்பேதகருக்கும் பொருந்திய இந்த விமர்சனத்தை என்றைக்கு தலித் கட்சிகள் முறியடிக்கப்போகின்றன?
Ambedஎனவே எதிர்காலத்தில் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர் தான் இவற்றையெல்லாம் சுதந்திரமாகச் செயல்படுத்த முடியும் என்கிற மன நிலையிலிருந்து விடுபட்டு குறைந்த பட்சம் தலித் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் சொன்ன “தனித் தொகுதியை மாற்றி இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்களர் தொகுதி முறை, புதிய நிலப்பகிர்வுச் சட்டம்,  தலித் சிறுபாண்மையினர் இட இதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மாநில வரவு – செலவுத் திட்டத்தில் 18 % தலித் மக்களின் சிறப்பு உட்கூறுக்கு வழங்குவது, பெண்களுக்கான பண்பாட்டுரிமை, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது” போன்ற எளிமையான கோரிக்கைகளில் ஒன்றையாவது சாதிக்க திராவிட – காங்கிரஸ் – பாஜக கட்சிகளை நிர்ப்பந்திக்க வேண்டும். கூட்டணி திராவிடக் கட்சிகளுடனான சமரச நல்லிணக்கம் ஓரளவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காலந்தோறும் பிரிந்தே கிடக்காமல் ஒன்று சேர்வதற்கான பல பண்பாட்டுக் காரணங்கள் இருந்தும் பிற தலித் அமைப்புகளைக் கூட்டிச் சேர்த்து தலித் அரசியலை வென்றெடுக்க முடியாத தலித் பகைமையை கழகங்கள் நன்கறிந்து கொண்ட‌ன. இதனை முறியடிக்க‌ தனித் தொகுதிகளில் தலித் கட்சி வேட்பளர்களை ஆதரிக்கும் பண்பாட்டுப் புரிதலையாவது ஏற்படுத்த வேண்டும். இவைகளுக்கு சாத்தியமில்லையெனில் தார்மீக எல்லை கடந்த “கூட்டாட்சி தத்துவம் – கூட்டணி தர்மம்” எது என்கிற கழக விசுவாசத்தை தேர்தலுக்கு பிறகாவது மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கும் வாய்ப்பில்லையெனில் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வதைப்போல கூட்டணி விசுவாசத்துக்கு பலியாகாமல் எந்தக் கட்சியில் இருந்தாலும் கல்லைப்போல் கரையாமலாவது இருந்து தலித் அரசியலை தொடர் ஓட்டத்துக்கு கொண்டு செல்வது ஒன்றே விலை மதிப்பற்ற தலித் வாக்குகள் கோறுவதை தலித் கட்சிகளின் எதிர்கால வளர்ச்சி அர்த்தப்படுத்தும்.
– அன்புசெல்வம் anbuselvam6@gmail.com
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தலித் கல்வி உதவித் தொகையை இடைமறிக்கிறதா – மாநில நிதித்துறை?

(21. 2. 2014 அன்று தமிழ் தி இந்து நாளேட்டில் வெளியான கட்டுரையின் முழு சாரம்)

Thudi - 1வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலச் சூழலில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் பலநாடுகளில் பெற்ற உயர் கல்விப் பட்டங்கள் அனைத்தையும் அவர் பெரும் பணச்சுமைகளாலும், பணத்தடைகளாலும் எதிர் கொள்ளவேண்டியிருந்ததை நன்கறிவோம். அதன் பொருட்டே அவர் ‘கெயிக்வாட்’ போன்ற கல்வி உதவித் தொகையையும், நண்பர்களின் உதவியையும் நாடவேண்டியிருந்தது. அறிவாயுதம் எனும் உயர்கல்வி பெறுவதற்காக தான் சந்தித்த பணத்தடைகளை எதிர்கால தலித் மாணவர்கள் எவரும் எதிர்கொள்ளக் கூடாது என்கிற நோக்கில் பல கல்வி உதவித் திட்டங்களை அவர் காலத்தில் முன்மொழிந்தார். அவர் முன்மொழிந்த கல்வி உதவித்திட்டங்கள் ஏதோ ஆரம்பப்பள்ளி அல்லது உயர்நிலைப் பள்ளிப் படிப்பில் இலவச பாடப்புத்தகங்களையும், சீருடைகளையும் மட்டும் கொடுத்து முடித்து விடுவதோடு நின்று விடாமல் உயர் கல்வியில் அவர் எட்டிய பல ஆய்வுப் பட்டங்களையும் தலித் மாணவர்கள் பெற வேண்டும். அதுவும் அவர்களின் உளவியலைக் காயப்படுத்தாத எவ்வித பணத்தடையும் இல்லாமல் பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு தலித் மாணவர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கல்வி உதவித் திட்டம் தான் “10 -ஆவது படிப்புக்குப் பிந்தைய கல்வி உதவிதொகைத் திட்டம் (Post Matric Scholarship)”. கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக சரிவர செயல்படாத இத்திட்டத்தை பயனாளிகளான தலித் மாணவர்களும், பேராசிரியர்களும் விழிப்புடன் பரவலாக அறிந்து வைத்திருக்காததினால் இத்திட்டத்தின் மீது ஏற்பட்டிருக்கும் ஆபத்தையும் கவனிக்க முடியாமல் போய்விட்டது.

ஆதி திராவிடர் நலம் – சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் (சிறுபாண்மையினர் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதி திராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய கிறித்துவ ஆதி திராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் – வழிகாட்டு நெறிமுறைகளை உள்ளடக்கியதே “அரசாணை எண் : 92 (11. 09. 2012)”. இந்த அரசாணை -92 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற விழிப்பு நிலையை தலித் மாணவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட ‘துடி இயக்கம்’ ஒரு மாபெரும் பிரச்சாரமாக இன்று தமிழகம் முழுவதிலும் முன்னெடுத்துச் சென்றுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும் தொடர் போராட்டங்களின் மூலம் தற்போது எட்டியிருக்கும் “அரசாணை எண் : 6 -லிருந்து அரசாணை எண் : 92 -ஆக மாறிய அரசாணை மீது சமகாலத்திலேயே சத்தமில்லாமல் நிகழும் பேராபத்துக்களிலிருந்தும் அதனை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் தேவை.

Thudi - 31980 வரையிலும் எவ்வித செலவுகளும் இல்லாமல் பொறியியல், மருத்துவம், வேளாண்மை போன்ற தொழில் படிப்புகளை படித்து முடித்த தலித் மாணவர்கள் 1985 -க்குப் பின் புற்றீசல் போல சுயநிதிக் கல்லூரிகள் பெருகியதும் மாபெரும் பின்னடைவை தொழில் படிப்புகளில் எதிர் கொண்டனர். அதாவது அவரவர் விருப்பத்திற்கிணங்க சுயநிதிக் கல்லூரிகள் நிர்ணயித்த அதிக பட்சக் கட்டணத் தொகையை செலுத்த முடியாமல் திணறினர். காரணம் மத்திய அரசு முழுமையாக வழங்கிய போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகையை அவ்வப்போது ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் 1985 -லிருந்து 6. 01. 2012 வரையிலும் மனமுவந்து அளிக்க மறுத்தன. இந்த அரசுகளுக்கு தார்மீக ஆதரவளித்து வந்த தலித் கட்சிகளும் கூட தங்களின் கல்வி உரிமை பறிபோகிறதே என எள்ளளவும் பதறி, அரசை நிர்ப்பந்தித்து ஏதும் கோரவில்லை. இதன் விளைவு என்ன ஆனது என்றால் தொழில் படிப்புகளில் குறிப்பாக பொறியியல், மருத்துவப் படிப்புகளில் தலித் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் அபார வீழ்ச்சியை சந்தித்தனர். இத்தகைய வீழ்ச்சியை சரி செய்து, பொருளாதாரச் சுமையின் தங்கு தடையின்றி சுயநிதிக் கல்லூரிகளிலும் தலித் மாணவர்கள் 100%  படிக்க வேண்டும் என்பதற்காக  மத்திய அரசால் வழங்கப்படும் முழு கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையாக வழங்க போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டம் வழி வகை செய்தது.

Thudi - 4அதனடிப்படையில்  அரசாணை எண் : 6 -ஐ அரசாணை எண் : 92 -ஆக மாற்றி நிறைவேற்றும் பொருட்டு   அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற குளிர்கால கூட்டத் தொடரின் “துணை நிதிப்பட்டியலில் (Supplementary Budget) ” இருந்து சுமார் 600 கோடியை தலித் மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கி அறிவித்தது (அரசாணை எண் ” 105 ஆ. தி. ந. 9. 12. 2013). கடந்த தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிடும்போது வெறும் 150 கோடி வரை மட்டுமே இருந்த கல்வி உதவிக்கான ஒதுக்கீட்டை தற்போதைய அ.தி.மு.க அரசானது நான்கு மடங்கு உயர்த்தியது ஒரு வகையில் பெரும் சாதனை தான். ஆனால் தற்போது போய்க்கொண்டிருக்கும் மாணவர் சேர்க்கையைக் கணக்கில் கொண்டால் 600 கோடி போதாது 900 கோடி தேவைப்படுவதாக “துடி இயக்கம்” வலியுறுத்துகிறது.

சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு முழுக் கல்விக் கட்டணத்தையும் அளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டையும் உள்ளடக்கியது தான் இந்த 600 கோடி. அறிக்கையின்படி பார்த்தால் பொறியியல் படிப்பில் கவுன்சிலிங் மூலமாகச் செல்ல ஆண்டுக்கு ரூ. 40000/- மும், சுயநிதிக் கல்லூரிகளில் மேனேஜ்மென்ட் ஒதுக்கீட்டில் செல்ல ரூ. 70000/- மும் அரசாணை : 6 -லும், அரசாணை ” 92 -லும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே நடப்பு துணை நிதிப்பட்டியலில் 600 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழக சட்டமன்றத்தால் ஒப்புதல் பெற்று ஒதுக்கப்பட்ட 600 கோடியை நடைமுறைப்படுத்தும் அரசாணையை மறுத்து “சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி அளிக்க முடியாது” என தமிழக நிதித் துறை சட்டமன்றத்துக்கும் மேலான ஒரு அதிகாரத்தை கையிலெடுத்திருப்பதாக ஓய்வு பெற்ற கூடுதல் தலைமைச் செயலர் இரா. கிறிஸ்து தாஸ் காந்தி அய். ஏ. எஸ் 24. 1. 2014 -ல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Christudoss - 2சாதாரண கவுன்சிலிங் முறையில் வெறும் 15000 தலித் மாணவர்கள் தான் பொறியியல் படிப்பில் சேர முடியும். இந்த எண்ணிக்கைக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2013 -ல் தற்போது 15000 தலித் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால் அரசாணை ” 92 – ஐ பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டில் சுயநிதிக் கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்காக 15000 தலித் மாணவர்கள் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் இது வரையிலும் 10 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரத்துக்கு மேல் பொறியியல் படிப்பில் தலித் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது இல்லை. இந்த புள்ளி விபரத்துடன் ஒப்பிடுகையில் தலித் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், சேர்க்கை ஆர்வமும் இருமடங்கு உயர்ந்துள்ளது இது வரையிலும் இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை. பொருளாதாரச் சுமைகளில் முட்டி மோதி பொறியியல் படிக்கும் தலித் மாணவர்களும் கடன் வாங்கித் தான்  படிக்கிறார்கள். இன்னொருபக்கம் பார்த்தால் மருத்துவப் படிப்புக்கு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்தும் ஒராண்டுக்கு 25 தலித் மாணவர்களாவது பணம் கட்ட கல்வி உதவியில்லாமல் படிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் தலை கீழாக மாற்றி ஒரு வித சமச்சீர் முறையை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய கொண்டு வரப்பட்ட அரசாணை : 105 -ஐ தமிழக முதலமைச்சருக்குத் தெரியாமலேயே, தமது அதிகார வரம்பை மீறி சுயநிதிக் கல்லூரி மேனேஜ்மென்ட் கோட்டாவை தணிக்கை செய்து தனி ஆணை எதுவும் பிறப்பிக்காமல் சட்டமன்றம் ஒப்புதல் அளித்த நிதியை வழங்கமாட்டோம் என நிதித்துறை கூறுவது ஏற்புடையதல்ல என கிறிஸ்து தாஸ் காந்தி அய். ஏ. எஸ் குற்றம் சாட்டுகிறார்.

Thudi - 5சமூக ஒவ்வாமைகளின் காலக் கொடுமையிலும் டாக்டர் அம்பேத்கர் எட்டிய உயர் கல்வி போன்று மனமுவந்து கல்வி உதவி அளிக்க இன்று நம்மிடம் “கெயிக்வாட்கள்” இல்லை என்றாலும் கல்வியை தர்மமாகத் தர இனி கெயிக்வாட்கள் நமக்குத் தேவை இல்லை. மாறாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை அடிப்படை உரிமையாக்கி “அரசு உத்திரவாதப்படுத்தும் இறையாண்மை காப்புறுதி – Sovereign Guarantee” தலித் மாணவர்களின் உயர் கல்வியிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சுயநிதிக் கல்லூரிகளில் தொழில் படிப்புகள் படிக்க தலித் மாணவர்களுக்கு வழங்கிய 600 கோடியை அரசாணை : 92 -ன் படி அப்படியே வழங்க வழி வகை செய்ய வேண்டும். மேலும் இன்றைய தலித் மாணவர்களின் கூடுதலான தேர்ச்சியையும், சேர்க்கையையும் கவனத்தில் கொண்டு 600 கோடியை 900 கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு பட்டியல் இன துணைத்திட்டத்தில் இருந்து பிற துறைகளுக்கு திருப்பி விடப்படும் நிதியை தடுத்து நிறுத்தி அரசாணை : 106 -ஐ காலாவதி செய்து, அரசாணை எண் : 6 மற்றும் அரசாணை எண் : 92 – ஐ காபந்து செய்து உயர்கல்வியில் தலித் மாணவர்களின் கனவு நனவாக்கப்பட வேண்டும்.  – அன்புசெல்வம்.   

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சிவகாமியின்: அரிதிலும் அரிதான புலிவாதம்!

Sivakami Puthiya thalaimuraiடெல்லி மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளையும், அதனையொட்டிய கொலையையும் முன்வைத்து 13.09.2013 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்த்திய நேர்படப்பேசு நிகழ்ச்சியில் சமூக சமத்துவப்படையின் (SSP) தலைவர் சிவகாமி அய்.ஏ.எஸ் பங்கேற்று அவ‌ர் தெரிவித்த  பெண்கள் மீதான பாலியல் பிரச்சனைகளையும், அதனூடாக‌ ஈழப்புலிகள் குறித்துப் பேசிய கருத்துக்களுக்கும் எதிர்வினையாக நாகரிகமற்ற, கீழ்த்தரமான, அறிவார்த்தமில்லாத‌ விமர்சனங்களை வலைத்தளங்களில் கண்ட பின்னரே தலித் மனித உரிமைப் பார்வையில் சில குறிப்புகளை முன் வைக்கிறேன்.
—————————————-
நிர்பயா வழக்கில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அரிதிலும் அரிதான தூக்குத் தண்டணை குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் பார்வையில் சிவகாமி மிகவும் கூர்மையான விவாதங்களை நேர்படப்பேசு நிகழ்ச்சியில் எழுப்பினார். நடுத்தர வர்க்க மேட்டுக்குடி கலாச்சார மனோபவம் கொண்ட பெண்ணிய வாதிகளுக்கும், தலித் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் அவரின் அடித்தளப் பார்வையிலான விமர்சனம் சற்று எரிச்சலானது. அதிலும் அவர் சொல்ல வந்த‌ கருத்து எதையும் முகம் சுளிக்காமல், மற்றவரை நேருக்கு நேர் விமர்சிக்கின்ற ஆளுமை கொண்டவராக இருந்ததினால் விவாதத்தினூடாக விடுதலைப்புலிகள் பற்றியும் பேசினார்.
அவர் பேசிய கருத்து என்னவென்றால் “விடுதலப்ப்புலிகள் ஈழத்தமிழருக்காகப் போராட்டம் நடத்தும்போது ஈழப்புலிகள் இராணுவத்தில் சில பெண்கள் இருந்தார்கள். ஈழப்புலி இராணுவத்தின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு வந்த போது என்ன பதில் சொன்னார்கள் என்றால், உயிரையே பணயம் வச்சி ஒருத்தன் நாட்டுக்காக உழைக்கும்போது இது அதோட ஒப்பிடுகையில் ஒரு சாதாரண விஷயந்தான் என்பதை செய்திகளில் நான் படிச்சேன்” என்று கருத்து தெரிவித்தார். அவரின் கருத்தை இடை மறித்த  நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரனும், வழக்கறிஞர் அருள்மொழியும் நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஆதாரமற்ற செய்திகளை அவதூறாக புலிகள் மீது சொல்லுகிறீர்கள் என்று பேசினார்கள். இதனையடுத்த தொடர் விவாதங்களில் “பாரீசில் வாழும் தமிழர் ஒருவர் என்னிடம் இதனைப் பகிர்ந்து கொண்டார். என்னிடம் இதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன” என சிவகாமி விளக்கமளித்தார். இறுதியில் வழக்கறிஞர் அருள்மொழியும், திலகவதியும் இதனை மீண்டும் மறுத்தார்கள் (பார்க்க இணைப்பு – http://www.dailymotion.com/video/x14o4u3_nerpada-new_lifestyle).
———————————————–
சிவகாமி எந்த கருத்தை வலியுறுத்தி விவாதிக்க விரும்பினாரோ, அந்த நோக்கம் சற்று திசைமாறி சிவகாமி மீதான புலிகள் விமர்சனத்துக்கு அது அகல வழி ஏற்படுத்தியது. சுவார‌ஸ்யம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வெளியே சமூக வலைத்தளங்களில் தமிழ்ச்சாதி விசுவாசிகள் பலரும், ஃபேஸ்புக் போராளிகள் சிலரும் சிவகாமி பேசிய புலிகள் கருத்தைக் கண்டித்து விமர்சித்திருந்தார்கள். இதனை சாக்காக வைத்து சில உள்ளூர் தலித் ஆண் போராளிகளும் கூட “இன்ஸ்டன்ட் எதிர் வினையாற்றியது்” தமிழக தலித் போராட்ட நிகழ்ச்சி நிரலில் மறவாமல் குறிப்பிடத்தக்கது. இவர்களில் சிலர் சிவகாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த‌தோடு மட்டும் நில்லாமல், வெறும் அனிமேஷன் சண்டைக்காட்சி போர்களை சினிமாவில் பார்த்து போரடித்துப்போன‌ அனுபவத்தில் இருப்பதால் திடீரென உணர்ச்சிவசப்பட்டு சிவகாமியின் ஒடுக்கப்பட்ட தலித் ஆளுமையையும், அவரது பாலியல் அடையாளத்தையும் கொச்சைப்படுத்தி கீழ்த்தரமான, கேவலமான கண்ணோட்டங்களில் வசை பாடி ஸ்டண்ட் அடித்திருந்தார்கள். சிவகாமியின் தலித் ஆளுமை மீதான பாலியல் ரீதியிலான, சாதி ரீதியான வசைபாடலை பொறுப்புள்ள சிலர் இரண்டு வரியில் கண்டன உரையாக‌ எழுதி கண்டித்த‌தும் வரவேற்கத்தக்கது. சமகால தமிழக அரசியலில் சிவகாமியை விடக் கேவலமாக புலிகளை பார்ப்பனர்கள் விமர்சித்தபோது இடுப்பு எடுபடாமல் படுத்துக் கிடந்த தமிழ்த்தேசியவாதிகள் முடிந்த வரையிலும் மோதிப்பார்த்து சைலன்டாக சரணடைந்து கிடக்கும் வெறுப்பில் இருக்கும்போது, அதிகாரத்தின் – சாதியாதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இல்லாத சேரியில் களமாடும் சிவகாமியை மட்டும் விட்டு வைப்பார்களா? அவரவருக்கே உரித்தான சமுகப் பொதுப்புத்தி சில்மிஷங்களில் நின்றே சிவகாமியை சீண்டினார்கள்.
மிகவும் பெரிதுபடுத்தப்படாத, பெரிதுபடுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் அற்ற விவாதம் இல்லை என இதனைப் புறக்கணிக்க முடியாது. காரணம், சமீப காலங்களில் தமிழ் அடையாள அரசியலில், விடுதலைப்புலிகள் ஆதரவு, தமிழீழ விடுதலை என்பதன் மீது தலித்துகளின் கண்ணோட்டம் சற்று மாறியிருக்கின்றது. இதன் விளைவாக  இன்றைய தலித்துகளின் முழுநேர உழைப்பையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் தலித் விடுதலைக்கு செலவிட முடியாமல் மடைமாற்றி தமிழ்த்தேசிய அரசியலுக்கான‌ தார்மீக ஆதரவின் அடிப்படையில் சமகால தலித் எழுச்சி பாழடிக்கப்பட்டு, குத்தகை விடப்ப‌ட்டது என்கிற விமர்சனம் தலித் அமைப்புகள் மீதே தலித்துகளால் முன் வைக்கப்பட்டுள்ளன‌. இத்தகைய‌ விடுதலைப்புலிகள் விவகாரங்களில் சமகால தலித்துகளின் அடையாள அரசியல் நிலைப்பாடும், கோட்பாடும் மாறி வரும் சூழலில் சிவகாமி வெளிப்படுத்திய கருத்து ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது.
————————————————————–
உலக அளவில் ஒடுக்கப்படும் தலித் மனித உரிமை மீறல்களையும், சர்வதேச இனக்குழுக்களின் போர் மரபு அரசியலையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய ஆயுத கலாச்சாரத் திணிப்பு நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்ற, கண்டிக்கின்ற மனித‌ உரிமை செயல்பாட்டாள‌ர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் சிவகாமியின் கருத்தில் முரண்பட பெரிதும் எதுவும் இல்லை. அதையும் கடந்து முரண்பட விரும்பினால் புலிகளைப்பற்றி நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அப்படி ஒரு ஆதாரம் இருந்தால் வெளியரங்கமாக்குங்கள், விவாதிப்போம் என்று தான் அதிக பட்சமாகக் கேட்க முடியும். அதை விட்டு விட்டு அவர் ஒரு தலித் என்பதற்காகவோ, ஒரு பெண் என்பதற்காகவோ ஏற்கனவே இந்திய‌ சாதியச் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ள, சாதிய, ஆணாதிக்க பொதுப்புத்தி சில்மிஷங்களில் நின்று எதிர் வினையாற்ற எந்த ஆணுக்கும் உரிமை கிடையாது. இருந்தபோதிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியல் ரீதியான பாதிப்புகளினூடாகப் பயணம் செய்யக்கூடியவராகவும், தற்போதைய தலித் – சாதி மற்றும் ஆணாதிக்க அடையாள‌ அரசியலில் போட்டியிட விரும்பாமல் பால் சார்ந்த‌ முரண் நிலை தலித் அரசியல் களத்தில் செயல்படுபவராக சிவகாமி இருப்பதால் தனது வலைத்தளத்தில் 15.09.2013 அன்று சற்று மெல்லிய குரலில் இவ்வாறு தற்காலிக வருத்தம் தெரிவித்திருந்தார். (Dear All, Thank you for all the feedback you have given me through face book for my statement in Pudhiya Thalaimurai T.V. Channel on the 13th September 2013. They were quite educative. In the absence of concrete evidence I sincerely feel that I should not have spoken like that. I have great regards for all those who have struggled for their equal status in Sri Lanka and lost their lives. Even now I regret for my inability to support their cause in Sri Lanka as I am struggling for a similar cause in Tamil Nadu and India. Therefore I apologize from the bottom of my heart for my statement. Sivakami Palanimuthu).
சிவகாமி தெரிவித்திருந்த வருத்தத்தை ஆமோதிக்கிறவர்களில் ஒருவனாக நான் இருந்தாலும் கூட, புலிகள் குறித்த சிவகாமியின் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறு முரண்பாடு உண்டு. அதே சமயம் பெண்கள் பார்வையில் விடுதலைப் புலிகள் குறித்து அவர் கூறிய கருத்தில் உண்மை இல்லை என்றும் என்னால் மறுக்க முடியாது.      
——————————————————–
ltte_womanநிறவெறிக்கு எதிரான இனக்குழுக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களையும் மிஞ்சிய உயர்வு மதிப்பீடு (பெண்கள் விஷயத்தில்) விடுதலைப்புலிகள் மீது எனக்கு உண்டு. குறிப்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார அதிகாரப்பூர்வ அமைப்பான “பெண்கள் வளர்ச்சி மற்றும் மறுவாழ்வு மய்யம் – CWDR” மீது அளவுகடந்த மரியாதை உண்டு. இந்த அமைப்பு உருவாக்கமானது யதார்த்தமாக நடந்த ஒன்ற‌ல்ல என்றாலும், ஏதோ ஒரு வகையில் பெண்களால் ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்ட அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்ட அமைப்பு என்று கூட சொல்லலாம். ஆனால் விடுதலைப்புலிகளின் வரலாற்றில் தமிழ்ப்பகுதிகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினை கூறப்பட வேண்டியது. குறிப்பாக 1983 -களுக்குப் பிறகு வாழ்வாதர கையிருப்பு கட்டமைப்பில் சிறிய அளவிலான சரிவை புலிகள் எதிர் கொண்ட பின்னர் அமைப்பின் போர்க் கட்டமைப்பு மீட்டுருவாக்கதில் சில அதிரடி யுக்திகளைக் கையாண்டனர். திலீபன் மற்றும் கிட்டு மேற்பார்வையில் புலிகள் இயக்கத்துக்கு வலு சேர்க்க “தமிழ் இளம் பெண்கள்” (Tamil Juveniles) சேர்க்கைக்கு ஊக்கமளித்தனர். இயக்கத்துக்கு தேவைப்பட்ட பெண்களைப்பெற‌ தமிழ்க் குடும்பங்கள் நோக்கி அழைப்பும் விடுத்த‌னர். காலப்போக்கில் விடுதலைப் புலிகளில் பெண் புலிகள் உருவான பின்னர் யதார்த்தமாகவும், இயற்கையாகவும் உருவாகும் ஆண் – பெண் புலிகளின் காதல் என்பது அவர்களின் குழுவில் மறுக்கப்பட்டது. அரசல் புரசலாகத் தென்பட்டால் கூடவே கண்டிக்கவும் பட்டது. அதனையும் மீறி காதல் புரிந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் நன்னடத்தையில் ஒழுக்கக்கட்டுப்பாடு கராறாக விதிக்கப்பட்டது. அத்தகைய கட்டுப்பாட்டை புலிகள் எவ்வாறு பாதுகாத்துப் பின்பற்றினார்கள் என்பதை அப்போதைய டெல்லி சி.என்.என் நிருபர் அனிதா பிரதாப் புலிகளுடனான தன்னுடைய குறுகிய கால பயண வாழ்க்கையின் நேர்காணல் அனுபவத்திலிருந்து பதிவு செய்துள்ளார் (Anitha Prathap “Island of Blood” Viking Penguin, August 2002, pp 107-109 cont). மேன்மை பொங்கும் இக்கருத்தாடலை சர்வதேச அரங்கில் பறைசாற்ற பின்னாளில் இதனை ஒரு திரைப்படமாக எடுக்கவேண்டும் என அற்புதமான திரை இயக்குனர் மகேந்திரனுக்கு விதிக்கப்பட்ட “கதை வரைபடம்” கூட எதிர்பார்த்த அள‌வில் கைகூடாமல் போனது.
1987 -களுக்குப் பின் எவரும் எதிர்பாராத இந்திய அமைதிப்படை (IPKF), இலங்கை ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை (STF) போன்ற படை வீரர்கள் இணைந்து தமிழ்ப்பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்ட பாலியல் வன்கொடுமைகளுக்குப் பின் ஒட்டு மொத்த இலங்கை தமிழ்ச் சமுகமே தமிழ்ப்பெண்கள் மீது பரிவு காட்டியது. தங்களின் இயக்கத்தில் கரும்புலிகளாகவும், பெண் புலிகளாகவும் இணைவதைப் பெருமையாகவும், போர்க்குணப் பண்பாடாகவும் மார்தட்டிக் கொண்டார்கள். இவர்களுடன் பட்டும் படாமல் கிறித்துவத் திருச்சபைகளின் பெண்கள் அய்க்கியச் சங்கங்களும், சர்வதேச பெண்கள் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தமிழ் நிலப்பரப்பின் மீது “மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு”   (Rehabilitation and Resettlement) பணிகளை வளர்ச்சி நோக்கி செயல்படுத்தினார்கள். இதன் பின்னர் ஈழத்திலும், புலிகள் அமைப்பிலும் பெண்களால், பெண்புலிகளால் ஏற்பட்ட குறைந்த பட்ச சமுக மாற்றங்களையும், ஜனநாயக ரீதியிலான செயல்பாடுகளையும் ஊடகங்கள் வழியாக உலக அரங்கிற்கும் ஒளிபரப்பப்பட்டது.
1990 -களில் முற்போக்கு பேசிய‌ தமிழ் – சிங்கள எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நிலவிய பெண்களின் பங்கேற்பு குறித்தும், நிலைப்பாடு குறித்தும் பெண்ணியப் பார்வையில் நேற்மறையாக‌ எழுதத் தொடங்கினார்கள். இவர்களின் எழுத்துக்கள் 1995 -ல் பீஜிங்கில் நடைபெற்ற  நான்காவது சர்வதேச பெண்கள் மாநாடு வரையிலும் எதிரொலித்தது. இதன் விளைவாக 1997 -ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பின் அய்.நா உறுப்பு அங்கத்தினராக இருந்த‌ ராதிகா குமாரசாமி இவர்களை “ஆயுதமேந்திய கன்னிகைகள்” (Armed Virgins) என்று வர்ணித்து உலக இனக்குழு விடுதலைக்கான போர்மரபுப் பண்பாட்டில் ஒரு புதிய அத்தியாயத்தை பெண்புலிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்தார். இது போன்று அதிக பட்ச நற்பண்புகளை போராட்டக்களத்தில் விடுதலைப் புலிகள் வளர்த்தெடுத்ததை எளிதாகக் கொச்சைப்படுத்திவிட முடியாது.
அந்த வகையில் சிவகாமி புலிகளின் பெண் நன்னடத்தையை (மட்டுமே) கொச்சைப்படுத்தி கருத்து தெரிவித்திருப்பதாக தமிழ்ச் சமுகம் உணரும் என்றால் நிச்சயம் அது திறந்த மனதுடன் விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
———————————
ஆனால், தொலைக்காட்சியில் நிகழ்ந்து கொண்டிருந்த சிவகாமியின் கருத்தை உற்று நோக்கினால் “பாலியல் சார் ஒழுக்கக்கேடான பண்புடைமை” (Outraging Modesty) பற்றிய உதாரணங்களை விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர் களம் கண்ட பெண்களுக்கு எதிரான வன்முறையின் பொது விசாரணைகளில் இருந்தும், அம்பேத்கர் – இராஜாஜிக்கு இடையே நிகழ்ந்த உரையாடலில் இருந்தும் மேற்கோள் காட்டினார். அவ்வளவு தான். அவர் மேற்கோள் காட்டிய‌ இந்தக் கருத்தை ஏற்கலாம்! அல்லது நிராகரிக்கலாம்! யாருடைய மனதையாவது புண்படுத்தியிருக்குமேயானால் அதனை நிரூபணம் செய்து மீள் விவாதத்திற்கு உட்படுத்த கோரிக்கை வைக்கலாம். நீதிமன்ற ஆசுவாசம் கொண்டவராக இருந்தால் தேவையெனில் வழக்கும் தொடுக்கலாம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் இந்த இடத்தில் எதை விவாதித்திருக்க வேண்டும் என்றால் அவர் சுட்டிக்காட்டிய “பாலியல் சார் ஒழுக்கக்கேடான பண்புடைமை” யைத்தான் விவாத்திருக்க வேண்டும். அப்படி விவாத்திருந்தால் விடுதலைப்புலிகளின் கடந்த காலத்தில் மட்டுமல்ல, சமீப காலமாக இந்திய சிவில் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் யாருக்கு? ஏன்? நிகழ்கிறது என விரிவாகப் பேசியிருக்கலாம். குறைந்த பட்சம் அது நம் வீட்டுப் பெண்களுக்காவது பயனளித்திருக்கும். மாறாக‌ பெண்கள் விஷயத்தில் விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த அவரது கருத்தே தவறு என்றோ, பொய் என்றோ, சூழலுக்குப் பொருத்தம் இல்லாதது என்றோ எவரும் இறுதித் தீர்ப்பு எழுத முடியாது. ஆணாதிக்க மனோபவம் திணிக்கப்பட்ட‌ சக பெண்களே கூட இதனை ஒருபக்கச் சார்பு வாதத்திற்கு உட்படுத்தவும் முடியாது. பெண்கள் மீது நிகழும் பாலியல் குற்றங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என பெண்களுக்கு எதிரான பெரும்பண்மையான பாலியல் வண்புணர்ச்சி வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பெழுதுவதை கண்டித்து, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆதாரங்கள் கேட்பது நாகரிகமற்றது என பெண்கள் ஆணையங்கள் உட்பட கருத்து கோரிவரும் சூழலில் சிவகாமி தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கேட்டு பெண்கள் குரல் எழுப்பியது சற்று விந்தையாக இருந்தது.
அதாவது,
– சிங்களவர்களே சொல்லாத ஒன்றை சிவகாமி சொல்வதாகவும்
– இஸ்லாமியப் பெண்களே புலிகளை கற்புடைமையோடு போற்றியதாகவும்
– எந்த பெண்களுக்கு நீதி செய்ய முற்பட்டாரோ அந்த பெண்களுக்கே இழைக்கப்பட்ட துரோகமாகவும்
– உமா சங்கருக்கு அடுத்தபடியாக பரபரப்பு விளம்பரப் பிரியராகவும்
– சுவாரஸ்யம் பொங்கப் பேசும் அதிரடிப்பேச்சாளராகவும்
– பச்சமுத்து வகையறாவின் தமிழீழ ஆதரவுக்குக் களங்கம் கற்பிக்க வந்தவராகவும்
சிவகாமி மீது சொல்வாதங்கள் வீசுவது ஏற்புடையதல்ல. யாருடைய பெயரையும் குறிப்பிட்டு விமர்சிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் அப்படித்தான் விமர்சிப்போம். அதையும் தாண்டி முரம் – செருப்பால் அடித்து தமிழ்நாட்டை விட்டே விரட்டுவோம் என்று சூத்திரத்தனமாக அடம் பிடித்தால் இது வெறுமனே சிவகாமி என்கிற ஒரு தனி மனிதர் மீது வைக்கப்பட்ட விமர்சனமாகப் பார்க்க முடியாது. மாறாக சமீபகால ஈழ ஆதரவில் தலித்துகள் மேற்கொண்ட தமிழ் அடையாளப் பகுப்பாய்வு விமர்சனத்துக்கான காத்திருந்து நிகழ்த்திய எதிர்வினையாகவே கருத்தில் கொள்ள முடியும். அப்படியானால், முள்ளிவாய்க்காலில் நடந்த போர்க்குற்றத்தில் ராஜபக்சேவை விசாரணை செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் ஆர்வலர்கள் போராடுவது எத்தகைய முற்போக்கு உரிமையோ அதைப்போல, அகில உலக அளவில் விடுதலைக்காகப் போராடுகின்ற இனக்குழு சமுகங்களின் போராட்ட உள்கட்டமைப்பில் நிலவும் இருபால் போர்க்குற்றங்கள் மீதும் வெள்ளை அறிக்கை வேண்டும், விசாரணை வேண்டும் என சர்வதேச பெண் உரிமை அமைப்புகளுடன் இணைந்து உக்கிரமாகக் குரல் எழுப்புவதற்கு தலித் பெண்களுக்கும் உரிமை உண்டு. ஒருவேளை அப்படி ஒரு நகர்வு விரைவுச் செயல் திட்டம் சார்ந்து மனித உரிமைக் களத்தில் நகருமேயானால் அது இன்னும் சிக்கலான இடத்தில் புலிகளைக் கொண்டு போய் நிறுத்தும். பிறகு செம்மணி புதை குழி போல தோண்டத் தோண்ட எவரும் எதிர்பாராத சூழல் எதிர் காலத்தில், இப்படியும் ஒரு நிலை உருவாகலாம்.
sivakami_pகாரணம், கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மீதும், அவர்களது அமைப்பின் மீதும் பெண்ணியப் பார்வையில் எழுப்பிய கேள்விகளும், அதன் மீது நிறுவப்பட்ட புலிகள் கட்டமைப்பு ஆணாதிக்கப் பிம்பங்களின் செயல்பாடுகளும் இன்னும் கருத்தளவில் கூட ஏற்கப்படாமல், ஜனநாயக‌ப்போக்கில் பகுப்பாய்வுடன் விமர்சிக்கப்படாமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
———————————————-
1970 -களில் திரளாக வன் முழக்கத்துடன் அணிதிரண்ட ஆண் புலிகள் அமைப்பின் குழு அடையாளமானது “நம்ம பையன்கள்” (Our Boys) என்கிற ஆணாதிக்கக் குறியீட்டின் அடையாள அரசியலில் தான் முதலில் தொடங்கியது. ஏற்கனவே சுட்டிக் காட்டியதைப் போல 1992 -களில் புலிகள் குறித்த விமர்சனம் எழுத முற்பட்ட முற்போக்கு சிந்தனையாளர்களில் ஒருவரான குவாத்ரி இஸ்மாயில் புலிகள் அமைப்பை “பையன்கள் என்றைக்கும் பையன்கள் தான்” (Boys will be Boys) என்றே அடையாளப்படுத்தினார். வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பிய ஃப்ரன்ஸ் ஃபனான் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் “விடுதலைப்புலிகளின் சித்தாந்தம் என்பது கண்டிப்பான ஆண் சித்தாந்தம்” (The LTTE Ideology was a strictly Male Ideology) என்றே வரையறை செய்கிறார். இத்தகைய ஆண் அடையாள, வெகுமக்கள் ஆண் திரட்சி இயக்கத்தின் போர் ஈடுபாட்டையும், ஆண்குழு அரசியல் யுக்திகளையும் அதன் மீதான மனித உரிமை மீறல்களையும் 24 ஆண்டுகட்கு முன்பே ஈழத்து மனித உரிமைப் போராளி டாக்டர் ரஜினி ராஜசிங்கம் திரக்மா “மிகு ஆண்மைப்போர்” (Machismo War) என்று பச்சையாக விமர்சித்தார். கடைசியில் அவர் கூட ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லப்பட்டார். 1992 -காலக்கட்டத்தில் இலங்கையின் உள்ளூர் உட்பட சர்வதேச அளவில் இயங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு ” புலி ஆணாதிக்கவாதிகளின் செயல் திட்டம்” (A Patriarchal Project of LTTE) என்கிற விமர்சனத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
ஆக, முழுக்க முழுக்க ஆண்களால் வடிவமைக்கப்பட்ட இத்தகைய ஆணாதிக்க போர்க்குழுவில் தமிழ்ப்பெண்கள் ஏன் புலிகளாக சேர்ந்தார்கள்? அன்றைக்கு அதற்கான நெருக்கடி என்ன? என்பதை புலம் பெயர்ந்து நியூசிலாந்தில் வாழும் டாக்டர்.என் மாலதி துண்டு துண்டாக ஆய்வு செய்து எழுதிய‌ தன்னுடைய நூலில் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளார் (Dr.N.Malathy, “A Fleeting Moment in my Country” Clarity Press, Atlanta, 2012. pp 79-80 / 106-107 cont). இக்கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள பெரும்பண்மையான குறிப்புகளை இவரது எழுத்துக்களில் இருந்தும், கிறித்துவ திருச்சபைகளின் “அமைதி மற்றும் ஒப்புரவு குழு” (Peace and Reconciliation) அறிக்கைகளில் இருந்தும் தான் பயன்படுத்தியுள்ளேன். சிங்கள ராணுவத்தின் கட்டாயமான பாலியல் வன்கொடுமைக்குப் பயந்தும், வறுமையை, வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் பெண்கள் புலிகள் அமைப்பில் சேர்ந்தார்கள் என்று மாலதி கூறினாலும், படையில் சேராத தமிழ்ப் பெண்கள் ஏதோ ஒரு வகையில் புலிகள் சார்பு வாழ் நிலையை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்கள், ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவான‌து  என்பதையே இது அர்த்தப்படுத்துகின்றது. இத்தகைய புலிகள் சார்பு வாழ்நிலையில் “போர்க்கைம்பெண்களும்” (War Widows) உள்ளடங்குவர். மறுவாழ்வு உதவி கிடைக்காத இவர்களில் சிலர் எப்படி தாக்குப்பிடித்து வாழ்ந்தார்கள் என்பனவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால், ஒரு சராசரி மனித வாழ்நிலையை கொண்டிருந்த, சமூக பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையைப் புலிகள் மறைமுகமாகக் கொண்டிருந்தார்கள் என்பதிலிருந்தும் சிவகாமியின் விமர்சனம் இன்னொரு தளத்தில் விரிவாக‌ நீள்கிறது.
ஆனால் இவற்றுக்கு அப்பாலும் சொல்ல மறந்த கதைகள் வன்னிக்காடுகளில் நிசப்தமாக இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
கட்டாய ஆள்சேர்ப்பு (Forced Recruitment) நடவடிக்கைகளில் புலிகள் களம் இறங்கியபோது வன்னி பகுதிகளில் நுழைந்து தமிழ்ப்பெண்களை இராணுவத்துக்கு அழைத்தார்கள். வர மறுத்துவர்களை எவர் அனுமதியும் பெறாமல் இரு சக்கர வாகனத்தில் (வெள்ளை வேன் போல) முன் பக்கம் ஒருவரும், பின் பக்கம் ஒருவரும் அமர்ந்து கொள்ள தூக்கிய பெண்ணை நடுவில் உட்கார வைத்து தப்பித்து விடாமல் அழைத்துச் செல்லப்பட்டதும், குளித்துக் கொண்டிருந்த பெண்களை கடத்திச் சென்றதும், வர மறுத்தவர்களை சக அமைப்பினர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதும் வன்னி மக்களின் கண்களில் இருந்தும், கிறித்துவ பஞ்சமர்களின் அனுபவங்களில் இருந்தும் இன்னும் அகலாதவை. இந்த பயத்தின் காரணமாகவே 15 – 16 வயது நிரம்பிய இளம்பெண்களை உடனடித் திருமணம் செய்து, கழுத்தில் தொங்கும் தாலியைக் காட்டியும் பெண்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். சிலர் அந்தந்த திருச்சபைகளின் ஆயர்களிடம் முறையிட்டு காப்பகங்களிலும், மடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளார்கள். வன்னி பகுதிகளில் மட்டும் நிலவிய இது போன்ற தமிழ்ப்பெண்கள் அனுபவம் இதுவரை வெளியில் பேசப்படாதது தான்.
1989 செப்டம்பர் 21 – ல் கண்மூடித்தனமாக‌ கொல்லப்பட்ட டாக்டர். ரஜினி ராஜசிங்கம் திரக்மாவின் மரணம், அவரின் நெருங்கிய தோழி சாந்தியின் வாக்கு மூலம், இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற பாரதியின் மரணம், செல்வியின் வெளியேற்றம், மரியாதைக்குரிய தோழர் மதிவதினியின் திருமணம் ஆகியவற்றுக்குப் பின்னால் இருண்டு கிடக்கும் உண்மைகள் விரிவாகத் தோண்டி விசாரணை செய்து பார்த்தால் புலிகளின் இனக்குழு இராணுவ மரபின் போர்ப்புனிதம் எதுவரையிலானது என்பது இன்னும் கூடுதலாக‌ புலப்படும்.
—————————————–
ஆண்களே, சக ஆண்களுக்காக, ஆண்களால் தீர்மானித்துக் கட்டப்படும் இயக்கமும், போர் மரபுக்குழுவும் ஆணாதிக்க ரீதியாக வெளிப்படும்போது இந்த நிலை தான் இறுதி நிலை அல்லது இத்தகைய விமர்சனங்களை எதிர்கொண்டாக வேண்டும். ஜனநாயக ரீதியாக, சட்டத்தின் ஆட்சியாக, இறையாண்மைக் கூடமாக நம் கண் முன்னே இருக்கின்ற இந்த சிவில் சமுகத்தில் எண்ணற்ற பாலியல் சுரண்டல்களும், குற்றங்களும் மலிந்து கிடக்கின்றன. அதனை உண்மை கண்டறிவதிலும், தீர்வு காணுவதிலும் மிகப்பெரிய வசதி வாய்ப்புகள் இருந்தும் இடை விடாமல் போராடிக் கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கையில் குறைந்த பட்ச ஜனநாயக ஓர்மை இல்லாத அகில உலக போர்மரபுக் குழுக்களிடமும், அவை உருவாக்கும் இராணுவ முகாம்களிலும் இதைவிட “பாலியல் சுரண்டலற்ற நீதிசார் இறையாண்மை ஜனநாயகம்” (Ruin of War Democrazy) அப்படி என்ன இருந்து விட்டது. இருந்து விடப்போகிறது என்று தெரியவில்லை.
அளவு கடந்த கட்டுப்பாடுகளும், புலி ஒழுக்க விதிகளும் பேசப்பட்ட காலத்தில் தான் கருணாவுக்கு இலண்டனில் சொர்க்கபுரி சொகுசு பங்களா வாங்கப்பட்டது. இன்றைக்கு வேண்டுமானால் அவரை எட்டப்பன் என விம‌ர்சிக்க‌லாம். புலிகளை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் என்பதற்காக மட்டும் சில நாடுகளில் தடை செய்து விடவில்லை. பணம் சார்ந்த, சொத்துக் குவிப்பு, மணி லாண்டரி, ஆயுத பேரம், குட்டித் தீவு சொகுசு வாழ்க்கை என்கிற நாடுகளுக்கிடையேயான உள்நாட்டு அரசியல் பிரச்சனையாகவும் அது நீடித்தது. இது தொடர்பாக ஸ்வீடன் போன்ற நாடுகள் வழக்குகளும் தொடுத்திருக்கின்றன.
புலிகளுக்கிடையே காதல் கூடாது, திருமணம் கூடாது என்று கட்டளையிட்ட பிரபாகரன் அவர்களே விதிவிலக்காக காதல் புரிந்தார், திருமணம் செய்து கொண்டார். வேறெவருக்கும் வழங்க முடியாத இத்தகைய விதிவிலக்கின் ஜனநாயக அறம் புலிகளிடமும், பிரபாகரனிடமும் தென்பட்ட‌து தனக்கு நெருடலாக இருந்தது என அடேல் பாலசிங்கம் தன்னுடைய அனுபவத்திலிருந்து பதிவு செய்கிறார். காரணம் பிரபாகரனும், மதிவதினியும் சந்தித்து காதல் கொள்ளும்  இடம் பாலசிங்கத்தின் வீடுகளிலும் நிகழ்ந்துள்ளது. (Adele Balasingham “The will to Freedom: An Inside view of Tamil Resistance” Fairmax Publishing Ltd, New Edition 2003, Mitcham).
ஆக, போர்மரபை விரும்பாத அகில உலக பெண் மனித உரிமைப் போராளிகள் சொல்லும் “சுருள்பெறும் வன்முறை” (Spiral of Binding the Violence) என்பதில் சக மக்களே கொல்லப்படுவது, தாக்கப்படுவது என்பதையும் கடந்து சமுக பொதுப்புத்தியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட, வசியப்படுத்தப்பட்ட, தன் பக்கம் இழுத்துக் கட்டப்பட்ட, தன்னைச் சார்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட‌ அனைத்திலும் உள்ள‌ பாலியல் சுரண்டல்களும் இத்தகைய போர்க்குற்றங்களில் உள்ளடங்கும் என்பதை பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் அய்.நா மன்றமே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
 இதுவரையிலும் பரவலாகப் பேசப்பட்ட, எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்த சாதாரண மனித உரிமைப் பார்வையில் இப்படியான விமர்சனக் கண்ணோட்டத்தை புலிகளைக் கொச்சைப் படுத்துவதற்காக எவரும் முன்வைக்கவில்லை. அப்படி எளிதாக எவரும் அவர்களை கொச்சைப்படுத்தி விட முடியாது. ஆனால் மனித உயிர் இழப்பீடுகளைக் கொண்டு இயங்கும் ஆயுத‌பாணி போராட்ட மரபில் சாதித்தது என்ன? என்று கடந்தகால துன்பியல் சம்பவங்களை அசை போட்டால் உலகின் எங்கோயோ ஒரு மூலையில் உள்ள பெண்கள் எழுப்பும் இத்தகைய விமர்சனங்களுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். ஏனெனில், ஆயுதம் ஏந்திய எந்த ஒரு இயக்கமும், இனக்குழு இராணுவமும் தங்களுக்கான தேசிய விடுதலைப் போராட்டங்களை எப்படி பெறுவது என சக பெண்களை கலந்தாலோசித்து, அவர்களின் இறுதி முடிவை ஏற்று போர் மரபுப்பண்பாட்டைக் கட்டமைப்பதில்லை. இந்த முடிவுக்கு உயிர் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதும் கேள்விக்குறி தான். பொதுவாக போரினால் ஏற்படும் இழப்புகளில் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும், குழந்தைகளும் தான் உள்ளடங்குவர் என்பதை நன்கறிவோம். போர் மரபை ஆதரிப்பவர்கள் தலித் இயக்கங்கள் போல அறிவித்து விட்டு பிறகு பெண்களுக்கு அழைப்பு விடுத்து ஆலோசனை கேட்பார்கள். ஒத்துழைக்க மறுத்தால் எதிர்வினையாற்ற எந்த போர் அறமும் விதிவிலக்கல்ல. மிகவும் கனத்த இதயத்தோடு சொல்கிறேன். எந்த பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று  இதுகாறும் களத்தில் போராடினோமோ அந்த பெண்களை இன்றைக்கு இலங்கை ஆண்களிடமும், இலங்கை இராணுவ ஆண்குறிகளிடமும் கையளித்தது தான் ஆண் விடுதலைப்புலிகளின் போர் தந்திர‌ ஒழுக்கக்கட்டுப்பாடான “தமிழ்ப்பெண் புனிதம் போற்றுதலா” என்பதையும் சிந்திக்க வேண்டும். அதன் விளைவு இன்றைக்கு என்ன ஆனது என்றால் பெரும்பாலான இலங்கை தமிழ்ப் பெண்கள் நிறைமாத கர்ப்பினிகளாகவும், பாலியல் தொழிலாள‌ர்களாகவும் ஆக்கப்பட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். சில பெண்கள் கருத்த‌டையும் செய்யப்பட்டனர். இந்த நிலையை தமிழ்ப் பெண்களுக்கு உருவாக்கிக் கொடுக்கத்தான் புலிகள் போராடினார்களா? ஒப்பிட்டுப் பார்த்தால் சிவகாமி சுட்டிக்காட்டியதைவிட மிகக்கேவலமான பெண் அறம் இது. அமெரிக்க ஏகாதிதிபத்தியத்தை எதிர்த்து முற்போக்கு பொதுவுடைமை பேசிய‌ அல்ஜீரியா, கியூபாவில் கூட இப்படியான‌ யுக்தி சாத்தியமாகவில்லை.
பிரபாகரன் உயிரோடு இருக்கின்றாரா? இல்லையா? என்பதை அறுதியிட்டு அறிந்து கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள‌ முடியாத இடவெளி “புலிப்பாச உறவு” தான் இங்கத்திய தமிழ்ச்சாதிகளின் ஒரு பக்க சார் முற்போக்கு மனோபவம். மற்றபடி மேற்கண்ட “புலிகள் VS பெண்கள்” விமர்சனம் உருவான காலத்தில் இதே மெரினாவில் சுண்டல் கொரித்துக் கொண்டிருந்தோம். பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் அமர்த்தி விடக்கூடாது என்கிற ஒற்றை நோக்கத்துக்காக இன்றைக்கு எப்படி காங்கிரஸ் கட்சியை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றோமோ அதுபோல இலங்கத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரே இயக்கமாக விடுதலைப்புலிகளை தவிர்க்க இயலாத மாற்று சக்தியாக தமிழ் அடையாள அரசியலில் ஏற்றுக் கொள்ள‌ வைக்கப்பட்டோம்.   இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு இது ஏகோபித்த ஏற்புடைமை அல்ல. இன்று பிரபாகரன் உயிரோடு இல்லை என்பதையும், இனக்குழு போர் மரபு இனி தொடராது என்பதையும், புலிகள்  மீதான நேர் – எதிர் மறை விமர்சனங்களையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தைப் போன்று இங்கத்திய தமிழ்ச்சாதிகளால் ஏற்றுப்போக முடியவில்லை என்பது சிவகாமி கருத்தில் கட்டவிழ்கிறது. இதனைக் கடந்தும் அதே பாணி விடுதலை யுக்தியை அணிதிரட்டி விடுதலைக்காகப் போராடி வெற்றி காணலாம் என நினைத்தால் இப்போது வரையிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் என்ன நிகழ்ந்ததோ அது தான் எதிர்காலத்திலும் சாத்தியமாகும்.
எங்கெல்லாம் வெகு பெண்கள் திரள் கொண்ட, அவர்களின் வழிகாட்டுதலைக் கொண்ட, தலைமையை ஏற்ற இயக்கங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்றதோ அங்கு எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும் மேற்கண்ட விமர்சனங்கள் அரிதிலும் அரிது. சமகாலத்தில் தெற்காசிய நாடுகளில் எழுச்சியடைந்துள்ள இனக்குழு பாதுகாப்பு இயக்கங்கள், பாரம்பரிய நாடோடி அமைப்புகள்,  நர்மதா பாதுகாப்பு இயக்கம் போன்ற சுற்றுச் சூழல் இயக்கங்கள், ஆதிவாசி மக்கள் இயக்கம், இயற்கைவளப் பாதுகாப்பு இயக்கம், தற்போதைய கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட இயக்கம் போன்ற இயக்கங்களின் குறைந்த பட்ச ஜனநாயக இருப்பு நிலையை தக்க வைக்க முடிந்த இடம் தான் நமக்கு தொடர்ந்து போராட‌ நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
——————————————–
Sivakami insuledதமிழீழ விடுதலைப்புலிகள் பெண்களை நேர்மறையாக பாவித்தார்கள் என்றாலும் போரைத் தூக்கி நிறுத்தும் தங்களின் போர்மரபில் பெண்களை பாலியல் சார்ந்து எந்த விதத்திலும் துன்புறுத்தவில்லை என்கிற “புலிப்புனிதம் போற்றும் புதிரை” சிவகாமி இன்று லேசாக உடைத்திருக்கிறார்.
– இந்திய ஆட்சிப்பணியில் இருந்துகொண்டே ஒடுக்கப்பட்ட தலித் விடுதலைக்காக தனது அலுவலகத்தை திறம்பட நடத்தி களமாடிய‌வர் சிவகாமி அய்.ஏ.எஸ்.
– ஆதி திராவிட நலத்துறையில் சாதி பற்றிய வெளிப்படையான உரையாடலைத் தொடங்கி வைத்து “தலித்” என்கிற வார்த்தையை அரசு கோப்புகளில், ஆவணங்களில் பதிவு செய்தவர்.
– சாஸ்திரிய மயமாக உலவிய உலகத் தமிழாராய்ச்சி மன்றங்களில் தலித் இலக்கிய விவாதங்களை அறிமுகப்படுத்தியவர்.
– தீண்டப்படும் சாதிகளால் தலித்துகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட “பஞ்சமி நில மீட்பு” உட்பட நிலவுரிமை இயக்கமாக்கியவர்.
– அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பிந்தைய தலித் எழுச்சியில் உருவான வன்கொடுமைகளில் தலித் பெண்கள் மீதான வன்கொடுமைகளை அம்பலப்படுத்தி பல்வேறு பொதுவிசாரணைகளில் அரசு பயங்கரவாதத்தைத் தோலுரித்தவர்.
– சுற்றுலாத்துறையில் இருந்தபோது புனிதத்தலம் உட்பட சுற்றுலா மய்யங்களாக இருக்கின்ற இடங்களில் பெண்கள் மீது திணிக்கப்பட்ட விபச்சார சுரண்டலை வெளிப்படையாகப் பேசி தீர்வு காண முயற்சித்தவர்.
– தலித் மாண‌விகள் அயல்நாடுகளில் உயர்கல்வி படிக்க வழி திறந்து, தலித் பெண்களின் அதிகாரப்பகிர்வையும், முடிவெடுத்தலையும் ஆண்சார்பு இல்லாமல் “தலித் அப்னா பஞ்சாயத்து” அமைத்து கொடுத்தவர்.
– ஆணாதிக்கக் கட்டமைப்பில் தலித் ஆண்கள் ஒன்றும் புனிதமாகப் போற்றப்படக்கூடியவர்கள் அல்லர் என்பதை தலித் பெண்ணிய இலக்கியமாக வடிவமைத்தவர்.
இந்த சிவகாமி தான் இலங்கையில் இருக்கும் தமிழ்ப்பெண்கள் மீதான புலிகளின் பாலியல் பிரச்சனையையும் புழுதி கிளப்பியிருக்கிறார். 
எனினும், வடிவத்தால் அல்லாமல் “பறச்சி, தேவடியா, நடத்தை கெட்டவ, அந்த மாதிரி ஆளு, அரவாணி அவ, எவ அவ, வரலாறு தெரியாம அய்.ஏ.எஸ் ஆனவ என வக்கிரக்கேவலமாக வார்த்தைகளால் புணர்ந்த சூத்திர தமிழ்ச்சாதிகளின் நடவடிக்கைகளைக் காணும்போது, என் உயிரிலும் மேலான‌ எங்களின் தொப்புள்கொடி உறவான‌ ஈழத்தமிழ் புலிகள் மீதும் பெண்கள் விஷயத்தில் மரியாதை கலந்த பலத்த சந்தேகம் திரும்பியுள்ளது. இது ஒரு பக்கம் கிடக்கட்டும். தமிழ்ச்சாதி சூத்திரர்களுக்கு வேண்டுமானால் சிவகாமி யார் என தெரியாமல் இருக்கலாம். இளவரசன் இறுதி ஊர்வலத்தில் சிவகாமி காட்டிய துணிச்சலைக் காட்ட வக்கற்ற, சந்தர்ப்பவாத, ஃபேஸ்புக் தலித் போராளிகளாகிப் போனவர்களால் எப்படி கண்மூடித்தனமாக சிவகாமியை எதிர்க்கவும், வசைபாடவும் முடிந்தது என்கிற இடத்தில் தான் புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர், ரெட்டமலை சீனிவாசன் போன்ற‌ மரணமற்ற‌ சிலைகளைக் கூட சந்தர்ப்பவாத – பிழைப்புவாதத்துக்கு கூட்டிக் கொடுத்து விட்டோமோ என்கிற ஏக்கம் மேலோங்குகிறது.
நண்பர்களே! இந்த குறிப்புகளை பகிர்ந்து கொள்வதன் நோக்கமே சாதி ஒழிப்பை முன் நிறுத்தும் தலித் மனித உரிமைப் பார்வையில், பெண்ணியப்பார்வையில் புலிகள் பற்றிய புனித பிம்பங்களை கட்டுடைப்பது தான். மற்றபடி நான் மட்டுமல்ல எவரும் ஒரு தலித் பெண் என்பதற்காக வக்காலத்து வாங்கும் நிலையில் சிவகாமி ஒருபோதும் வீழ்ந்து போகக் கூடியவர் அல்ல. தலித் விடுதலைக்கான போராட்டக்களத்தில் எதிர்காலத்தில் அப்படி அவரை எவரும் தரம் தாழ்த்தி வீழ்த்திவிட முடியாது. by ANBUSELVAM.
Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

மணிவண்ணன் : தமிழில் மறைந்த தலித் தோழமை

Manivannan-1இயக்குநர், நடிகர், கதாசிரியர், நகைச்சுவை என தமிழ் சினிமாவில் தடம் பதித்தவர் மணிவண்ணன். அலட்டிக் கொள்ளாமல் பொசுக்கென புரட்சிகர வசனங்களை உதிர்க்கும் குணச்சித்திர நடிகர். உழைப்பு, நிலம், வறுமை, சாதி முரண், கலை, மொழி, அரசியல் சுரண்டல் போன்ற சமூக அக்கறை கொண்ட கருத்தியலை கொஞ்சம்  வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை ஏற்று சில படங்களில் நடித்துள்ளார் என்பது உண்மை. தமிழ் சினிமாவின் சமகால ஜாம்பவான்களில் வரலாற்று முன்னணி வகிப்பது தேவர் சமூகமா? கொங்கு சமூகமா? என்கிற நிகழ்கால சினிமாத்துறையின் வழக்காடு மன்றத்தில் தீரன் சின்னமலை மன்றாடியார் புகழ் நடிகர் சிவக்குமார் அல்லது வெள்ளையங்கிரி பாக்கியராஜ் போன்று அப்பட்டமாக கொங்கு சாதி அணியில் இடம் பெறவில்லை என்றாலும் பிற மொழி திரை முன்னணிக்கு எதிரான தமிழ் அல்லது நவீன தேவர் பிலிம்ஸ் சங்கத்தாரான பாரதிராஜா போன்று வெளிப்படையாக சாதி பார்க்கவில்லை என்றாலும் சினிமாவின் தமிழ்ச்சாதி விசுவாசியாக வாழ்ந்து மறைந்தவர். 2013 ஜூலை 15 – ல் அவர் 58 வயதில் எய்திய அகால மரணம் எவருக்கும் ஏற்புடையதல்ல. இருப்பினும் ஆழ்ந்த அனுதாபத்தை கால தாமதமாகவே உரித்தாக்குகிறோம்.
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல கடல் கடந்த தமிழ்த் தேசிய ஈழ ஆதரவாளர்களும், கலை இலக்கிய இடது சாரிகளும், பெரியார் இயக்கத் தோழர்களும் நடிப்பு – வாழ்க்கை ஆகிய இரண்டுக்கும் வேறுபாடற்ற அவரின் பன்முக ஆளுமையைப் போலவே, அவரின் பன்முக சமூக அரசியல் பங்களிப்பு குறித்து உணர்ச்சி பொங்க நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அப்படியான ஒரு தருணத்தில் இப்படி ஒரு தலைப்பில் ஒரு அஞ்சலிக் குறிப்பை உடனே பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பது நான் திட்டமிட்ட ஒன்று தான். கால தாமதம் ஆனாலும் இந்த நினைவுக் குறிப்பைப் பகிர வேண்டும் என்பதற்கு காரணம் இன்றைய தமிழ் சினிமாவில் மேற்சொன்ன வழக்காடு மன்றங்களில் கோலோச்சி தமிழ்த்தேசியம், பெரியாரியம், பொதுவுடைமை என அகண்டு கரைபுரளும் சில முற்போக்குக் கதாபாத்திரங்களுக்காக சொல்ல வேண்டி இருக்கிறது.
சமகாலத்தில் நிழலாடிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கும் – அது வெளிப்படுத்தாத உழைக்கும் மக்கள் கலை இலக்கிய அரசியலுக்கும் ஒரு முரண் – ஒரு தொடர்பு எப்போதும் இருந்தது உண்டு. அது தமிழ் சினிமாவிலும், அதன் கதாபாத்திரங்கள் மீதும் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாடகக் கலைஞர்கள் – கூத்துக் கலைஞர்கள் – மற்றும் சினிமா இன்ஸ்டிடியூட் கலைஞர்கள் ஆகியோருக்கு இடையே அவ்வப்போது வெளிப்பட்டு மறைவது உண்டு. இத்தகைய கலைஞர்களைப் போன்றே சாஸ்திரியக் கலைகள் – தமிழர் பண்பாட்டுக் கலைகள் – உழைக்கும் மக்கள் கலைகள் என்பனவும் முட்டி மோதி பண்பாட்டு அரசியலில் களம் கண்டுள்ளன. கலை இலக்கிய விவாதங்கள் வேகமடைந்த 90 – களுக்குப் பிறகு அது மிக வெளிப்படையானது.
Kalaivizhaகுறிப்பாக திரைத்துறையில் வெளிப்படையாக தலித் கலைஞர்கள் பிரவேசம் – தலித் கலைகள் போன்றவை காட்சிப் பதிவுக் கருத்தியல் சார்ந்து விவாதத்துக்கு வெளி வந்தன. இதில் 1994 – களுக்குப் பிறகு மதுரை தலித் ஆதார மய்யம் தொடங்கிய தலித் கலை விழாவுக்கும் முக்கிய இடம் உண்டு. மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை, இடைவேளை இல்லாத 30 -க்கும் மேற்பட்ட நிகழ்வுகள், 300 -க்கும் மேற்பட்டக் கலைஞர்கள் புடை சூழ விடிய . . . விடிய . . . நிகழும் தலித் கலைவிழா தமிழ் சினிமாவின் மிக அமைதியான சில கோடிட்ட இடங்களை தவிர்க்க முடியாமல் நிரப்பியது. அதன் விளைவு கே.ஏ. குணசேகரன், சின்னப்பொன்னு, கானா உலகநாதன், கானா பழனி, திருமயம் ஆறுமுகம், என்.டி.ராஜ்குமார், இன்றைய மகிழினி மணிமாறன் உட்பட சில பாடகர்கள், நடிகர்கள் வெளிப்படையாக திரைத்துறையில் அடையாளமாகினர். மதுரைப் பக்கத்தில் இருந்து உருவான இன்றைய சில இயக்குனர்கள், நடிகர்கள் காரில் அமர்ந்து கொண்டே விழாவில் பங்கேற்றுள்ளார்கள். தங்களின் தலித் அடையாளத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாத சில இசையமைப்பாளர்கள், ஒளி ஓவியர்கள், வரைகலைஞர்கள், இயக்குனர்கள் உழைக்கும் மக்கள் கலை இலக்கிய அரசியலை குறியீடுகளாக தங்கள் திரைப்படங்களில் அசைபோட வைத்தார்கள். இந்த அரசியலை நாசூக்காகப் புரிந்து கொண்ட சில தமிழ் சினிமாக்காரர்கள் முற்போக்கானவர் என்கிற அடையாளத்தில் பட்டும் படாமலும் அடையாளம் கண்டன‌ர். அந்த முற்போக்கு கௌரவ அடையாளம் கலை இலக்கிய மேடை நோக்கியும் சிலரை இழுத்து வந்தது. அதில் மணிவண்ணன் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர்.
1999 -ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான “சங்கமம்” திரைப்படத்தில் ஆவுடையபிள்ளையாகத் தோன்றும் மணிவண்ணன் சாஸ்திரிய கலை பெரிதா? உழைக்கும் மக்கள் கலை பெரிதா? என்கிற கலை இலக்கிய கருத்தியல் தளத்தில் பறையை தோளில் சுமந்து  கொண்டு சமூக அரசியல் வசனம் பேசி தலித் கலையின் முக்கியத்தை நிறுவுவார். தலித் அல்லாத ஏ.ஆர். ரஹ்மான் இசையில் எம்.எஸ். விஸ்வநாதனை முன் வைத்து தலித் கலை அரசியலைப் பேசுவதில் ஆவுடையபிள்ளைக்கு அப்படி என்ன ஒரு ஈடுபாடு? என்கிற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் சங்கமத்தில் தோளில் பறை சுமந்த மணிவண்ணனின் கலை – இலக்கிய – பண்பாட்டு அரசியல் பங்களிப்பு என்றும் நினைவு கூறக் கூடியது. அந்த வகையில் அவரின் அடையாள அரசியல் பாடுபொருளை உணர்ந்து 2001 – தலித் கலைவிழாவில் மேடையேறி உரையாற்ற தலித் ஆதார மய்யத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தோழர் அலெக்ஸ் அவர்களும் நானும் அழைப்பு விடுத்தோம். அதற்கு மணிவண்ணன் “நான் ஆந்திராவில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். பிறகு பார்ப்போம் என பதிலளித்தார்.
“மீண்டும் 2002 -ல்  நிகழ இருந்த தலித் கலை விழாவுக்காக நான் அவரை தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு தலித் கலை விழாவுக்காவது நீங்கள் வர வேண்டும் என்றேன். தவிர்க்க முடியாமல் “நாளை ஒரு வேளையாக நான் மதுரை வருகிறேன். 5 மணிக்கு விமான நிலையம் வாருங்கள் சந்திப்போம்” என்றார்.  மிகுந்த உற்சாகத்தோடு மேலவளவு படுகொலையை அழகியல் படுத்திய ஓவியர் சந்ருவின் அட்டைப்படம் தாங்கிய Colours of Liberation ஓவிய நூலை அவருக்கு பரிசளித்து, விமான நிலையத்தில் அவரை வரவேற்று, எதிரே உள்ள வேப்ப மரத்தடியில் சுமார் 20 நிமிடம் அவர் நடித்த சங்கமம் திரைப்படம் குறித்தும், தலித் கலைவிழாவைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் முகத்தில் அப்படி ஒரு ஆர்வத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மற்றபடி நடப்பு தலித் அரசியலைப் பற்றி பொறுமையாகக் கேட்டறிந்தார். மதுரை காவல் துறையால் அவ்வப்போது தேடப்படும் வரிச்சியூர் செல்வம் இடை இடையே தன்னைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். இறுதியாக “எனக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருவர் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்று ஒரு படம் எடுக்கிறார். அதில் நான் பிசியாக இருக்கிறேன். பிறகு பார்க்கலாம் என்று விடை பெற்றார்.”
Agathiyanஅதன் பிறகு காதல் கோட்டை இயக்குனர் அகத்தியனை உறுதி செய்து, அழைப்பிதழில் பெயர் அச்சிட்டு, விமானச் சீட்டும் பதிவு செய்த பின்னர் கலைவிழா நாளன்று  ‘திருமாவளவன், கிருஷ்ணசாமி, அதியமான் போன்றோர் ஏறிய மேடை என அவரது உதவியாளர் ஒருவர் கூறியதும், “அய்யய்யோ தம்பி! நீங்க வேற! நான் இந்த மாதிரியான விழாவுக்கெல்லாம் வர்ரதில்ல‌ தம்பி. தயவு செய்து டிக்கட்ட கேன்சல் பண்ணிடுங்க” என்றார். இது போன்று இன்னும் பல அனுபவங்கள் தலித் கலை விழா அடையாளத்துக்கு உண்டு.
பொதுவாக தலித் அல்லாதோரை தலித் கலைவிழா மேடையேற்றுவதில்லை என்பதை சில காலம் வரை கருத்தியல் மரபாகவேக் கொண்டிருந்தோம். கூத்துக்கலைஞரும், பேராசிரியருமான பெரியார் தாசன் மட்டும் தான் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் தலித் விடுதலைக்கான எதிர்கால அரசியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அந்த காலக் கட்டத்தில் முற்போக்கான அடையாளத்தை தமிழ் சினிமாவில் பிரதிபலித்தவர்களை மனதார வரவேற்று மேடையேற்ற விரும்பினோம். அந்த அடிப்படையில் தான் மணிவண்ணனுக்கும் அழைப்பு விடுத்தோம். 1999 ஆம் ஆண்டு தலித் கலைவிழாவில் தங்கர்பச்சான் ஒளி ஓவியராக இருந்தார். அவரது ‘வெள்ளை மாடு’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்றவை அரசரடி முகாம்களில் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் அது. 2002 – ஆண்டு தலித் கலைவிழா தொகுப்புரையை மோகனப்ரியன் (இயக்குனர், மதுரை சம்பவம்) எழுதினார். ‘ராமய்யாவின் குடிசை’ ஆவணப்படத்தை இயக்கி – தயாரித்த பாரதி கிருஷ்ணகுமார் பல சலசலப்புக்கு மத்தியில் மேடை ஏற்றப்பட்டார்.
periyarதலித் மக்கள் மீதான வன்கொடுமைகளும், அதற்கெதிரான போராட்டங்களும் தென்மாவட்ட பூகோளப் பரப்பில் குறுக்கும் – நெடுக்குமாக விரவிக் கிடந்தபோது தமிழ் சினிமாவில் தலித் கலைஞர்களாக அறியப்பட்ட லிவிங்ஸ்டன், இசைஞானி இளையராஜா போன்றோர்களே அன்றைய விழாவுக்கு வர மறுத்தார்கள். அத்தகைய சூழலில் பாவம் மணிவண்ணன் வராதது ஆச்சரியம் ஒன்றும் இல்லை தான். அவரும் நான் இது போன்ற விழாக்களுக்கு வர மாட்டேன், மேடை ஏற்மாட்டேன் என கருத்தியல் ரீதியாக ஒன்றும் பதில் உரைக்கவில்லை. அப்படி கராறாக சொல்வதற்கு தயங்கி இருக்கலாம். ஒரு வேளை உறுதி செய்யப்பட்ட படப்பிடிப்பு தவிர்க்க முடியாததாக இருந்திருக்கலாம் அல்லது அன்றைக்கு  ‘திருமாவளவன், கிருஷ்ணசாமி, அதியமான் போன்றோர் ஏறிய தலித் மேடையில் துணிச்சலாக ஏறும் முற்போக்கு அடையாளம் அவரின் தமிழ் சினிமாவின் எதிர்கால அடையாளத்தை பாதிப்பதாகவும் கூட உணர்ந்திருக்கலாம். இது அவர் மட்டுமே எதிர் நோக்கிய அனுபவமும் அல்ல.
Chennai Sangamamஆனால் “தலித் விடுதலைக்கு கலைகளையும் கருவிகளாக்குவோம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்களும், பள்ளர்களும், பறையர்களும், துரும்பர்களும், குறவர்களும், திருநங்கைகளும், பழங்குடியினரும் ஒருங்கிணைத்து நிகழ்த்திய தலித் கலைவிழா மேடைக்கு அன்று அழைப்பு மேல் அழைப்பு விடுத்தும் வராதோர் பலர். இந்த வாய்ப்பு சிலருக்கு கிடைத்ததாலேயே வளர்ச்சி நோக்கி மேலோங்கியவர்களும் உண்டு.  இந்த மேடை எங்களுக்கெல்லாம் கிடைக்காதா என ஏங்கியோர் இன்னும் பலர். ஒரு வாதத்துக்காக அவர்களுக்கு கூட அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களில் ஈழத்து தமிழ்த் தேசியவாதியாக, இடதுசாரி கலை இலக்கியவாதியாக, பெரியார் இயக்கத் தோழராக சங்கமம் மணிவண்ணன் மட்டும் தான் அன்றைக்கு சமூக அரசியலில் அடையாளம் காணப்பட்டார். அவர் போன்று அந்தப் பட்டியலில் எவரும் இல்லை! ஆக இவர் தான் அனைத்துக்கும் பொருந்திப் போகிறார். அப்படியானால் இவர் அல்லவா முதலில் தலித் அழைப்பை ஏற்றிருக்க வேண்டும். இவர் அல்லவா நான் தான் முற்போக்குவாதி என கலை விழா மேடையில் முழங்கி இருக்க வேண்டும். ஏற்கவில்லையே ஏன்? நிச்சயம் இது மறைந்த மணிவண்னன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்ட‌ல்ல. சராசரி சக நடிப்புத் தொழிலாளியான அவர் பாவம் என்ன செய்வார். தமிழ் – பெரியார் – இடதுசாரி என்கிற அடையாளங்களில் மணிவண்ணனை முற்போக்காளாராக சித்தரித்து அதே அடையாள அரசியலில் உழலும் இன்றைய முற்போக்கு தமிழ் சினிமா வாரிசுகளுக்கு தான் இந்த கேள்வி. மிகச் சரியாக சொல்கிறேன் அவர் வரத்தயங்கியதன் காரணம் தலித் விடுதலைக்கான போராட்ட அரசியலில் – தலித் கலை இலக்கிய பண்பாட்டு அரசியலில் ஒருவித தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட அன்றைக்கு அவர் கொண்டிருந்த தோழமை அரசியல் அடையாளம் தான் அவரை மேடையேறத் தடுத்து குற்றவாளியாக்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. அன்றைய சூழலில் நிகழ்ந்து கொண்டிருந்த பல உரையாடல்கள் – விவாதங்கள் இதற்கு பின்புலக் காரணமாக இருந்தன என்பதும் கலை இலக்கிய நோக்கர்களுக்கு தெரியும். அதனால் தான் தங்களின் முற்போக்குத் தனத்தை தமுஎச கலை இரவு அல்லது மலேசிய சிங்கப்பூர் கலைவிழா அல்லது அரசியல் பிழைப்புவாதத்துக்காக 2006 – ல் தலித் ஆதார மய்யத்திலிருந்து களவாடப்பட்ட சென்னை சங்கமம் போன்ற மேடைகளை  புரட்சிகரமாக அடையாளம் கண்டார்கள். இது ஏதோ தெரியாமல் நிகழ்ந்துவிட்ட ஒன்றல்ல. தமிழ்த்தேசிய முற்போக்குத்தனத்தால் தமிழ் சினிமாக்காரர்களின் திட்டமிடப்பட்ட ஒருவித நவீன தீண்டாமை.
Mammootyஎது எப்படியோ! முல்லைப் பெரியார் விவகாரத்தில் கேரளத்து இடதுசாரிகளை சிவப்பு வர்ணாஸ்ரமவாதிகள் என போகிற போக்கில் இடைச்சாதி தமிழ்த்திரையுலகம் உண்ணாவிரதம் மேற்கொண்டு விமர்சித்திருந்தாலும் “டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்” திரைப்படத்தில் ஒரு கதாநாயகனாக நடித்த அங்கத்திய மம்முட்டியைப்போல இங்கத்திய முற்போக்கு மணிவண்னனோ அல்லது அதற்கு நிகரான முற்போக்கு நடிப்பு பட்டாளமோ இங்கு இல்லையென்றாலும் கூட ஒரு வித நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் தமிழ்த்தேசிய புலிக்கொடி – பெரியாரியம் – இங்கத்திய இடதுசாரி முற்போக்கு என அனைத்து தோழமைகளாலும் இழுத்து மூடி கிடத்தப்பட்டிருக்கும் அந்த பறையைச் சுமந்த தோழர் சங்கமம் மணிவண்ணன் மார்புக்கு சேரிகளின் வீர வணக்கம்.
Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

Why Dalit should be selected as 6th Bishop in CSI Madurai – Ramanad Diocese?

BaningaSubmit An Appeal to:

The President

MRRC – Movement for Renewal and Reformation of Churches

Tamilnadu

Sub: Why Dalit should be selected as 6th Bishop in CSI Madurai – Ramanad Diocese?

Submitted by

A.P. Anbuselvam

Member, Intellectual Circle for Dalit Actions – ICDA

Puducherry, India. 

Introduction

The Church of South India – CSI Madurai – Ramnad Diocese was established in the year 1947. “Love the Lord your God AND HIS CHURCH with all your heart, soul, mind and strength” This words hopes to reignite in today’s politics of CSI protestant the passion for the church that marked its formation in the beginning. Not many among today’s Protestants are aware of the unique origin of the CSI. Unlike most churches which emerged through the division of an existing one (not only creed and doctrinal denominations underlining the Caste too), the CSI was formed through a reverse process by the merger of several denominations representing four very different church hierarchical traditions – Anglican, Congregational, Presbyterian and Methodist. So special was the creation of the CSI (and hard-won too since it took 28 years of painstaking negotiations to form) that its missionary founders proclaimed it would serve as a beacon for uniting all of Christendom through “union in the Universal Church of all who acknowledge the name of Christ.” (Based on the Constitution of the CSI). But the contemporary CSI church reality and practices are against those faithful formations.

 Yet painful of 66 years after it was formed, this founding mission and vision is long dead the reason for included and practising the only Castism. In fact the growing discrimination of Caste today is of the CSI following what has been the dominant trend through the Indian Church history – of internal strife and disenchantment breaking up a large church. That the CSI, which comprises 22 dioceses and four million adherents, is in a severe crisis is no secret. Not only protestant most of the church in India is a Dalit church, because 70% of India’s 25 million Christians are Dalits. Although Dalits form the majority in all these churches, yet their place and influence in these churches is minimal or even insignificant. Their presence and contribution is totally eclipsed by the power of the upper-caste and intermediate Caste – OBC Christians who are only 30% of the Christian population. This is all the more true in the case of the Protestant and Catholic Church where such Caste discrimination is strongly felt. But in the Protestant Church, particularly CSI the Dalits form the majority, almost 63%: but it is the higher caste and intermediate Caste – OBC people, only 37% of Church population, who control the Church by pre-emptying the key position. The majority of the Bishops and clergy, the religious and lay leaders, come from the upper caste and intermediate Caste – OBC. One can say that this 30%, the upper caste and intermediate Caste – OBC, occupy the 90% of the administration, leadership and the reservations of the church in the name of minority. Thus the Dalits are pushed aside and reduced to insignificance in their own native Chapel land. Today this issue has become a major matter for concern in the church and must be dealt with. This is the current situation of not only in common India, even CSI Madurai – Ramnad Diocese also.

Castism, Immoral and Corruption

Corrupt - 1Castism, immoral and corruption is the high level faith affirmation of each and every church leader. For example in January 2012 the Bishop of Coimbatore Diocese was dismissed from service for corruption under the outing survival aim of Bishop election,  the following month the Bishop of Rayalseema Diocese was asked to go on leave prior to retirement also for corruption and mal-administration and in June the Bishop of Medak Diocese was suspended for similar reasons. Many other Bishops are facing serious charges of corruption. An April 2012 investigation by the Government of India’s Registrar of Companies into the administration of the Church of South India Trust Association (CSITA) — a registered company which holds the assets of the church valued conservatively at over Rs one lakh crore — has exposed over two dozen serious violations that suggest a complete breakdown of any credible form of administration. All bishops corrupted by reason are big money has long dominated our church elections, and the problem has worsened the economical worth laity ruling, which allowed privately to spend unlimited amounts of money on our Bishops elections. In every independent groups spent currency of billions, much of it from anonymous individuals and laity corporate. Candidates backed by big money donors loss him own identity some high profile elections, but nevertheless the next bishop candidate will be more beholden than the current crop of lawmakers to special interests to harvest the corruption. The problem with money in politics is not so much the amount that is spent on campaigns as it is who pays for them, what they get in return, and how that affects Church policy and spending priorities. Common Cause is working diligently to expose the role of special interests and promote reforms that put spirituality and faith back in the hands of “we the people.” 

Inside the four walls of the church itself, the service lacks the vitality of what was once a missionary institution. Every Sunday, the pastors, for the most part, go through the motions of leading the laity in worship, while, equally, the laity go through a mantra-like routine of glorifying and praising God. Proclaiming the gospel, planting the new churches and create the ruin of God, which was one of the main reasons for the CSI’s founding, is rarely to be seen. Pastoral care and faithful fellowship that are so essential to nurturing of a witnessing community are becoming conspicuous by their absence. Service with dedication that played a leading role in the growth of the church in India has disappeared in most CSI-run hospitals, schools, colleges, etc that have become cesspools of corruption, lumpiness and inefficiency. The mushrooming growth of a large number of independent churches reflects, in part, the decay in the CSI.

New spiritual face will have to rise to the challenges

In this situation if the CSI is to rediscover its pioneering spirit, without which it is headed for disintegration, its young non corrupted members and new spiritual faces will have to rise to the challenges. The new Dalit Bishop hopes to serve as a platform to ideate and action both a religious liberative theologian and intellectual administrative revival of what was meant to be one of the greatest churches of Christendom.

The long awaited sixth Bishop’s election was held on 20th of December in CSI, Madurai. In the presence of CSI moderator, the chairperson of the election committee Dr.Charles and 14 scrutiny members conducted the election where 13 candidates of CSI Madurai – Ramnad diocese contested. The number of votes registered was 338. The election underwent five rounds. But, followed by that, with the high number of votes registered, Rev. Baninga Washburn won and he was being declared as the first selected candidate for the further selection by the CSI Synod committee. It’s the historical event in the CSI Madurai – Ramnad diocese where a Dalit Bishop candidate was elected in the first two rounds itself.

Corrupt - 2Knowing that the election is not valid if at least two contestants need dint win for selection. The crowd assembled again and seriously confused in electing the next contestant. Somehow people elected Rev. Joseph (member, intermediate caste – OBC) in the third round, the next candidate for further selection. The fourth and fifth round election didn’t compromise any of the constitution rules and no one was elected and there ended the sixth Bishop’s election with the declaration of Rev. Baninga Washburn being the first selected candidate and followed by Rev. Joseph.

However, we suspect it has been taking five months time period for shadowy expecting and lobbying with currency and caste. We against those are the interventions.

Basically these church politicians (including Moderator) have made sweet- coated promises to the Dalit Christian candidate in order to win their votes; but, once in power, they have turned their back.  The Dalit Christians are still deprived of their rights for the sole reason that they practice Christianity, which is said to be very frank. In this situation we are raising our voice for 6th Dalit Bishop in Madurai.

Finally

AmbedkarIndia got independence in 1947 the year of formation of CSI Madurai – Ramanad Diocese. Untouchables in India are created and promoted in various fields with the very high level administration and intellectual contribution like Indian Babasaheb B.R. Ambedkar, Babu Jegajeevan Ram and former President K.R. Narayanan. But Dalits in even CSI Madurai – Ramanad Diocese on look down upon by the caste hierarchy of Church all these 66 years and the untouchable is not may the Bishop of the touchable Diocese. So, a Dalit should be selected as the Bishop this time. This diocese is predominantly a Dalit diocese, so the voice of the majority should be heard by the leadership and uniqueness of the CSI. So a Dalit should be selected as the Bishop of the CSI Madurai – Ramanad Diocese.

Except a first Bishop Leslie New begin and second Bishop George Devadoss for all other Bishops election for held and the Dalit found a place in all Bishop Panel election. Reasons only known to God and Church leaders Dalits were not selected. The reason for cry of Dalits in the Diocese of Madurai – Ramanad is at-least to see a break in the leadership of the diocese. So a Dalit should be appointed this time.

Even though these are belated justice to disapprove the saying justice delayed to show the world justice prevails in the Church in the leadership above all groupies, Castism, factions and communalism a Dalit should be appointed this time.

So the INTELLECTUAL CIRCLE FOR DALIT ACTIONS – ICDA, Puducherry, India feel right time a Dalit Bishop Rev. Baninga Washburn must be selected this time.

But let justice roll down like waters, and righteousness like an ever flowing stream – Amos 5:24.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பரதேசி : அது பாலாவின் சாதி – சனத்தோடது

panikkaatuபிரிட்டிஷ் அர‌சாங்கத்துக்கு எதிரான‌வரும், தேயிலைத் தோட்ட தொழிற்சங்க நிறுவனரும், பாதிரியாரும், மருத்துவருமான பி.எச். டேனியலின் ‘ரெட் டீ’ நாவலுக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த எரியும் பனிக்காட்டை வைத்துக் கொண்டு பரதேசிக்காக பாலா ஒரு கதை தயாரித்தார். அந்த கதை என்ன? அதன் நோக்கம் என்ன? என்பது தான் இங்கு விமர்சனம். பாலாவின் பரதேசி திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் மிகக் குறைவாக வந்தபோதிலும், தேடித் தேடி படித்த அனைத்தும் கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தன. இதானால் இன்று திரைப்படம் பார்க்கிறவர்களுக்கு ஒரு சமுகப் பார்வை உருவாகி இருக்கிறது என மேலோட்டமாகப் புரிந்து கொள்ளலாமா? என்பதிலும் ஒருவகை குழப்பம் நிலவுகிறது. காரணம் உலக சினிமா பேசும் மிக அதி தீவிர திரை விமர்சகர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் கூட ஒரு தமிழ்த் திரைப்படத்தை, இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வதேச படங்களின் அவதானிப்புகளுடன் மட்டுமே விமர்சித்து விட்டு உள்ளூரின் அடித்தள பார்வையை வெளிக்கொண‌ராமல் விட்டு விடுவது தெரியாமல் தான் நிகழ்கிறாத என்று ஒரு சந்தேகம் எழுகிறது.
அதாவது,
– பி.எச். டேனியலின் ‘ரெட் டீ’ நாவலில் சொல்லப்படும் அனைத்தையும் பாலா தொட்டுப்போகவில்லை. மூலக்கதை டேனியலுடையது என்று குறிப்பிடாமல், நன்றி மட்டும் கூறியுள்ளார்.
– காலனியச்சூழலில் பரப்பப்பட்ட கிறித்துவத்தை திரித்துக் கொச்சைப்படுத்தியுள்ளார். ஆதாரமாக பரிசுத்தம் (டேனியலையே முன்னிறுத்தும்) போன்ற கதாபாத்திரத்தை, கிறித்துவ மதப் பிரச்சாரக‌ராக, கேலிக்கூத்தாடியாக, காலனிய விசுவாசியாக, அதிகார மனம் படைத்தவராக முன்னிறுத்துவதன் நோக்கம் என்ன?.
– தேயிலைப் பெருந்தோட்டத்துக்கு ஆள்பிடித்து அனுப்பிய, உழைப்பையும், ஊதியத்தையும் சுரண்டிய இடைத்தரகு செட்டிமார்  கங்காணிச் சமுகங்களின் கொடுங்கோல் அனுபவங்களை ஏன் சொல்லாமல் தவிர்த்துவிட்டார்.
– ஆதவண் தீட்சன்யாவின் கவிதையைக் கொண்ட எரியும் பனிக்காட்டில் தலித்துகளின் வியர்வையும், ரத்தமும் அவை சார்ந்த தீண்டாமைக் கொடுமைகளும் இருந்ததை பாகுபடுத்தித் தணிக்கை செய்துவிட்டு எரியும் பனிக்காட்டையும், தேயிலைத் தோட்டத்தில் பஞ்சம் பிழைக்கப் போனவர்களின் இனக்குழு வரலாற்றையும் மறைத்து விட்டு தென்பகுதி சாலூர் மக்களின் பிரச்சனையாக மட்டும் ஏன் பார்த்தார்?
– தமிழகத்தில் பலநாட்டு கிறித்துவ மிஷினெரிகள் பரப்பிய கிறித்துவத்தையும், காலனிய ஆட்சியாளர்களின் ஊழியர்கள் பரப்பிய கிறித்துவத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாததால் பொத்தாம் பொதுவாக அல்லேலுயா, பிரைஸ் தி லார்ட் கோஷம் போடவைத்து அவர்கள் உருவாக்கிய மருத்துவப் பணியைக் ஏன் வேளாங்கண்ணி ரேஞ்சுக்கு கொச்சைப்படுத்தினார்? உண்மையிலேயே ‘எரியும் பனிக்காடு’ மதமாற்றத்தை தான் முன்னிறுத்தியுள்ளதா?
– தமிழகக் கிறித்துவம் என்பது தீண்டத்தகாத தலித்துகள், பார்க்கத்தகாத சாணார்கள் (நாடார்), புறந்தள்ளப்பட்ட கடலோரப் பழங்குடி மீனவர்கள் மற்றும் சில இதர மிகப்பிற்படுத்தப்பட்ட‌ சமூகங்களின் சமூக, பொருளாதார அரசியல் வளர்ச்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்று தெரிந்திருந்தும் ஏன் அதனை இழிவுக் கண்ணோட்டத்தில் சித்தரிக்க வேண்டும்? அவர் கொச்சைப்படுத்துவது தமிழகத்தில் மதம் மாறிய ஒடுக்கப்பட்ட மக்களையா? அல்லது கிறித்துவத்தையா?
– இதுபோக பாலா உண்மையிலேயே டேனியலுக்கு நீதி செய்தாரா? அல்லது நாஞ்சில் நாடனுக்கு நீதி செய்தாரா? அந்த சாலூர் மக்களின் மானுடவியல் குணாம்சங்கள், பேசும் வசனம், மொழிநடை, மத அடையாளம், அதன் குறியீடுகள், சின்னங்கள், இசை போன்றவற்றின் வழியாக அவர் சொல்ல வந்த கதையின் கதைக்களத்தை உருவாக்க வேண்டியதன் நோக்கம் என்ன?
என்பதைப் புரிந்து கொண்டால் பரதேசியையும், பாலாவையும் புரிந்து கொள்ளலாம். மற்றபடி காலனிய ஆட்சியாளர்களுக்கோ, இன்றைய ஏகாதிபத்திய கிறித்துவத் திருச்சபைகளுக்கோ சாமரம் வீசுவது நோக்கமல்ல.
————————————————————————–
p-0பரதேசியில் முரண்பட்டு நிற்பதற்கு எனக்கு எந்த இடமும் தென்படவில்லை. அந்த முரண்பாட்டைக் களைய‌ உதவி செய்யும் பாலாவின் இந்து மனோபவத் துணிச்சலை முதலாவது பாராட்டுகிறேன். என்னதான் நன்மைகள் கிடைத்திருந்தாலும் காலனிய ஆட்சியின்போது இங்கு கட்டவிழ்த்து விடப்பட்ட பல கொடுமையான வரலாறுகள் இன்னமும் தேங்கி, நாற்றமெடுக்கின்றன. அவற்றில் பல பொதுவெளியில் கூட விவாதிக்கப்படாமல் கவனக்குறையாக விடப்பட்ட இடம் ஒன்று உண்டு. குறிப்பாக தேயிலைப் பெருந்தோட்ட உருவாக்கம், உப்பளங்ககளின் விரிவாக்கம், பேரணைக் கட்டுமானம் இவற்றுக்கான நில அபகரிப்பு, இடப்பெயர்ச்சி, மறுகுடியமர்வு, இயற்கை வள அழிப்பு, கருவேலம்-பார்த்தீனியம் விதைப்பு இவற்றுக்குப் பின்னால் அள்ளிபோடப்பட்ட பன்றிக் குடிசைகளில் வாழும் உழைக்கும் மக்கள் வரலாறு பேசுவதென்பது தற்காலத்தில் தமிழ் சினிமாவில் அரிதாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, ஆண்டுகள் பல கடந்து ஆனைமலை, வால்பாறை, ஹைவேலிஸ், மாஞ்சோலை, நீலமலை என தமிழகத்தின் மேற்குப்பகுதிகளை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட தேயிலைப் பெருந்தோட்டங்களின் பிரச்சனைகளைப் பேசுவது இன்றைய அரசியல் கட்சி ஓனர்களான சூத்திர திராவிட அரசியலுக்கும், சர்வதேச பெருந்தோட்ட முதலாளிகளின் பொருளாதார அரசியலுக்கும், உழைக்கும் வர்க்க தலித்துகளின் போராட்ட அரசியலுக்கும் எதிரானதாக இருக்கும்போது உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட எரியும் பனிக்காடு ஒன்றை பாலாவின் கண்ணாடி வழியாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி, பொட்டல் மண் பரப்பின் மீது திரைப்பார்வையை திருப்பிய தொழில் நுட்பம் பாராட்டுக்குறியது.
‘ரெட் டீ’ -யில் சொல்லியிருந்தாலும், சொல்லாமல் விட்டாலும், பரதேசியில் பாலா சேர்த்திருந்தாலும், சேர்க்காமல் விட்டாலும் ஓர் நாவலை, ஒரு திரைப்படம் இப்படித்தான் பிரதிபலிக்கும். இப்படத்தில் சொல்லியிருப்பதும், காட்சிப்படுத்தியிருப்பதும் பாலாவின் இயக்க மனோபவ விதானிப்பு மட்டுமே. காலனிய ஆட்சியாளர்கள் இப்படித்தான் கூலி கொடுக்காமல் உழைப்பைச் சுரண்டினார்கள், தொழிலாளர்களின் உழைப்புத் தேவை எனத்தெரிந்தும் கொள்ளை நோயின்போது சாகவிட்டார்கள், உடலுறவு கொள்ள முடியாத போதும் பெண்களின் கற்பைச் சூறையாடினார்கள், இயேசுவை போதிப்பதில் குறியாக இருந்தார்கள், அன்றைய கிறித்துவமும் இப்படித்தான் நடந்து கொண்டன என்று விமர்சிப்பதற்கு பாலாவுக்கு முழு உரிமை உண்டு.  ஆனால் அதனை கொச்சைப்படுத்த உரிமை உண்டா என்கிற கேள்வி சற்றும் பாலா எதிர்பாராதது.
காலனிய ஆட்சியாளர்களும், கிறித்துவ மிஷினெரிகளும் தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களுக்கு எதிராக‌ படுத்திய கொடுமைகளை விவரிக்கும் அலெக்ஸ் ஹேலியின் ‘தி ரூட்ஸ்’ அனுபவங்களை விட பாலா ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை.
—————————————————————————————————
மீண்டும் சொல்கிறேன். பரதேசியில் முரண்பட்டு நிற்பதற்கு எந்த இடமும் தென்படவில்லை. ஆனால் பாலாவிடம் முரண்பட்டு நிற்பதற்கு ஏகம், அநேகம், சாதியம் உண்டு. காரணம் டேனியலின் கதைக்களத்தை திருச்சபை மக்களுக்கு அறிமுகப்படுத்திய, ‘ரெட் டீ’ நாவலில் சொல்லப்படாத ஆயிரமாயிரம் பக்கங்களின் அனுபவங்களைக் கதையாகச் சுமந்து திரியும் பாதிரியார் அலெக்ஸ் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார். அவருடைய பிரதான பணிக்களம் ஆனைமலை – வால்பாறை பகுதிகள் தான்.  தேயிலைத் தோட்டங்களில் நிலவும் சாதிய வன்கொடுமைகள், உடலுறவில் ஈடுபடமுடியாத அளவுக்கு பெண்களின் இரத்தச்சோகை நோய்க்கான காரணங்கள், செட்டிமார் கங்காணிகளின் கூலி இடைமறிப்பு, அதே உழைப்புச் சுரண்டல் கூலியை கந்துவட்டியாக்கிய கொடுமை இதெல்லாம் அவர் சொல்லக் கேட்டவை. இதற்கான‌ பல ஆவணங்கள் தென் இந்திய திருச்சபைகளின் கை வசம் உள்ளன. இருப்பினும் எந்த ஒரு நாவலைப் படித்தாலும் அதில் சொல்லப்பட்டுள்ள சங்கதிகள் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்கிற இடம் தான் விமர்சனத்தின் முன்னோட்டமாகின்றது. அந்த வகையில் எரியும் பனிக்காட்டை பாலா எவ்வாறு புரிந்து கொண்டு தனது பார்வையில் கதையாக்கினார், சினிமாவாக்கினார் என்கிற போக்கிலேயே விமர்சனங்களும் நீள்வதில் தப்பில்லை. அப்படியானால் பாலா யார் என்பதிலிருந்தும், அவர் இதற்கு முன்பு இயக்கிய படங்களின் உள்ளீடுகளையும் கருத்தில் கொண்டு விமர்சிக்க வேண்டியுள்ள‌து.
————————————————————————————————–
p-2அமெரிக்கன் ஆற்காட் மிஷினெரிகளால் உருவாக்கப்பட்ட மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பாலா தமிழ் இலக்கியம் படித்தவர். அவர் அதிகம் நடமாடிய கரிமேடு பகுதியில் உள்ள கிரம்மர்புரம் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை, தென் இந்திய திருச்சபை ஆகியவற்றின் வழிபாட்டுச் சத்தங்களை செவிமடுத்தவர். உவெப் திருச்சபையின் உறுப்பினரான சாலமன் பாப்பையாவின் மாணவர். கல்லூரி முதல்வர் சாமுவேல் சுதானந்தத்தின் வழியாகத்தான் தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொண்டதாக சாட்சி கொடுத்த‌வர். அத்தகைய தமிழ் இலக்கியத்தின் பல பாடங்களில் அரியர்ஸ் இருந்த போதிலும் நாஞ்சில் நாடன் எழுத்துக்களை அப்போதே சரியாக வாசிக்கத் தொடங்கியவர் என்பதெல்லம் அவரே சொல்லக் கேட்டது தான். அப்படி இருக்கும்போது மிஷினெரிகளால் தொடங்கப்பட்ட கிறித்துவ நிறுவனங்களாலும், கிறித்துவ நண்பர்களாலும் உருவாக்கப்பட்ட பாலா பி. எச். டேனியலுக்கு எதிராக பரதேசியை படைத்திருப்பாரா என்கிற கோணத்திலும் விமர்சனங்கள் எழலாம். படைத்திருக்கிறாரே என்ன செய்ய?
படத்தின் தொடக்கத்திலேயே பி. எச். டேனியலுக்கு நன்றி என்பதோடு முடித்துக் கொண்டார். மற்றபடி பரதேசியின் கதை பி. எச். டேனியலுடையது அல்ல. அது பாலாவுடையது. கொஞ்சம் நாஞ்சில் நாடனின் சாகித்ய‌ வெள்ளாள விசுவாசத்துக்குரியது. பாலாவின் கதா கற்பனையான‌ சாலூர் சாதி – சனத்தோடது என்கிற கோணத்தில் பார்த்தால் காலனிய ஆட்சியாளர்களையும், கிறித்துவ மிஷினெரிகளையும் ஏற்கனவே கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கும் தென்பகுதி தேவர் சாதி – சனங்களின் பண்பாட்டு அரசியலோடு தன்னை வெளிப்படையாக அடையாள‌ப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை இனம் காண முடியும். அவரின் நெடிய பயணம் கிறித்துவ வட்டாரத்தையொட்டி இருந்தாலும், எப்போதும் போல‌ கிறித்துவர்களை, தலித்துகளை விமர்சிக்கும் ஒரு சராசரி இந்து சனாதனி தான் பாலா என்பது அவரின் பலபடங்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.
மாட்டிறைச்சி உண்பவர்களை இழிவாகக் காண்பித்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக எடுக்கப்பட்ட “அவன் – இவன்” படத்தில் கிறித்துவர்களின் குருத்தோலைத் திருநாளை திருடி பட்டம் கட்டி விமர்சிப்பதோ, “நந்தா” படத்தில் கீதோபதேசம் செய்வதோ, “நான் கடவுள்” வழியாக செமி இந்துக்களை சாஸ்திரிய இந்துக்களாக மாறுங்கள் என அருளுரைப்பதோ, சமஸ்கிருதத்துக்கு உயிரூட்டுவதோ பாலாவின் படங்களில் எதேச்சையாக நிகழ்வதல்ல. அதே பாணியில் எரியும் பனிக்காடு காலத்தில் கிறித்துவர்களாக மதம் மாறாத, கிறித்துவம் உருவாக்கிய ஏகபோக நலன்களை அவ்வளவாக அனுபவிக்காத, இது சாலூர் இந்துக்களின் வரலாறு  என்பதிலிருந்து பார்த்தால் தமிழ்நாட்டில் காலனிய ஆட்சியாள‌ர்களின் ஊழியர்களும் சரி, பலநாட்டு கிறித்துவ மிஷினெரிகளும் சரி அவர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி, மருத்துவம், இன்ன பிற ஏதுக்களின் நலன்களைப் பெற்றுக் கிறித்துவர்களாக மதம் மாறிய‌வர்கள் யார்? ஏகபோக நலன்களைப் பெறாதவர் யார்? ஏக போக நலன்களைப் பெற்ற‌தில் எந்தெந்த சமுகங்கள் இருக்கின்றன? என்கிற கேள்வியை பாலா மெலிசாக இழையோட்டியிருக்கிறார்.
p-3இன்னும் சற்று உடைத்துப் பேசினால் தலித்துகள், நாடார், மீனவர்கள் பலன் அடைந்ததைப்போல தென் பகுதி தேவர் சமூகம் பலன் அடைந்திருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி இருக்கும்போது சாலூர் தேவர் சமுகங்களின் உழைப்பைச் சுரண்டி வளர்ந்த தேயிலைத் தோட்டங்களும், அதில் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்? தலித் பிரச்சனைகளை மட்டும் எப்படி பேச முடியும்? எந்த வகையில் கிறித்துவ மிஷினெரிகளை நேர்மறையாகப் பதிவு செய்ய முடியும்? என்ன தான் நல்லவர் என்று சொன்னாலும் டேனியலை எப்படி கொச்சைப்படுத்தாமல் இருக்க முடியும்? ஏற்கனவே குற்றப்பரம்பரைச் சட்டத்தைக் கொண்டு வந்து, தேவர் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மத்திய சிறைச்சாலையை நிர்மானித்து, அந்த மக்கள் மீது சமூக அவமானத்தை திணித்தது இதே காலனிய மிஷினெரி கும்பல் தான். இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே குருஜி கோல்வாக்கரை மதுரைக்கு அழைத்து, பரிசளித்து கவுரவித்தார் உ. முத்துராமலிங்கம் தேவர். அந்த நன்றிக் கடனுக்காக பெருமளவு தேவர் சமுகங்களை சிவ சேனையிலும், இந்து முன்னணியிலும் உறுப்பினராக்கி, பார்வார்டு பிளாக் கட்சியை தேவர் பேரவையாக்கி, இமானுவேல் சேகரன் படுகொலை என்பதே தேவர் சமூகத்தின் இந்துப் பேரடையாள எழுச்சியாக குருபூஜை நடத்திக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பின்னணியத்தில் வளர்ந்த ஒரு நவீன‌ தேவர் பிலிம்ஸ் இயக்குனர், தனது பெரும்பாதி தேவர் சமுகங்கள் திரைத்துறையில் இருக்கும்போது எரியும் பனிக்காட்டில் உறைந்து கிடக்காத‌ சாலூர் தேவர் வரலாற்றைப் பேசாமல் பரதேசியில் வேறெதைப் பேச முடியும்?
எனவே தான் நாஞ்சில் நாடனின் தற்கால‌ வசனமாக இருந்தாலும் மேற்படி வகையறாவுக்கே உரித்தான‌ மதுரை பக்கத்து வட்டார வழக்கு, தேவர் சமுகத்து பெயர் அடையாளங்கள், நாயக்கர் கால சடங்கு சம்பிரதாயங்கள், தேவர் சமூகத்துக்கே உரிய தெய்வீக சிவனிய மரபுகள், வைரமுத்துவின் கள்ளிக்காட்டுச் சொல்லாடல்கள் இது போக குதர்க்கமான‌ நடிப்பு, பேச்சு, நடை – உடை – பாவணை, சகட்டுமேனிக்கு அடித்து துவைத்தல், மேற்படி வயதான பெண்களிடத்திலும் வெளிக்காட்டும் மூர்க்கம் இவை எல்லாமே இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட அச்சு பிசராத தேவர் சமுகத்தின் (தேயிலைத் தோட்ட) பண்பாட்டு அசைவுகள் என்று திரைக் கதை எழுத பாலாவுக்கு முழு உரிமை உண்டு. அத்தகைய கிளைமக்ஸ் கோபத்தை வெளிக்காட்டவே இறுதியில் எந்த முடிவையும், நம்பிக்கையையும் ஊட்டாமல் கதாநாயகியையும் அதன் வாரிசையும் எஸ்டேட்டுக்கே கொண்டு சேர்த்து உச்சஸ்தாயில் தன் ஆத்திர‌த்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மையிலேயே இந்துப் பேரடையாளத்துக்கு எதிராக தீண்டப்படாத தலித்துகளும் (Untouchables), பார்க்கத்தகாத சாணார்களும் (Unforeseeable), புறந்தள்ளப்பட்ட கடலோரப் பழங்குடி மீனவர்களும் வெளியே வந்தது போல அணுகக்கூடாதவர்களான (Unapproachable) கள்ளர்களும் (தேவர்களும்) வந்திருக்க வேண்டும். அப்படி ஒரு கும்பல் இயக்கம் அவர்களிடம் உருவாகவில்லை. உருவாகியிருந்தால் விநாயகர் வழிபாட்டையும், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையும் தென்மாவட்டங்களில் நடத்துவார்களா? பிரான் மலையிலிருந்து கம்பம் கணவாய் வழியாக நீளும் மேற்கு மலைத்தொடரில் கிறித்துவத்தை அவ்வளவாக ஏற்காத பெருமளவு  மக்கள் தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். ‘வேர்ல்டு விஷன்’ போன்ற கிறித்துவ நிறுவனங்கள் கோடிக்கணக்கில் புராஜெக்ட் நடத்தி இன்று வரையிலும் அவ‌ர்கள் எதிர்பார்த்த பயன் (அதாவது பொருளாதார பலனை மட்டும் பெற்றுக்கொண்டு கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை) அடையவில்லை என்கிற ஏக்க விமர்சனம் இன்றளவும் உண்டு. மதம் மாறுவதை ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதில் மாறுபட்டக் கருத்துக்கள் உள்ளபோதும் கிறித்துவத்தை ஏற்க வேண்டுமெனில் அடிப்படையில் சில இந்து மனோபவ அடையாளங்களைக் கைவிட வேண்டும். அதற்குத் தயாராகதவ‌ர்கள் கிறித்துவத்தை ஏற்காமலிருப்பதும், விமர்சிக்காமல் கொச்சைப்படுத்துவதும் ஒன்றும் புது விஷயமல்ல. உசிலம்பட்டி மதுரம் போன்று ஏற்றுக் கொண்ட ஒரு சிலர் மதச் சிறுபாண்மையினராக இருந்து கொண்டு திருச்சபை தலித்துகள், நாடார்கள் மீது சாதியக்கொடுமைகள் புரிவதற்கும், நாட்டாமை செய்வதற்கும்  பாலாவினால் உருவாக்கப்பட்ட பரதேசி போன்ற படங்களின் கோபாக்கினை அவசியம் வேண்டும். இதற்கு பரிகாரமாக http://www.tamilhindu.com/2013/03/paradesi-film-review/ என்கிற இணைய தளமும் பாலாவின் இந்துத்துவ விசுவாசத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காண்பித்துள்ளது.
p-4மற்றபடி ஆனைமலை, ஹைவேலிஸ் பகுதிகளில் தேயிலைத் தோட்டத்திற்கு போன தேவர் சமுகம் ஏன் கிறித்துவத்துக்கு மாறாமல் நேற்று வரை கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டார்கள் என்பதையோ, தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கந்துவட்டியில் கொள்ளை லாபம் காணுவதில் முன்னணியில் உள்ள‌தையோ, கொத்தடிமைக்கு ஆள் புடிச்சி அனுப்புவதையோ ஜெர்மானிய அறிஞன் லூயிஸ் டூமான்ட் கூறும் கள்ளர்களை உள்ளடக்கிய தேவர் வரலாற்றின் இதுவரை பேசப்படாத‌ மானுடவியல் பண்பாட்டு உள்ளீடுகளையோ பரதேசிக்குள் வைத்து விமர்சிப்பதைத் தவிர்த்து, முடிந்தால் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும் வாசித்து விட்டு மீண்டும் பரதேசி பாருங்கள்.
பயங்கரவாதத்தையும், ஏகாதிபத்தியத்தையும் நஞ்சாக உலக அரங்கில் விதைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற கிறித்துவ நாடுகளும், அதன் எச்சில் காசில் சுகம் காணும் இந்திய கிறித்துவ ஏகாதிபத்திய‌த் திருச்சபைகளும் ஒன்றாக இணைந்து கிறித்துவத்தின் யோக்கியதை என்ன என்பதை அவர்களாகவே சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்ளும்போது, கேவலம் பாலா என்கிற  ஒரு தரமான இந்து சனாதனியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான‌ கிறித்துவத்தையோ, டேனியலையோ அவ்வளவு எளிதாகக் கொச்சைப்படுத்திவிட முடியுமா என்ன?
Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

விஸ்வரூபம்: ஏன் இஸ்லாமியர்களை விமர்சிக்கக் கூடாது?

Kamal - 2சமூக மாற்றத்துக்கு துளியும் பயன்படாத தமிழ்த்திரையுலகையும், கமலஹாசனையும், விஸ்வரூபம் திரைப்படத்தையும் விமர்சிப்பது நோக்க‌மல்ல. அதற்கு நேரமும் செலவிட முடியாது. காரணம் கடந்த காலங்களில் இந்துத்துவ விஷக்குப்பிகளில் ஒருவரான பிரவீன் தொகாடியா 2003 -ல் தேவர் குருபூஜைக்குள் ஊடுறுவியதை மதவெறிப் பாசிசமாக கண்டித்து, போராட்டங்கள் நடத்தி, கட்டுரையாக எழுதிய சூட்டோடு (விடியல் வெள்ளி 2003 டிசம்பர்) கொலைவெறியை சாதி வெறியாக உமிழும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்யக்கோரியும், போராட்டங்கள் நடத்தினோம். அப்போது இதே கமலஹாசன், பாரதிராஜாவுக்குமான‌ தேவர்களின் சாதிவெறியை எவரும் சொல்ல முடியாத வகையில் அப்படியே தோலுரித்த சண்டியர் (பிறகு விருமாண்டி) என்கிற திரைப்படத்தை “அலங்காநல்லூர் தலித்துகளை வைத்து எடுக்க வந்ததை மட்டுமே” விமர்சித்தும், தலித் விடுதலைக்கு எதிரான சண்டியர் காளை ஆராய்ச்சியைக் கண்டித்தும் எதிர்ப்புக் குரல் (2004 தலித்முரசு பிப்ரவரி) எழுப்பியவன் என்பதால் இந்த பரமக்குடி கம‌லஹாசனை விமர்சிப்பதில் இப்படியொரு முன் முடிவு எனக்கு.
மற்றபடி அன்றைக்கு கமலஹாசனையும், பிரவீன் தொகாடியாவையும் அழைத்து ஆதரித்தவர்கள் இன்று ஏன் விஸ்வரூபம் விவகாரங்களில் மவுனம் காக்கிறார்கள் அல்லது கமலை மிரட்டுகிறார்கள் என்பதும், அதே பாணியில் இன்றைக்கு இஸ்லாமியர்களுக்கு கண்மூடி ஆதரவளிப்பவர்கள் அன்றைக்கு ஏன் விருமாண்டி கமலஹாசனை எதிர்த்து விமர்சிக்கவில்லை என்பதற்கிடையில் லாவகமாக உள்ளுறைந்து கிடக்கும் அடையாள அரசியல் அப்பட்டமான சாதி வெறி என்பது நன்றாக‌வே தெரிந்தபோதும் கூட . . . .
நேரடியாக விஷ‌யத்துக்கு வருவோம். இஸ்லாமியர்களைப் பற்றிய திரைப்படமோ, இலக்கியமோ, சமயச்சார்பற்ற மத உரையாடலோ, குறைந்த பட்ச கம்யூனிச அரசியலோ எதுவாக இருக்கட்டும். இதில் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியர்களின் கடந்தகால வரலாற்றின் துன்பியல்-இன்பியல் சம்பவங்களையும், அவைசார்ந்த புனித நூல்களையும் ஜனநாயகத்தை வளர்க்க விரும்பும் இந்த நாட்டில் ஏன் ஒருவர் விமர்சிக்கக் கூடாது? தன்னுடைய சுய அடையாளத்தை, அதன் மீதான கேள்வியை ஒரு இஸ்லாமியரே எழுப்ப இஸ்லாம் அனுமதிக்கிறதா? இஸ்லாத்தில் எதை விமர்சிக்கலாம், எதை விமர்சிக்கக் கூடாது என்பதற்கு ஏதாவது வரயறைப்பட்டியல் இருக்கிறதா? இஸ்லாமியர்களை நல்லவர்களாக மட்டுமே பிரதிபலிக்க வேண்டும் என அடம் பிடிக்கும் அடிப்படைவாத பிற்போக்கு அராஜக‌ உரிமையை இந்த மண்ணில் இஸ்லாமியர்களுக்கு வழங்கியது யார்? அடிப்படைவாதத்திலேயே இஸ்லாமியர்கள் மூழ்கியிருக்க வேண்டும் என விரும்புகிற தார்மீக ஆதரவு வழங்கும் சில அடையாள அரசியலை தங்களுக்கு சாதகமாகத் திருப்புவதன் நோக்கம் என்ன? கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பதா/ எதிர்ப்பதா என்பதையும் கடந்து நேரடியாகவே கேட்கிறேன் “ஏன் இஸ்லாமியர்களை இங்கு விமர்சிக்கக்கூடாது?”
————————————————————————————
Porattamநேற்றைய‌ ‘துப்பாக்கி’ படம் வரை விமர்சித்திருந்தாலும் தமிழ்சினிமாவில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்த காலம் ஒன்று உண்டு. 90 -களுக்குப் பிறகு இதுபோன்ற படங்களை எடுக்க சினிமாத் துறையில் பலர் நேர்ந்து விடப்பட்டார்கள். வணிக ரீதியாகவும், இந்துத்துவ ஆதரவாகவும் கூட அது எவ்வாறு உருவெடுத்தது என்பதற்கு தனியாகவே விமர்சனம் வைக்க முடியும். தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் படங்கள் மட்டும் தான் வெளியானதா என்றால் இல்லை. இதில் திராவிடர்கள் அல்லது பார்ப்பனர் அல்லாதோர் எடுத்த படங்கள் மட்டுமே இஸ்லாமியச் சார்பு உடையதாக இருந்தது என்கிற அ. மார்க்சின் வாதம் கூட‌ அபத்தம் தான். பார்ப்பனர் அல்லாதோர் இயக்க திராவிடம் என்கிற அரசியல் சினிமாத் துறையையும் தொங்கிக் கொண்டு பயணம் செய்தபோது பார்ப்பனர்களை விமர்சித்து, அவ‌ர்களை நகைச்சுவையாளார்களாக, கோமாளிகளாக, அப்பாவிகளாக, மாமிசீண்டலாக பாக்கியராஜ் படங்களைக் கடந்தும் தொடர்ந்தன‌. அதேபோல சலவை செய்யக்கூடிய, முடி திருத்தக் கூடிய, பிணம் எரிக்கக்கூடிய, வீட்டுவேலை செய்யக்கூடிய, அமைப்புசாராத் தொழிலாளர்களை படுமுட்டாள்களாக, அழுக்கானவர்களாக, கோமுட்டித் தலையன்களாக விமர்சித்து நகைச்சுவை என கொண்டாடிய காலமும் இதைத் தொடர்ந்து பிலுபிலுவென லந்தடிக்கும் நகைச்சுவை நடிகர்களும், அதற்கான படங்களும் வெளிவந்தன. ஆனால் பேசா படம் – பேசும் படம் கால‌ந்தொட்டே ஒருவித சமூகக் கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீண்டத்தகுந்தவர்களை உயர்வாகவும், தீண்டத்தகாதவர்களை மட்டந்தட்டும் படங்களும், பெண்களை போகப்பொருளாக கொச்சைப்படுத்தும் படங்களும் ஷங்கர் வகையறாவைத் தாண்டியும் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு ஊடகங்களும் முக்கியக் காரணமாக இருந்தாலும் திராவிடத்தின் பெயரால் தான் சினிமா திராவிடர்கள் இவைகளை சித்தரித்தார்கள். கூடவே சினிமாவில் இருப்பவர் கல்லா கட்டியதும் பாதுகாப்புக்காக அரசியல் நோக்கி ஒடுவது, அர‌சியலில் இருப்பவர் சில காலம் சினிமா அந்தப்புரத்தில் ஓய்வெடுக்கச் செல்வது என்கிற கேப்பில் கிடாவெட்டும் கூத்துக் கலையை அறிமுகப்படுத்தியவர்களே இஸ்லாமியர்களை ஆதரித்த திராவிடர்கள் தான்.
அந்த வகையில் பார்த்தால் இஸ்லாமியர்களை மட்டுமே தமிழ் சினிமா குறிவைத்து விமர்சிக்கவில்லை. சூத்திரர்களைத் தவிர ஏனைய அனைத்து வட்டாரத்தின் மீதும் வசவியிருக்கிறார்கள். இத்தகைய திராவிடச் சேட்டை ஒவ்வொரு சமூகமும் உணர்வு பெறுவதுக்கு முன்னும், உணர்வு பெற்ற‌ பின்னரும் நடந்துள்ளது என்றாலும் அப்படித்தான் எடுப்போம் என திட்டமிட்டும் கூட எடுக்கப்பட்டிருக்கிறது. எடுப்பவர்களும் இருக்கிறார்கள் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அப்போது மட்டுமல்ல இஸ்லாமியரை ஒரு சொடக்கில் நேற்று விமர்சித்த துப்பாக்கி படம் வந்த பிறகும் இஸ்லாமியர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை விட புற ஆதரவு அரசியலைக் கையிலெடுப்பதில் தடுமாறிக் கொண்டிருந்தார்கள் என்பது தன் சரி. அன்றைக்கு என்ன செய்வது என்று தெரியாமல் உருவெடுத்த தஸ்லிமா நஸ்றீன் பிரச்சனையைக் கூட அடக்கி வாசித்து தான் விமர்சித்தார்கள். காரணம் புற ஆதரவு அரசியலில் இஸ்லாமியர்கள் கொஞ்சம் நிராயுதபாணியாக நின்ற காலம் அது. உதாரணத்துக்கு: குஜராத்துக்கு முந்தைய-பிந்தைய இந்துத்துவ பாசிசத்தை ஆவணப்படமாக எடுத்த ஆனந்த் பட்வர்தனின் கடவுளின் பெயரால், புனிதப் போர் ( In the Name of God, Holy War) மற்றும் ஹே ராம் (Hey Ram) போன்ற ஆவணப்படங்களை வெளிப்படையாக வரவேற்று தங்கள் சார்பில் திரையிட இஸ்லாமியர்களுக்கு ஒரு தயக்கம் அன்றைக்கு இருந்தது. வெளிப்படையாக கருத்துச் சொல்லவே தயங்கினார்கள். இதன் விளைவாகவே பாலச்சந்தர், மணிரத்னம், அர்ஜூன், விஜயகாந்த், விஜயசாந்தி, கமலஹாசன் போன்றோரின் சில படங்களில் இஸ்லாமியர்களை கொஞ்ச‌ம் நல்லவர்களாக, இரக்கம் காட்டப்பட வேண்டியவர்களாக, அப்பாவிகளாகக் காட்டியதை ரசிக்க முற்பட்டு, அமைதியாக வரவேற்று, உச்சஸ்தாயில் ரசித்த‌தன் ஊடாக‌ இஸ்லாமியர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை இலைமறை காயாகச் சொல்லியதை உண‌ராமல் கோட்டை விட்டதன் கார‌ணம் இஸ்லாமியர்கள் உணர்வற்றவர்களாக (Insencitivity) இருந்தார்கள் என்பது மட்டுமல்ல தமிழ்ச் சூழலில் இஸ்லாமியர்களுக்கு புற ஆதரவு என்கிற திராவிட, சூத்திர அடையாளங்கள் வெளிப்படையாக‌ உருவாகாத காலமாகவும் அன்று இருந்தது.
Massஇன்றைக்கு விஸ்வரூபம் படத்துக்கு தமிழ்நாடு, கர்நாடகாவைத் தவிர கேரள, வடமாநிலங்களில் எதிர்ப்பு உருவாகாததற்கு இதே அடையாள அரசியல் தான் காரணம். மலேசியா மாறுபட்ட சமூகச்சூழல் தகவமைப்புக் கொண்டு இயங்குவதால் அங்கு இப்படத்தைத் திரையிட முடிந்தது. இலங்கையில் தடைவிதித்தார்கள் என்றால் இஸ்லாமியர்களைப் பற்றி தமிழர்களும்-சிங்களர்களும் கொண்டுள்ள ஒற்றைப் புரிதலைக் கடந்தும் கடந்த 20 ஆண்டுகளில் மாற்றம் அடைந்த இலங்கை இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு அரசியல் அசைவுகளையும், வளர்ச்சியையும் பேச வேண்டியிருக்கும். இருப்பினும் இந்த அடையாள அரசியல் செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு ஊடகங்களில், ஹாலிவுட்-கோலிவுட் தளங்களிலும் பிரதிபலிப்பானது. வேறு வழி இல்லாமல் சாதி ஆதரவாளர்களின் திராவிட அடையாள அரசியலை ஏற்றது போல, எண்ணிக்கைப் பெரும்பாண்மைவாத சர்வதேசியம் சார் இஸ்லாம் அடையாளத்தையும் தமிழ் இஸ்லாம் கையிலெடுத்தது. இந்த ஈர்ப்புக்கான காரணங்கள் அடிப்படைவாதம் சார்ந்ததா-சாராததா என்பதல்ல என் கேள்வி. ஆனால் ஒரு ஊக்கமும், வலிமையும் பெறுவதற்கு சாதிய, திராவிட, தமிழ்ச்சூழலையும், சர்வதேசிய புறச்சூழலையும் இங்குள்ள இஸ்லாமியர்கள் சாதகமாக்கினார்கள். இதற்கு இஸ்லாம் நாடுகள் மீது அமெரிக்க கட்டவிழ்த்து விட்ட போர்களும் ஒரு கார‌ணம் என்பதை ஏற்கிறேன். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
———————————————————————————
விஸ்வரூபம் விமர்சன சூடுபிடிப்புக்கு அடுத்ததாகச் சொல்லும் காரணம் ‘கருத்துச்சுதந்திரம்’ இந்த அர்த்தத்தில் கூட அந்த படத்தைத் திரையிட வேண்டும் என நான் சொல்ல‌வில்லை. ஏன் இஸ்லாமியர்களை விமர்சிக்கக் கூடாது? என்பதிலேயே குறியாக நிற்கிறேன். ஆனாலும் இஸ்லாமியர்களின் மத அடையாள அரசியலின் உணர்வுகளை நல்வழிப்படுத்தாமல் கொம்புசீவும் ஆல் இன் ஆல் அரைவேக்காட்டுத்தன ஞானிகளின், புத்திரர்களின் கருத்து விமர்சனத்துக்கும் இங்கே பதில் சொல்ல வேண்டியுள்ளது. முதலாவது கருத்துச்சுதந்திரத்துக்கு குரல் எழுப்புகிறவர்கள் எவரும் (தலித் உட்பட) வால்டர் பெஞ்ச‌மின் சொல்லும் கருத்துக்கு நீதி செய்யும்படி நடந்து கொள்வதில்லை. சந்தர்ப்பவாதம் சார்ந்து, அடையாள அரசியல் சார்ந்து, சாதி வழி ஓட்டுப்பொறுக்கி அரசியல் சார்ந்து தான் கருத்துச்சுதந்திரத்தைக் கதைக்கிறார்கள்.
Kamal - 4இந்தக் கருத்துச்சுதந்திர நோய் அரசியல் கூட அவர்களுக்கு அம்பேத்கர் கார்ட்டூன் பிரச்சனை வெளியான பிறகு தான் வேகமாக தொற்றிக் கொண்ட‌து. இதனையொட்டி ‘தி இன்னோச‌ன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்பட சர்ச்சையும் உருவானது. இந்த படத்துக்காக இங்கே இஸ்லாமிய ஆதரவு வழங்கிய எத்தனை பேர் அம்பேத்கர் கார்ட்டூன், இந்தி எதிர்ப்பு கார்ட்டூன், டேம் 999 திரைப்படம் விவகாரங்களில் அல்லது நாடார்கள் குறித்தப் பாடத்திட்ட நீக்கத்தில் கருத்துச்சுதந்திரம் பேசினார்கள். அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரத்தில் கூட கார்ட்டூனை நீக்கச்சொல்லுவது கருத்துச்சுதந்திரம் என்பதற்கு எதிரான வாதம் தான். ஆனால் அம்பேத்கரை ஒரு சட்ட வரைவுக்குழு தலைவர் என ஒரு வார்த்தைகூட குறிப்பிடாமல், எவ்வித பொறுத்தப்பாடும் இல்லாமல் அந்த கார்ட்டூன் அங்கு மொட்டையாக இருப்பது தான் சட்ட வரைவு ஏன் காலதாமத‌மானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கும் என்பதாலேயே நீக்கும்படி தலித்துகள் குரல் எழுப்பினார்கள். இதே அர்த்தத்தில் தான் டேம் 999 படத்தையும் தடைவிதித்தது தவறு என்கிறேன். ஆனால் தென்திருவிதாங்கூர் நாடார்கள் வரலாறு பாடத்திட்டத்தை நீக்குவதற்கானப் போராட்டம் கருத்துச்சுதந்திரம் சார்ந்து மட்டும் நடைபெறவில்லை. நாடார்கள் தங்கள் வரலாற்றையே அப்பட்டமாக பொய்சொல்லி மறுத்தார்கள். கால்டுவெல் உட்பட காலனியச்சூழலில் எழுதப்பட்ட வரலாற்றாய்வாளர்களின் தோள்சீலை வரலாறு தங்களுடையது இல்லை என ராமஜென்மக் கருத்துச்சுதந்திரம் கோரினார்கள். சற்றேரக்குறைய இதே வகையான சேட்டையை உள்ளடக்கியது தான் விஸ்வரூபம் பட எதிர்ப்பையொட்டிய இஸ்லாமியர் ஆதரவு. இதை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அல்லது கருத்துச் சொல்வதிலிருந்து விலகி அமைதிகாக்கும் அ.மார்க்ஸ், ஞானி, மனுஷ்யபுத்திரன், சீமான், வைகோ, தமிழருவி மணியன் உட்பட எத்தனை பேர் மேற்சொன்ன கருத்துச் சுதந்திரப்போராட்டத்துக்கு சுய அரசியல் அடையாளம் சாராமல் பதிலுரைத்தார்கள்.
தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் எனச்சொல்லும் இவர்கள் வரலாற்றில் வன்முறையை விரும்பாத அப்பாவி அருந்ததியர்களை கோவை குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் எனச்சொல்லி, ஆதித்தமிழர் பேரவையை தடை செய்ய ஆர்.எஸ்.எஸ். போராடியதே. 1996 -களில் கொடைக்கானல் குண்டுப்பட்டியில் குடியமர்த்தப்பட்ட இலங்கைத் தமிழர்களை காவல்துறை அறிக்கை சார்ந்து தீவிரவாதிகள் என முத்திரை குத்தியதே அப்போதெல்லம் இவர்கள் என்ன கருத்து சொன்னார்கள். தீவிரவாத எதிர்ப்பு பேசுவோர் எத்தனை பேர் அன்றைக்கு வெளியே வந்து ஆதித்தமிழர் பேர‌வைக்காக, பிற தலித் இயக்கங்களுக்காகப் போராடினார்கள், கருத்து எழுதினார்கள்? தலித் அரசியலில் தலைமை இல்லை என்றவுடனே ஒருவித திரைமறைவு அமைதியைத்தானே பின்பற்றினார்கள். அமைதிக்கான அந்த இடம் என்ன? அந்த அமைதிக்கான இடத்தில் சாதிவெறித்தனத்தை எதிர்க்க மாட்டோம் – இஸ்லாமியர்களை விமர்சித்தால் மட்டும் எதிர்ப்போம் என்கிற கூட்டணிக்கான இடத்தைக் குறித்தும், இஸ்லாமியர்கள் பற்றிய பார்வையில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று இஸ்லாமியர்கள் அவர்களை நோக்கி ஏன் கேள்வி எழுப்பவில்லை? எவ்வித உரையாடலும் நடத்தியது இல்லை? அல்லது அத்தகைய கூட்டணியினருடன் இணைந்து போராடுகிற சாதிய மனோபவத் துணிச்சல் இஸ்லாமியர்களுக்கு எங்கிருந்து வந்தது? இப்போது புரியும் என்று நினைக்கிறேன் ‘அனைத்து தலித் அல்லாதோர் பேரவையில்’ யாரோ ஒரு இஸ்லாமிய அமைப்பு உறுப்பினராக முடிந்த கூட்டுச்சதியின் காரணமும் அல்லது இராமதாஸ் விட்ட உஸ்கோவை பிற இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்றுபோகவும் முடிவதன் பின்னணியும் இது தான். ஆக, இங்கு சாதியை பாதுகாக்கிற திராவிட‌ர்கள் தான் எங்களைப்போல நீங்களும் மத அடிப்படைவாதத்தை பதுகாருங்கள் என்று இஸ்லாமியர்களை அறிவுறுத்தி ஆதரிக்கிறார்கள் என்பது இஸ்லாமிய அமைப்புகளுக்கோ, அதன் தலைவர்களுக்கோ தெரியாமல் ஒன்றும் இல்லை. ஒருவகையில் திராவிடர்களை நத்திப் பிழைக்கும் அரசியல் தான் இங்கு சிறுபாண்மையினர் அரசியலாகவும் நீட்சி பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த அர‌சியல் பாலிவுட்டைப்போல‌ இனி தமிழ் சினிமாவின் மீதும் தாக்குதல் தொடுக்கலாம் என்பதன் முன்னோட்டமே விஸ்வரூபம் எதிர்ப்பின் அரசியல்.
———————————————————————————–
cartoonஒரு கருத்தை எதிர்ப்பதற்கு இங்கே ஒரு அரசியல் இருக்கிறது என்றால், ஒரு கருத்தைச் சொல்வதற்கான அரசியலுக்கு ஏன் இங்கே இடமில்லை? அந்த இடத்தை தடை செய்யச்சொல்லும் போராட்ட குணாம்சத்தை தமிழ் இஸ்லாமியர்கள் எங்கிருந்து பெற்றார்கள்? தமிழ்சினிமாத் துறையில் சாதியை எதிர்ப்பவரும் இருக்கிறார். சாதியை ஆதரிக்கின்றவரும் இருக்கிறார். தங்கள் மனைவி, சகோதரி, தாய் ஆகியோரிடத்தில் கட்டவிழ்த்த அனுபவங்களில் ஆணாதிக்கத்தைத் தூக்கிப்பிடிப்பவரும் அதில் இருக்கிறார். பெண்விடுதலையை போற்றுகிறவரும் இருக்கிறார். இரு தரப்பினரும் கருத்து சொல்வதற்கான உரிமை உடையவராக இருந்து தயாரிக்கும் திரைப்படங்கள் காலந்தோறும் எடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ‘நான் கடவுள்’ ‘ஏழாம் அறிவு’ பேராண்மை போன்ற அண்மைக்கால படங்கள் சினிமா என்பதையும் தாண்டி அவை சமூக மாற்ற, தத்துவார்த்த, ஊடக அறிவு ஆராய்ச்சி இயலில் நேர்-எதிர் மறையாக விவாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இந்த மண்ணில் ஆர்.எஸ்.எஸ் -சும், சீயோனியமும், தலிபான்களும் உயிரோடு இருக்க முடிகின்றது அல்லது இன்னொரு உயிரை எடுத்தது நான் தான் என சர்வாதிகாரமாகக் கருத்து சொல்ல முடிகின்றது. இதில் சவால் எதுவென்றால் ஜனநாயகத்துக்கு, இறையாண்மைக்கு, நீதிக்கு, அன்பை வளர்க்கும் மனித நேயத்துக்கு இவர்களை எப்படி சகமனிதருக்கு நேராக திருப்புவது என்பது தான் நமக்கு விடப்பட்டுள்ள சவால். இந்த சவாலை முறியடிக்க‌ யாரிடமும் அனுமதிபெற‌ வேண்டிய அவசியமில்லை. முதலாவது இந்தப்படத்தை இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து, திரையிட்டுக் காண்பித்ததே தவறு என்கிறேன். இதுபோன்று நாளைக்கு எத்தனை பேரை தமிழ் சினிமா திரையிட்டு திருப்திபடுத்த முடியும். இச்சமூகத்தில் தீண்டாமை இருக்கிறது என்றால் திரைபடத்தில் அதைக் காட்டித்தான் ஆகவேண்டும். பெண்ணடிமை இருக்கிறதென்றால் ஆணாதிக்கத்தின் அம்புட்டு சேட்டைகளையும் அம்பலப்படுத்தித் தான் ஆக வேண்டும். சீயோனிய வெறித்தனத்தை படம் எடுக்க வேண்டும் என்றால் காமிரா யூதர்களின் இனவாத தொழுமன்றத்தை உடைத்துக் கொண்டு தான் உள்ளே செல்ல வேண்டும். அய்ய‌யோ! கிறித்த‌வர்களின் மனம் புண்படுமே, இயேசுநாதர் அழுவாறே, ஒபாமா ஒப்பாரி வைப்பாரே எனவக்காலத்து வாங்க முடியாது. அப்படி வாங்கினால் சீயோனிய யூத வெறித்தனம் இனவாதத்தாண்டவ‌மாடியபோது இங்குள்ள‌ கிறித்துவர்கள் முட்டைக்கு சாம்பல் தடவி புடுங்கிக்கொண்டா இருந்தீர்கள் என்று சற்று தூக்கலாக எழும் விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதது.
ஒரு குறிப்பிட்ட இனத்தையோ, மதத்தையோ மட்டும் தீவிரவாதியாக சித்தரிப்பது தவறு மட்டுமல்ல தண்டிக்கப்பட வேண்டியது. தீவிரவாதமும், அடிப்படைவாதமும் எந்த மதத்தில் இருந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும், யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். எதிர்வினையில் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு விமர்சிப்பதற்கான சமயச் சார்பற்ற சகிப்புத்தன்மையை வளர்த்தெடுப்பதில் நாம் அனைவருமே தோல்வி கண்டிருக்கிறோம் என்பது தான் கடந்தகால வரலாறு. அப்படி இருக்கும்போது, தாலிபான்களைப் பற்றி பேச முற்பட்டால் ஆப்கானில் நடந்ததை திரைப்படத்தில் காட்டித்தான் ஆகவேண்டும். இது தான் சமூக எதார்த்தம். இந்த எதார்த்த‌ங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை எடுக்கக்கூடாது, இலக்கியங்களை எழுதக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்றால் பொதுவெளியில் இஸ்லாமியர்கள் யார்? அவர்கள் இங்கு யாராக, என்னவாக இருக்க விரும்புகிறார்கள் என்கிற கேள்விக்கும் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும்.
Thuppakkiஇவ்வாறான சூழலில் ஒரு கோல்வாக்கரைப்போல, ராமகோபாலனைப்போல, திலகரைப்போல அட நம்ம வ.உ.சிதம்பரம் பிள்ளையைப்போல கமலஹாசனும் இஸ்லாமிய எதிர்ப்பாள‌ர் என்றே வைத்துக் கொண்டாலும் அவரது ஊடக உரிமையைக் கொடுக்க மறுப்பது மாபெரும் அராஜகம் என ஏன் தெரியாமல் போனது? இஸ்லாமியரோ அல்லது வலிமை கொண்டு நிர்ப்பந்திக்கிற யாரோ ஒருவர் சொல்வதைத் தான் ஒரு கலைஞன் சிந்திக்க வேண்டும், திரைப்படமாக‌ எடுக்க வேண்டும் என்றால் நான் ஏன் சிந்திக்க வேண்டும் அல்லது சிந்திக்கக்கூடாது என்கிற பகுத்தறிவை, சுயமரியாதையை இது மறுப்பதாகத் தெரியவில்லையா? மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்கிற சர்வாதிகார நாடுகளின் கருத்தாக‌ இது தோன்றவில்லையா? எனவே தானே கமலஹாசனால் இந்தத் தடையை ஒரு “கலாச்சார பயங்கரவாதம்” என கிள்ளுக்கீரையாக விமர்சிக்க முடிகிறது. இதற்கு யார் இடம் கொடுத்தது? கமல் தாலிபான்களைப் பற்றி சொல்வதாகாவே இருக்கட்டும். இஸ்லாமியர்கள் ஏன் இது எங்களைப் புண்படுத்துகிறது என்கிறீர்கள்? ஏன் தேவையில்லாமல் நேரடியாக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களை ஆப்கானிய தாலிபான்கள் கூட்டில் அடைக்கிறீர்கள்? எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இந்தக் கூட்டில் தலித் இஸ்லாமியர்களைச் சேர்த்தும் தானே அடைக்கிறீர்கள்! அதற்கான உரிமையை உங்களுக்கு வழங்கியது யார்? தடை விதிக்கவில்லை என்றால் தடை ஏற்படுத்துவோம் என கர்ஜிக்கும் இஸ்லாமியர்களுக்கு இங்கு பொது வெளி என்று ஒன்று இல்லை, எல்லாத்துக்கும் மதம் தான் அடிப்படை என்பது தத்ரூபமாக வெளிப்படுவது ஜனநயகத்திற்கு ஆபத்தானது இல்லையா? இப்படி ஒவ்வொன்றுக்கும் கிளர்ச்சி செய்தால் யாரும் எந்த கதாபாத்திரத்தையும் தருவிக்க முடியாமல் இது முகமூடிகளின் உலகமாக‌ மாறுமே என்பது ஏன் தெரியாமல் போனது? ஆக, பகுத்தறிவுக்கு எதிரான, சுய‌மரியாதையை ஏற்காத மத அடிப்படைவாதத்தை நிறுவும் எல்லா சவால்களும் சாதி ஆதிக்கத்தை நிறுவும் சவல்களுக்கு வலு சேர்க்கிறது. அல்லது திராவிடச்சார்பு பேசும் சாதி ஆதிக்கப் போராளிகளின் போராட்ட அனுபவங்கள் மத அடிப்படைவாதத்தையும் நிறுவ பாடமாக அமைகிறது.
பச்சையாக சொல்லப்போனால் சாதி ஒழிப்பை வலியுறுத்தும் சுயமரியாதையை தலித்துகளாகிய நீங்கள் பேச வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என திராவிடம் பேசும் ஆதிக்க சாதி சமூகங்கள் எப்படி எதிர்பார்க்கிறதோ அதுபோன்றே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கேள்வி எழுப்பும் மதச்சார்பின்மையை ஒரு பார்ப்பானாகிய, ஒரு இந்துவாகிய கமலஹாசனும் பேசக்கூடாது என்கிற மனோநிலையை தமிழ்ச்சாதி சூழலில் இருந்து தமிழ் இஸ்லாமியர்களும் கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு அல்லது கடன் பெற்றார்கள் என்பதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். அதனால் தான் இங்கே இஸ்லாமியர்களும், இராமதாஸ் போன்ற சாதியை உள்ளூற‌ நேசிப்பவர்களும் ஒருசேர கைகோர்த்துப் பயணிக்க முடிகிறது
————————————————————————————————-
Ambedkarசுருக்கமாகச் சொன்னால் காவி நிறம் இந்து ஆர்.எஸ்.எஸ். சின் பயங்கரவாதம் என சுசில் குமார் ஷிண்டே விமர்சித்தவுடன் பெயர் தெரியாத, இதுவரை ஊடகத்தில் தலை காட்டாத, கருத்துச் சொல்லாத காங்கிரசில் இருந்த இஸ்லாமியர்கள் மட்டும் பலர், இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் பல வெளியே வந்து ஷிண்டேவை ஆதரித்து பயங்கரவாதம் பேசிய இடத்தில் தான் இந்திய இஸ்லாமும், தமிழக இஸ்லாமும் ஒருவித சாயம்பட்ட உளவியலில் சிக்குண்டு கிடப்பது அப்பட்டமாகிறது. இது தான் இஸ்லாமியர்களின் நடப்பு அரசியல் எதார்த்தம்.
இந்திய சமூகவியலை ஆய்வுக்குட்படுத்திய அம்பேத்கர் பண்டைய இந்தியாவை பிராமணர்கள் கட்டமைப்பிலும், மத்தியகால இந்தியாவை இஸ்லாமியர் கட்டமைப்பிலும், நவீன இந்தியாவை காலனியக் கட்டமைப்பிலும் வைத்து மதிப்பீடு செய்த‌தில் பிராமணர்களுக்கும், இந்துக்களுக்கும் நிகராக வைத்து இஸ்லாமைப் பார்க்கவில்லை என்றாலும் கூட அவர் நம்பிக்கை இழந்த இடமும், கூடுதலான பண்பாட்டுப்புரிதல் தேவைப்பட்ட இடமாகக் கருதியது இஸ்லாம் பற்றி தான். ஆக‌வே தான் எதிர்கால இந்தியாவில் தீண்டப்படாதவர்களின் தோழமையைப் பெற வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, மதச்சார்பின்மை அடிப்படைவாத வேரறுப்பு, கருத்தியல் சார்ந்த பகுத்தறிவு புரிதல், பெண்விடுதலை என அடுக்கிக் கொண்டே போகிறார்.
தமிழ் இஸ்லாமியர்களே! விஸ்வரூபம் திரைப்பட எதிர்ப்பின் வழியாக சொல்ல‌ வருவது ஒன்றே ஒன்று தான். சாதியை விட்டு தமிழர்கள் வெளியே வந்து விவாதம் நடத்துவது எப்படி சாதி மறுப்புக்கு துணைபோகிறதோ அது போன்றே மதத்தை விட்டு அல்லது கொஞ்சமாவது தள்ளி வைத்து விட்டு விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் வெளியே வருவது தான் ஜனநாயகத்தை வளர்க்க விரும்பும் நாட்டில் இஸ்லாமியர்களுக்கும் அவ்ர்களின் அர‌சியலுக்கும் ஆரோக்கியமான சூழலைக் கொடுக்கும்.

– அன்புசெல்வம்

Posted in Uncategorized | 6 பின்னூட்டங்கள்

தலித் அரசியல் அடையாளம் காண வேண்டிய மீனவர் எழுச்சி மாநாடு : நவம்பர் 21, 2012

இந்தியாவில் தற்போது நிலவி வரும் ‘புரோட்டீன் பைரஸி’ எனும் தட்டுப்பாடு குறித்து தாய் – சேய் சுகாதார நல மையங்களும், கடல் உணவு ஆராய்ச்சி நிறுவனங்களும் மிகவும் கவலையடைந்து வருகின்றன. அது போன்றே திராவிட அரசியலால் சீரழிந்து போன எதிர்கால தமிழ்நாட்டு அரசியலும் மாற்று அரசியலுக்கான புரதத் தேடலில் தவித்து வருகின்றன. அதாவது ஒரு நாட்டின் புரதச்சத்து உணவு உள் நாட்டு மக்களுக்கு கிடைக்காத வகையில் பெரும்பாண்மையான புரத உணவு அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஏற்படும் தட்டுப்பாட்டையே  ‘புரோட்டீன் பைரஸி’ (Protein Pyracy) என்கின்றனர். ஒரு மனிதரின் ஆரோக்கிய உடல் வளர்ச்சித் திறனுக்கும், அறிவுக் கூர்மைக்கும் மிக அவசியமான ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்’(Omega 3 Fatty Acid) மாட்டிறைச்சியில் மட்டுமல்லாது கடல் மீனில் மிக மலிவாகக் கிடைப்பதால் இதன் மீதான தட்டுப்பாடு மற்றும் இதனை பெறுவதற்கான போட்டிகள் மீன் வளங்களைச் சூறையாடும் நாடுகளுக்கிடையேயான பொருளாதார அரசியலாகவும் வலுப்பெற்று வருவதை நார்வே ஆஸ்லோ பல்கலைக் கழகம் விவாதப்படுத்தியுள்ளது. இதன் படி பார்த்தால் இறைச்சி உணவு விரும்பாத சைவப்பிரியர் ஒருவர் மீனை மட்டும் அசைவம் இல்லை என வங்காளப் பார்ப்பனர்களைபோல ஏற்றுக் கொள்வதற்கான நோக்கம் மற்றும் தலித்துகளின் மாட்டுக்கறி திருவிழா ஊக்குவித்தலும் இதுவே என்பதும் புலப்படும். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் மிருக உணர்வோடு நடந்து கொள்வார்களா? என்கிற விவாதப் பூடகத்தை அவிழ்த்து விடுபவர்களின் உளவியலை உடைக்கும் இடத்தை சர்க்கரை, இனிப்பு பானங்கள், வைட்டமின் மாத்திரைகள், பற்பசை போன்ற அசைவ உண(ர்)வுகளை பார்ப்பனர்களுக்கும் வழங்கிய பணியில் இந்த அமிலம் தலித்துகளுடனும், மீனவர்களுடனும் கருத்தியல் களத்தில் கை கோர்த்து நிற்கிறது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை, பாங்களாதேஷ் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளையொட்டி உருவாகும் மீன் வளம், மீன்பிடி தொழில், மீனவர் மீதான தாக்குதல், மீனவர் உரிமை பாதுகாப்பு போன்றவை வெறுமனே தேசியம் என்கிற சிராய்ப்புகளுக்கும் அப்பாற்பட்டது என்பதும் இவ்விவாதம் உணர்த்துகிறது. அது மட்டுமல்ல இத்தகைய சர்வ தேசிய பொருளாதார கடல் சார் அரசியலும், அதன் சாதக – பாதக அம்சங்களும் இந்திய – தமிழக மீனவர்களின் அரசியல் எழுச்சியின் மீது மிகப் பெரும் தாக்கத்தையும் உருவாக்கியுள்ளது. இந்திய கடல் உணவு ஏற்றுமதிக் கழக அறிக்கையின்படி 2009 – 2010 ஆம் ஆண்டில் மட்டும் 10048 கோடி ரூபாய் அந்நியச் செலாவனியை ஈட்டியுள்ள தகவல் இதற்கு முந்தைய ஆண்டைவிட 16 மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. 2012 -ல் இம்மதிப்பு 40 மடங்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாட்டுக்கறியைப்போல உலக மீன் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா உள்நாட்டு வேளாண்மைத் தொழிலுக்கும் அதன் அரசியல் தார்ப்பரியங்களுக்கும் இணையாக வளர்ந்துள்ள போதிலும் இதனை மீன் உற்பத்தி என்கிற மீனவர்களின் பொருளாதார அரசியலோடு மட்டும் போட்டியிடுவதாக குறுக்கி பார்த்துவிட முடியாது. அதைக் கடந்து தேசிய மற்றும் உலகம் தழுவிய கட்டுப்படுத்த முடியாத மூலதனங்களை உடைய அதிகாரத்துக்கு எதிரான கடலோர மீனவர்களின் சமூக அரசியல் எழுச்சியாகவும் கிழக்காசிய நாடுகளில் அது வலுவடைந்து வருவதை கடந்த நவம்பர் 21 – ல் தமிழகம் முழுதும் நிகழ்ந்த ‘அகில உலக மீனவர் எழுச்சி நாள்’ பறை சாற்றியுள்ளது.
மாட்டுக்கறி, தலித் அரசியலோடு இரண்டறப் பிணைந்திருப்பதைப்போல உடலின் ஆக்கப்பூர்வ ஆரோக்கியத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் மீன் புரதம் அரசியல் அவசியம் என்பது மீனவர்களின் பொருளாதார அரசியலோடு இணைந்திருப்பதும் தவிர்க்க முடியாததாகின்றது. அதையும் கடந்து தலித் அரசியல் எழுச்சியைப் போல அடித்தள சமூக எழுச்சிக்கும், எளிய மக்களின் அதிகாரம் நோக்கிய போராட்டத்துக்கும் இனி மீனவர்களின் சமூக எழுச்சிக்கான அரசியலும் தவிர்க்க முடியாததே. 21. 11. 2012 அன்று இனயம் புத்தந்துறையில் நிகழ்ந்த கன்னியாகுமரி மாவட்ட கடலோர மீனவர்களின் எழுச்சி மாநாடு எதிர்கால தமிழக அரசியலின் மூன்றாவது அணி அல்லது மாற்று அரசியல் உருவாக்கம் என்பதற்கான கட்டமைப்பில் கடலோர மாவட்டங்களின் மீனவ எழுச்சி மிகப் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சியும், நெய்தல் மக்கள் இயக்கமும் இணைந்து ஒருங்கிணைத்திருந்த மாநாட்டுச் செய்தி தமிழக ஊடகங்களில் வழக்கம்போல் கூடங்குளம் போராட்டத்தைப் போல இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. கடல் மணற்பரப்பெங்கும் அலைகள் போல ஆர்ப்பரித்துத் திரண்டிருந்த மீனவ மக்கள் கூட்டத்தையும், அவர்கள் முன்வைக்கும் அரசியல் தீர்மானங்களையும் கூடங்குளத்தை வரவேற்பதாகச் சொல்லும் காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க கட்சிகள் உட்பட மேடைக்குப் பின்புறமாகவே நின்று, மாநாட்டை ஆதரித்து களப்பணியாற்றின. அதற்கு காரணம் தமிழக அரசியலிலும், கடலோர  பெரும்பாண்மை மீனவ கிராமங்களிலும் மீனவர் சமூகங்கள் வஞ்சிக்கப்படுவதே அவர்களின் மறைமுக ஆதரவுக்கு காரணம். இது வரையிலும் 60 -க்கும் மேற்பட்ட அமைப்பு சாராதத் தொழிலாளர் அமைப்புகள், 14 -க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், 18 -க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், அறிவுத்தளத்திலிருந்தும் – மாநிலம், நாடு கடந்த மக்கள் இயக்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் இயக்கங்களின் தடையற்ற ஜனநாயப் பேராதரவு (Democratic Solidarity) என வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் ‘கூடங்குளம் எதிர்ப்பு இயக்கம்’ வெறுமனே மீனவர்களின் போராட்டம் என கொச்சைப்படுத்தப்படும் பின்னணியையும் இக்கட்சிகள் உணர்வு சார்ந்து புரிந்து ஆதரிப்பதை ‘உலக மீனவர் எழுச்சி நாளில்’ கண்டுணர முடிந்தது.
மதம் சாராமல், கட்சி சாராமல், தன்னார்வக்குழு அடையாளம் சாராமல் தமிழக மீனவர் பேரவை (TFF), தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு, தமிழகக் கடலோர மீனவர் கூட்டமைப்பு, மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு, நெய்தல் மக்கள் இயக்கம், இராமநாதபுரம் மாவட்ட மீன் தொழிலாளர்கள் யூனியன், தமிழ்நாடு மீன் தொழிலாளர்கள் சங்கம், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி என பல்வேறு மீனவர் அமைப்புகளின் ஒருமித்த ஒருங்கிணைவு மீனவர்களின் பொருளாதார அரசியலுக்கும், சமூக எழுச்சிக்கும், தமிழக அரசியலின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் மாபெரும் சவாலை முன்வைத்துள்ளது. தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களின் 32 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றி – தோல்வியை தீர்மானிப்பதில் மீனவர்களின் அரசியல் பங்கேற்பு மிக முக்கியமானது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சியோ அல்லது தமிழகக் கடலோர மீனவர் கூட்டமைப்போ அல்லது மீனவர் சங்கங்களின் கூட்டமைப்போ ஒற்றைச் சொடக்கில் 30 லட்சம் வாக்குகளின் திசைவேகத்தை தீர்மானித்து விடமுடியும். ஆனால் அதனை மீனவர் அமைப்புகள் தீர்மானித்து விடக்கூடாது என்பது தான் இதுகாறும் செய்து வரும் திராவிட இயக்கங்களின் அரசியல் யுக்தி.
அருட்பணி. எட்வின் வின்சென்ட் அருட்பணி. ஜோசப் ஜஸ்டஸ் தோழர். அன்புசெல்வம் அருட்பணி. குணபால் ஆராச்சி அருட்பணி. கில்டஸ் சொ.சு. மிக்கேல் தோழர். ஆன்றனி கிளாரட்உதாரணத்துக்கு தற்போதைய அரசியலில் மீனவர்களின் பங்கேற்பை பார்க்கலாம். புதிய சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு 13 கடலோர மாவட்டங்களின் 32 சட்டமன்றத் தொகுதிகளில் வெறும் 2 உறுப்பினர்கள் (ஜெயபால் – நாகப்பட்டிணம், குப்பன் – திருவொற்றியூர்) மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்கு தொகுதிப் பங்கீடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரிக்கப்பட்டிருக்கும் 5 தொகுதிகளில் கிள்ளியூர், குளச்சல், கன்னியாகுமரி தொகுதிகளில் மட்டும் மீனவ வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் மூன்றுமே வெற்றி பெற்றிருக்கும் என்பது ஒரு தகவல். 1979 – முதல் 1984 வரையிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 23 கிராமங்களில் மீனவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இன்றைக்கு 10 ஊராட்சிகளைக் கூட கைப்பற்ற முடியாமல் போனது. குறிப்பாக வடக்கு – தெற்கு என பிரிக்கப்பட்டிருக்கும் கடலோர 10 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்க முடியாமல் போனதுக்கு காரணம் தொகுதி மறு சீரமைப்பு அரசியலே. இதையே கிழக்கு – மேற்கு என பிரிக்கப்பட்டிருந்தால் எல்லா கட்சிகளின் மாவட்டச் செயலாளர்களும் மீனவர்களே வந்திருப்பார்கள். அவ்வாறு வந்திருந்தால் மீனவர் சார்பு அல்லது மீனவர் தலைமை கொண்ட அரசியலையே சார்ந்திருக்க நேரிடும் என்பதால் தமிழக திராவிட, காங்கிரஸ் கட்சிகளின் திட்டமிட்ட புறக்கணிப்பே மீனவர் அரசியல் எழுச்சி என்பதை இந்த மாநாடு வெட்ட வெளிச்சமாக்கியது. கடலோர அனைத்து மீனவர் ஒருங்கிணைப்பும், அதனை நேர்மையோடு முன்னெடுக்கும் தலைமையும் இப்போதைய தேவை என்பது முன்வைக்கபடுகிறது.
ஆனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கருத்தியல் மற்றும் செல்பாட்டுத் தளத்தில் மிகப்பெரிய வெற்றியும் கண்டுள்ளனர். பாரம்பரிய மீன்பிடி பாதுகாப்பு, மன்னார் வளைகுடாவில் 21 தீவுகளையும் சுற்றி ஒளி மிதவைகள் மிதக்க விடும் திட்டத்தை கைவிடுதல், கடல் வளங்களை அழிக்கும் தொழிற்சாலைகளைகளை மூடுதல், 13 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நிறைவேற்றப் படாமல் இருக்கும் ‘முராரி குழு’ -வின் 21 பரிந்துரைகள் நிறைவேற்றக் கோரல், கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்களை பாதுகாத்தல், கூடங்குளம் அணு மின் திட்டத்தை மூடுதல், போராட்டக்குழுவினர் மற்றும் பொது மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை திரும்பப் பெறுதல், 144 தடையுத்தரவை விலக்கி போலிஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுதல் என சங்கிலி போல் தொடரும் மிக அண்மைக்கால கோரிக்கைகளின் பின்னணியத்தையும் அதன் சாரம்சத்தையும் கடலோர மீனவக் குழந்தைகளே மனப்பாடமாக ஒப்புவித்து விடுவார்கள். அந்த அளவிற்கு மீனவர் எழுச்சி மக்கள் பேரியக்கமாக வளர்ந்துள்ளது. ஆனால் திராவிட – காங்கிரஸ் கட்சிகள் மீனவர்களின் எழுச்சியை தங்களின் அதிகாரப் பாதுகாப்புக்கு சாதகமாக்குவதையும் கடந்து கூடங்குளம்  விவகாரத்தையொட்டி அவர்களை கொச்சைப் படுத்துவதும் இப்போது கண்கூடு.
தோழர். ஆன்றனி கிளாரட்மீனவர்களின் இத்தகைய எழுச்சி கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயங்கவிடாது என்பது மட்டுமல்ல, மாறாக தமிழக திராவிட – காங்கிரஸ் கட்சிகளின் நயவஞ்சகப் போக்கையும் சூறாவளிக்குட்படுத்துவது தெரிகின்றது. அதற்கான நேச சக்திகளை இப்போது மீனவர் இயக்கங்கள் அடையாளம் காணத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தலித் இயக்கங்களையும் அதன் கட்சிகளையும் ஆதரவு சக்தியாகக் கருதுகின்றனர். இதற்கு ஒன்று தேசிய அடையாளமோ அல்லது ஒடுக்கப்பட்ட அனுபவமோ அல்லது சமூக அரசியலில் பாகுபடுத்தப்படும் புறக்கணிப்போ எது வேண்டுமானாலும் காரணமாயிருக்கலாம். அதிலும் குறிப்பாக மீனவர் இளம் தலைமுறையினர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீதும், அவரது அரசியல் செயல்பாடுகள் மீதும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர் என்கிற செய்தி எதிர்கால தலித் அரசியலுக்கு வலுவான இடத்தை உருவாக்கி தந்துள்ளது. மாநாட்டில் எழுச்சியுரையாற்றிய தோழர். ஆன்றனி கிளாரட் மற்றும் தோழர். பெர்லின் போன்றோர் மாபெரும் புரட்சிகர அரசியலை மீனவர் எழுச்சிக்கு வித்தாக்கியதில் இந்த உண்மையைக் கண்டுணர முடிகின்றது.
ஏறத்தாழ 13 ஆண்டுகளுக்கு முன் மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (NAPM) தோழமையில் காபிரியேல் டீட்ரிச் மற்றும் தேசிய மீனவர் பேரவை (NFF) தலைவர் தோழர். தாமஸ் கொச்சேரி அவர்களுடன் இணைந்து தமிழக மீனவர் பேரவையை (TFF) தோழர். பீற்றர் தாஸ் அவர்களின் தலைமையில் கட்டமைப்பதற்காகவும், நர்மதா பாதுகாப்பு இயக்கத் தலைவர் (NBA) மேதாபட்கர் அவர்களை தென் கடலோரப் பகுதிகளுக்கு அழைத்து வந்து மீனவர் பிரச்சனைகளை தேசிய கவனத்திற்குட்படுத்தவும் கன்னியாகுமரி கடலோர மாவட்டங்களில் பயணம் செய்ததை நினைவுபடுத்திப் பார்த்தேன். இருப்பினும், முதன் முதலாக ஒரு மக்கள் மாநாட்டில் எனது (அன்புசெல்வம்) ‘அணு உலைக்கதிர் வீச்சு’ அனுபவங்களை மிக வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டேன். அரங்குகளில் மட்டுமே இதுவரையிலும் பேசி வந்த, இந்திய அணு சக்தி கழகத்தின் கீழ் செயல்படும் கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இரண்டு அணு மின் நிலைய அணு உலைகளிலும் நான் கண்ட, அனுபவித்த கதிர் வீச்சு அனுபவங்களை கடலோர மீனவ மக்களிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் முகத்தில் ஒரு வித தோழர். அன்புசெல்வம்அதிர்ச்சியும், சோகமும் உருவானதை என்னால் கண்டுணர முடிந்தது. 99.9 சதவிகிதம் கூடங்குளம் அணு உலை மாபெரும் விபத்தை சந்திக்கப்போவது உறுதி. எனவே நாம் போராடி மடிந்தாலும் அடுத்த தலை முறையினரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவாவது நாம் கூடங்குளத்தை விரட்டியடிக்க வேண்டும் என்கிற முழக்கத்தை முன்வைத்தேன்.
மாநாட்டின் ஒவ்வொரு அசைவும் மீனவர் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை வரைந்து கொண்டேயிருந்தது. முக்கிய நிகழ்ச்சியாக மாநாட்டில் திறக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் நீரோடி ஜோசப், தூத்தூர் றைமண்ட், கொட்டில்பாடு துரைசாமி, குளச்சல் சைமன், மாண்புமிகு லூர்தம்மாள் சைமன், கீழமணக்குடி டாக்டர் பீற்றர், கோவளம் மரிய ஜான் காளிங்கராயர், கன்னியாகுமரி இராஜரத்தின வர்மா போன்றோரின் படத்திறப்பு சமூக அரசியல் பங்களிப்பு தலித் அரசியல் தலைவர்களின் வரலாற்றைப்போலவே இருட்டடிப்பு செய்யப்பட்டதை வெளிக்கொணர்ந்தது. களரி குழுவினர் மற்றும் கடலோர தொடக்கப்பள்ளி சிறார்களின் கலை – இலக்கிய – பண்பாட்டு அசைவாடல் ‘தலித் விடுதலைக்கு கலைகளையும் கருவிகளாக்குவோம்’ என்கிற முழக்கத்தை அணியமாக்கியது. அது மட்டுமல்ல அரசு உயர் பதவிகளில், ஆட்சி மன்றங்களில் மீனவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் ‘ மாண்புமிகு லூர்தம்மாள் சைமன் நினைவு அரசுப்பணி பயிற்சி மய்யமும் தொடங்கி வைக்கப்பட்டது. பல மீனவக் குழந்தைகளின் முகங்களில் நாங்களும் IAS, IPS, IFS, IRS, ICWS  . . . ஆக வளருவோம் என்கிற மகிழ்ச்சி மேலோங்கியது.
நீரோடி ஜோசப், தூத்தூர் றைமண்ட், குளச்சல் சைமன், மாண்புமிகு லூர்தம்மாள் சைமன்ஆனால் இது போன்ற உண்மைகள் அண்மைக்காலமாக மீனவர்கள் மீது அவதூறாகப் பிரயோகிக்கப்படும் மதவாத அரசியலாலும், கட்சி சார் பிளவுகளாலும், தமிழ்த்தேசிய முரண்களாலும், திராவிடப் புரட்டுகளாலும், சரியான நேச சக்திகளின் ஆதரவின்மையினாலும் தலித் கட்சிகளைப் போலவே கொச்சைப்படுத்தப்படுகின்றன என்பதை கூடங்குளம் போராட்டக் குழுவினர் மட்டுமல்லாமல் சிறுபாண்மை மற்றும் தலித் இயக்கங்களும் புரிந்து தங்களின் தார்மீக ஆதரவை தோழமைக்குட்படுத்துவது கொட்டில்பாடு துரைசாமி, கீழமணக்குடி டாக்டர் பீற்றர், கோவளம் மரிய ஜான் காளிங்கராயர், கன்னியாகுமரி இராஜரத்தின வர்மாஇப்போதைய தேவையாக இருக்கிறது. குறிப்பாக தலித் கட்சிகள் மீனவர்களின் நலன் சார்ந்த ஆதரவை தேர்தல் அறிக்கையாக மட்டும் பாவிக்காமல் மீனவர்களுடன் கருத்தியல் மற்றும் செயல்பாட்டுத் தளத்தில் இணைதல் என்பது எதிர்கால தலித்  அரசியலுக்கு சாத்தியாமன உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பது இம்மாநாட்டின் மூலம் உறுதிப்படுகிறது. ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கும், சமூக விடுதலைக்கான அறிவுக் கூர்மைக்கும் மாட்டிறைச்சியும், மீன் உணவும் இன்றைய சர்வதேசிய புரத அரசியலில் ‘ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டாக’ செயல்படுவதைப் போல தலித்துகளும், மீனவர்களும் எதிர்கால தமிழக சமூக அரசியல் விடுதலைக்கு இணைந்து தோழமையுடன் அணி சேர வேண்டும் என்பதும் தலித் அரசியலே.
மீனவர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள் :-
* கடலோர மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் கூடங்குளம் அணு உலை திட்டத்தை அரசு உடனே கை விட வேண்டும். அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
* ஈரான் நாட்டில் பிணைக்கைதியாக இருக்கும் குமரி மாவட்ட மீனவர்கள் 29 பேரையும் மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மத்திய அரசின் வேளாண் துறையிலிருந்து மீன் வளத்துறையை தனியாகப் பிரித்து மீனவர் நலத்துறை என்ற பெயரில் தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.
* தொடரும் கடல் அரிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்.
* கடல் அரிப்பிலிருந்து மீனவர்களின் குடியிருப்புகளைப் பாதுகாத்திடவும், மீனவர்கள் தங்கள் கிராமங்களில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும், பொருத்தமான இடங்களில் விஞ்ஞானப்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் கடல் அரிப்புத் தடுப்புச் சுவர், மீன்பிடித் துறைமுகங்கள், தங்கு தளங்கள் ஏற்படுத்த வேண்டும்.
* அனைத்து மீனவ கிராமங்களையும் தனித்தனி ஊராட்சிகளாக மாற்றி ஆணைப் பிறப்பித்து, அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சலை வசதி மற்றும் சுகாதார வசதிகலை மேம்படுத்த வேண்டும்.
* விவசாயப் பெருமக்களுக்கு இயற்கைச் சீற்றத்தால் இழப்பு ஏற்படும்போது இழப்பீடு வழங்குவது போல மீனவர்களுக்கும் இயற்கைச் சீற்றத்தால் இழப்பு ஏற்படும்போது இழப்பீடு வழங்க வேண்டும்.
* குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் வாழும் மீனவர்களின் இனத்தைச் சேர்ந்த உள்நாட்டு கிராமங்களில் குடியிருக்கும் உள்நாட்டு மீனவர்களை, மீனவர் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள் நாட்டு ஆண் – பெண் மீனவர்களை கடற்கரை மீனவர்களைப் போன்று முழு நேர மீன் தொழிலாளர்களாக அறிவித்து அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

சூத்திர எழுச்சியில் : ‘வைகோ’ திடீர் பிரவேசம்

ஆக, இதுகளுக்கு மாற்றாக அல்லது அதாகப்பட்ட தலைவர்களோடு ஒப்பிடுகையில் ‘தமிழ்நாட்டில் வைகோ – தான் எனது அடுத்த சாய்ஸ்’என்று குல்தீப் நய்யரே சொல்லிவிட்டார். இதைக்காட்டிலும் ‘என்னோடு இருக்கும் 200 எம்.பி.களுக்கு இணையானவர் வைகோ’ என்பதாகச் சொல்லப்படும் இந்திரா காந்தியின் புகழாரத்தையும் விட ‘இன்றைய இளம் தலைமுறையை ஈர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டும் கட்சி’ -யாக விகடன் மேற்கொண்ட இணைய தளக் கருத்துக் கணிப்புக்கு வலு சேர்க்கும் விதத்தில், ஞானியும் கல்கியில் ‘ஓ’ போட்டுள்ளார் (பா.ம.க 6% தேமுதிக 18% காங்கிரஸ் 11% மதிமுக 65%). ஒரு விதத்தில் ‘ விபத்தில் சிக்கித் தவிக்கும் தி.மு.க -வுக்கு வைகோ கை கொடுத்துள்ளார்’ என்கிற http://www.tamil.oneindia.in விளம்பரத்தையும், கூடங்குள ஆதரவாளர் தமிழருவி மணியனின் அகடவிகட அரசியல் அனுபவத்தையொட்டி தொ.பரமசிவம், அப்துல்லாஹ் பெரியார்தாசன், ஆர்.நல்லக்கண்ணு, சேரன், பாரதிராஜா என ஒரு சூத்திரக் கூட்டமே வைகோ-வின் கொள்கை வாதாடிகளாகக் களம் இறங்கியுள்ளனர் என்பது வரையிலும் . . .
உற்றுக் கவனித்தால் வெகுசில மாதங்களாக மட்டுமே கவனப்படுத்தப்படும் வைகோ -வின் அன்றாட நிகழ்ச்சி நிரலும் அது சார்ந்த நடவடிக்கைகளும் ‘வைகோ’ எனும் ஆளுமையை திராவிட மாயை அரசியல் தலைமை நோக்கி நகர்த்தப்படுவது இயல்பாக நிகழ்கின்ற ஒன்றாகக் கணிக்கத் தோன்றும். ஆனால் அதுவல்ல உண்மை. அவர் அழைக்கப்படும் அல்லது பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெற்றவையல்ல எனினும் வைகோ ஒரு மிகச் சிறந்த ‘பொலிட்டீசியன்’ என்பதற்கான தரச்சான்றுகளாக ஸ்டெர்லைட், ஈழம்-ராஜபக்சே எதிர்ப்பு, முல்லைப்பெரியாறு, காவிரிக்காக என்.எல்.சி. முற்றுகை, கூடங்குளம் மணல் புதைவு, மூவர் தூக்கு, மாதக்கணக்கில் ஓடிக்கொண்டே இருக்கும் அவரது பேச்சுக் குறுந்தகடு, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் ஆவணப் பதிவு, அற்ப-சொற்பமாக ஒரு செய்தி பல கோணம் விவாதங்கள் என இன்றைய மீடியாக்களையும் வாதாடி நிரப்புவது உள்ளிட்டவைகளில் வைகோ எவருக்கும் ஈடு இணையற்ற அரசியல் தலைவராக திட்டமிட்டு எழுந்தருளப்பட்டு வருகிறார்.
அதாவது சமகாலத்தில் எழுச்சியடைந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக பரிணமித்து வரும் வேளையில், தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே ஒரு வகை திராவிட – சூத்திர மயக்கத்தில் எழுந்தருளிய மதிமுக எனும் கட்சியை வெகுஜன இயக்கப் பாணியில் நகர்த்தும் யுக்தியே கவன ஈர்ப்புக்கான காரணம் என்பது உட்பட . . .
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –  – – –
ஜனநாயக நாட்டில் எவர் வேண்டுமானாலும் அரசியல் அதிகாரத்தலைமைக்கு வரலாம் என்கிற பேச்சு எளிமையாகத் தெரிந்தாலும் பெரும்பாண்மை சாதித் தொகுப்பின் அடையாள அரசியலையொட்டிய சூத்திர நடவடிக்கைகளே தமிழக அரசியல் விதியாக இதுகாறும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கு ஆதாரமாக பார்ப்பன எதிர்ப்பு அரசியலும், தலித் சாதக‌ப் பேச்சுகளும் போதுமான மட்டில் பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் எழுச்சிக்குப் பயன்பட்டன என்பது கடந்த கால அரசியல் வரலாறு.  இப்பட்சத்தில் 60 ஆண்டுகளுக்குப் பின்னும் கூட அதே சூத்திர வழித்தோன்றல்களே நிரந்தர அரசியல் வளர்ப்புகளாக வரமுடியும் என்பதை தேர்தல் அணிக்கணக்கு விதி எதுவும் உத்தரவாதப் படுத்தாத நிலையில் வைகோ -வை ஏன் சிறந்த பொலிட்டீசியனாக வாதாடிகள் முன் மொழிய வேண்டும்? இப்போதைக்கு இதனை வெறும் மாற்று அரசியல் என கணித்துவிட முடியுமா? அல்லது இத்தகைய கருத்துகளால் வைகோ ஆளுமை நிச்சயம் உயர்ந்து விடுமா? அல்லது இது முக்கியப்படுத்தப்பட வேண்டிய ஒரு பிரச்சனை தானா? என்றால் . . .
வைகோ -வின் தற்போதைய நடவடிக்கைகளைக் கவனித்து வரும் எவருக்கும் அவர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை கொண்ட தலைவராக ஏற்கத் தூண்டுவதும் ஒரு வகை திராவிட யுக்தி தான். சமூக நீதிக்கான முகாந்தரங்கள் எதுவுமில்லாத அரசியல் தலைவர்களை சினிமா பாணியில் கடவுளர்களாகக் கும்பிட்டுப் பழகிய சடங்குகளுக்கு நடுவே ஆள்-அரவமற்று நடைபோடும் வைகோ -வை எவருக்குமே பரவசிக்கத்தோன்றும். ராஜபக்சேவை எதிர்க்கச் சென்ற தனது பாசத்துக்குறிய பா.ஜ.க ஆட்சி புரியும் மத்திய பிரதேசத்தில் குழந்தைகளும் அப்படி ரசித்தார்கள் என தேசிய செய்திகளே சொல்கின்றன. திமுக – கருணாநிதி எதிர் அதிமுக – ஜெயலலிதா வகை கார்ப்போரேட் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டு அலுத்துப் போன மக்களுக்கு வைகோ -வை ஏற்கும் மனோபவத்தைப் பெற பெரிதும் சிரமப்பட வேண்டியதில்லை. இருப்பினும் தமிழகத்தின் எதிர்கால அரசியலைக் குறித்து ஆருடம் கணிக்கும் சூத்திர அறிவு ஜீவிகளும், அதுகளைச் சார்ந்த ஊடகங்களும் வைகோ – வை உருமா கட்டி இழுக்கும் சிலாகிப்பிலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தால், இதற்குள் ஒளிந்து கிடக்கும் பெரும்பாண்மை சாதி மனோபவத்தைக் கட்டுடைப்பதிலிருந்து தலித் அரசியல் ஒரு போதும் விலகி நிற்கப்போவதில்லை என்பது அழுத்தமாகப் புலப்படும்.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –  – –
தலித் – பழங்குடியினரின் உரிமைகளை மறுக்கும் வகையில் சூத்திர எழுச்சியின் மூலம் வைக்கப்படும் பிரச்சனைகளான எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கலப்பு மணம் கூடாது, சாதிவாரிக் கணக்கெடுப்பு தான் நல்லது, பரமக்குடி துப்பாக்கிச் சூடு, அம்பேத்கர் கார்ட்டூன் விவகாரம் மற்றும் சிலை உடைப்பு, தமிழகக் காவல்துறையை உலுக்கிய வாச்ச்சாத்தி தீர்ப்பு போன்ற சாதியைக் கட்டுடைக்கும் முக்கியப் பிரச்சனைகளிலோ அல்லது இந்திய அளவில் மாற்று அரசியல் பேசுவதில் பெண்ணிய தலைமையை ஏற்க வேண்டும் என்கிற பெண்விடுதலை ஆதரவிலோ அல்லது காலம் காலமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பண்பாட்டுப் பழமைவாதங்களை குறைந்த பட்சம் அவர் நேசிப்பதாகச் சொல்லும் பெரியார் வழியில் நின்றோ தனது நிலைப்பாடு இது என ஒரு போதும் தெளிவு படுத்தாதவைகளைத் தவிர்த்து விட்டு, எவரையும் பகைத்துக் கொள்ளாத, மிக நேரடியாகத் தொடர்பில் இல்லாத சற்றே தொலைவில் உள்ள பிரச்சனைகளான‌ ஸ்டெர்லைட், ஈழம், முல்லைப்பெரியாறு, காவிரி, கூடங்குளம் எனத் தொடரும் மேலோட்டமான பிரச்சனைகளை மட்டுமே கவனப்படுத்தும் வைகோ -வும், அவர்தம் வாதாடிகளும் சமகாலத்தில் வேறெந்த அரசியல் தலைவர்களிடத்திலும் இத்தகைய அல்லது இதனைக் கடந்த ஆளுமையை அடையாளம் காண ஏன் தவறினர்? குறிப்பாக, இதுவரையிலும் ஒதுக்கப்பட்டு வருகின்ற தலித் கட்சிகளின் தலைமையை அடையாளப்படுத்தும் திருமாவளவன் அல்லது கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் செயல்பாடுகளை கவனித்தும், கவனம் சிதறியும் பார்த்தவைகளைக் கடந்து அப்படி என்ன சிறப்பான ஆளுமையை வைகோ வாதாடிகள் வைகோ -விடம் கண்டு விட்டனர்.
சூத்திர சாதிகளின் வன்முறையையும், காவல் துறையினரின் அரச வன்கொடுமைகளையும் மட்டுமே முக்கியப்படுத்திப் போராடிய தலித் இயக்கங்கள் ஒரு கட்டத்தில் தேர்தல் அரசியல் நிலைப்பாட்டுக்குள் கட்சிகளாகக் களம் இறங்கியதும் தடா – பொடா எதிர்ப்பு, மதமாற்றத் தடைச்சட்ட ரத்து, மக்கள் நலனை மய்யப்படுத்திய அரசுத் திட்டங்கள், நிலம்-குடியிருப்பு, ஈழம், நதிநீர் பிரச்சனை, சேதுசமுத்திரம், தமிழ்ப்பெயர் ஏற்பு, இந்துத்துவ எதிர்ப்பு, சிறுபாண்மையினர் உரிமைப் பாதுகாப்பு, ஸ்டெர்லைட், முல்லைப்பெரியாறு, காவிரி, கூடங்குளம், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என பரந்து விரிந்த செயல்பாடுகளை கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்ப்போம். இன்னும் சொல்லப்போனால் தமிழக ஊடகங்களுக்கே அவற்றின் அன்றைய ஒலி பரப்புகள் தலித் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலை வைத்து செயல்பட்டதும் தெரிந்ததே. தலித் பாந்தர் திருமாவளவன் எழுச்சித் தமிழராகக் கடல் கடந்து திரும்பும்போதும் நடாத்திய விமான நிலையக் காத்திருப்பு நேர்காணல்களை ‘தூ’ என கொச்சைப்படுத்தி விடவும் முடியாது. ஒரு நாளைக்கு அதிக பட்சமாக சுமார் 400 கி.மீ வரை பயணித்து, தமிழகத்தின் 98% கிராமங்களின் சேரிகளைச் சென்றடைந்த ‘தாலிஸ்மேன்‘ திருமாவளவன் தலித் பிரச்சனைகளில் இருந்து விலகி வெட்டித்தனமாக பொதுப் பிரச்சனைகளில் ஈடுபடுகிறார் என சக தலித்துகளே கூட விமசித்ததும் உண்டு. ஊடகங்களைக் கடந்து ஆதாரங்களின் அடிப்படையில் உலகளாவிய கல்வித் தள ஆய்வுகளில் தலித் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்களே தமிழக அரசியலின் அன்றாட நடவடிக்கைகளாக அடையாளம் காணப்பட்டதென்பது மறந்து விட முடியாத ஈர நினைவுகள்.
வாதப்பிரதிவாதத்துக்காக இப்படி பகுப்பாய்ந்து பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துப் பிரச்சனைகளையும் கையிலெடுத்து, ‘எளிய மக்களுக்கும் அதிகாரம்’ என்பதை முன் நிறுத்தி மிக அதிகப் போராட்டங்களை, அரசியல் செயல்பாடுகளை பகுத்து வடித்தவர்கள் யார் என திறந்த மனதுடன், மனசாட்சிக்கு நேராகக் கணக்கெடுப்பு நடத்தினோமானால் தமிழ்த் தேசியம் பேசும் பழம்பெரும் சூத்திர – திராவிட‌த் தலைவர்கள் உட்பட பலர் தமிழக அரசியலில் இருந்து நிரந்தரமாக விலக நேரிடும்.
விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஏனைய சூத்திர கட்சிகளோடு பயணிக்க வேண்டிய நிர்கதிக்கு ஆளானதால் சமூக நீதிக்காக எழுந்த தலித் கட்சிகளையும் சாதிக் கட்சிகள் என்று முத்திரைக் குத்தி இதே சூத்திரக் கட்சிகள் தான் விமர்சித்தன. தலித் கட்சிகள் இவ்வாறு திராவிடச் சார்பு மனோபவத்தில் செயல்பட்டதைக் கண்டு தலித்துகள் உட்பட அனைவருமே ஒருவகை நவீன தீண்டாமை மனோபவத்துக்கு ஆட்பட்டு இன்றளவும் கூட அக்கட்சிகளையும் தலைவர்களையும் குண்டாங்குறையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த சதி வேலையில் ஈடுபட்ட ஊடகங்களை தலித் தலைவர்களும் அம்பலப்படுத்தினார்கள். ஆக, பெரும்பாண்மை சாதி அரசியல் பார்க்கும் சூத்திரக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது தலித் கட்சிகள் வேறு வடிவங்களிலான பிரச்சனைகளுக்குள் சிக்கி நிற்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான். கோட்பாடு வேறு – நிலைப்பாடு வேறு என்கிற அரசியல் பகுப்பாய்வு முறையை தலித் கட்சிகள் தனித்த அடையாளத்தில் வெளிப்படுத்தி இருந்தாலும் பெரும்பாண்மை சாதியை உள்ளடக்கிய திராவிடச் சதியிலிருந்து மீளமுடியாமல் திணறுவதும் கண்கூடு.
இப்படியொரு முட்டுச் சந்து அனுபவம் பெற்றதற்காக கடந்த காலங்களில் அல்லது சமகாலத்தில் தலித் கட்சிகள் முன்னெடுத்த போராட்டங்கள் இல்லையென்றாகி விடாது. இதில் சூத்திரர்களிடம் மட்டுமே அல்லாடி எதிர் கொண்ட வன்கொடுமைகள், வழக்குகள், இழப்புகள், நவீனத் தீண்டாமைக் காயங்களை மறைத்து விட்டு அல்லது கண்டும் காணாமலும் விடப்பட்டு திராவிட போதையில் வைகோ -வை முன்னிறுத்தும் துணிச்சல் பெரும்பாண்மை சூத்திர சாதி அரசியல் என்பதைத் தவிர வேறென்ன?
– – –  – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
வைகோ முதல்வராக வரட்டும் அல்லது வராமல் இருந்து அரசியல் கிங்மேக்கராகட்டும். அதுவல்ல பிரச்சனை. ஆனால் திராவிட மாயை அரசியலுக்கு சூத்திர மடாதிபதிகளைத் தேர்வு செய்யும் வக்கிர வேலையில் ஈடுபடுகிறவர்கள் எதிர்கால தலித் நலனில் அக்கறை கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?  அப்படி தலித் அக்கறையற்றவர்களின் இந்த நிலை தொடர வேண்டுமா என்பதே! ஏனெனில் இத்தகைய விஷம் கக்கும் ஆள் துருத்தி முறை பார்ப்பனர் அல்லாதோர் அரசியலுக்கு புது விஷயமல்ல. கடந்து வந்த அரசியல் நேர்க்கோட்டைக் கவனித்தால் பல தலித் தலைவர்கள் ஆள் துருத்தி முறையால் புறக்கணிக்கப்பட்டது புலப்படும்.
தொகுதிப் பங்கீடுகளில் பெரும்பாண்மை சாதி விகிதாச்சார முறையை முழுமையாகப் பின்பற்றாமல் தனக்கு அபிமானிகளாகப்பட்ட சாதக – பாதகமற்ற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முறையைக் கையாண்ட எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு முன்பே  இது போன்ற ஆள் துருத்தி முறை எல்லாக் கட்சிகளிலும் இருந்தன. 1985 -க்குப் பின் தனித்த தலித் அரசியலுக்குள் வந்த எல். இளையபெருமாளுக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகத்தையோ, வை.பாலசுந்தரம், ஆ. சக்திதாசன், சத்தியவாணிமுத்து போன்றோருக்கு திமுக கொடுத்த தீண்டாமை நெருக்கடிகளோ மறந்து விடக்கூடியவைகள் அல்ல. மகாராஷ்டிராவைப் போல இந்தியக் குடியரசுக் கட்சி இங்கு பரிதாபமாக நடத்தப்பட்டது. அதாகப்பட்ட கட்சிகளை வளர்த்தவர்கள் என்பதை விட அதிலிருந்து புறந்தள்ளப்பட்டதனாலேயே புதிய சூத்திர தலைமைகள் முளைக்க முடிந்தது. இனி இவர்களின் சூத்திர தலைமையை ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என ஆவேசத்துடன் வெளியேறி 1988 -ல் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் கன்ஷிராம் தலைமையில் ‘ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கமாக’ (SCALM) தலித் அரசியலில் அடையாளமானார்கள். அப்போதும் இதே போன்ற வைகோ வாதாடிகளான பணியில் நாஞ்சில் மனோகரன், குத்தூசி குருசாமி, நெடுஞ்செழியன், சாதிக் பாட்ஷா உட்பட 1989 – தேர்தலில் திராவிட – சூத்திர தலைமையை முன்னிறுத்தி செய்த பிரித்தாளும் வேலையில் ‘ஸ்காம்’ அமைப்பு சிதறடிக்கப்பட்டது போலவே இன்றைய தலித் அமைப்புகளை கூர் உடைக்கச் செய்யும் முயற்சியாக வைகோ எனும் துருப்புச் சீட்டு அவரது வாதாடிகள் கையில் கிடைத்திருக்கிறது.
அதி உன்னத தேர்தல் அறிக்கையை தயாரித்து, எந்தவித முகாந்தரமும் இல்லாத பட்சத்தில் 2011 -ஐ விடுதலைச் சிறுத்தைகள் ஆண்டு என அக்கட்சி அறிவித்து. தமிழகம் கடந்து கர்நாடகா, மும்பை என உறுப்பினர் சேர்க்கையை அதிதீவிரப்படுத்தி பெரும்பாண்மை சாதி வாக்கு வங்கிகளுக்கு நிகராக நம்பிக்கை பெற்று வரும் இச்சூழலில், சமூக நீதிக்கான அரசியல் உரிமை மீட்பில் அணியமாகும் 2015 -க்குப் பிறகான தலித் அரசியல் எழுச்சியை மடைமாற்றும் வேலையை வைகோ வாதாடிகள் இப்போதே சூத்திர ஒருங்கிணைப்பின் மூலம் நிகழ்த்தத் தொடங்கியுள்ளனர் என்று ஏன் விமர்சிக்கக் கூடாது? சந்தர்ப்பவாத நலன் கருதியாவது திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற  தலித் தலைவர்களுக்குக் கொடுக்கப்படும் கட்சித்தன முக்கியத்துவத்தை இனி சூத்திர அறிவுஜீவிகள் மனதளவில் கூட ஏற்கவோ, பேசவோ மாட்டார்கள் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.
ஒன்றை நினைவுபடுத்திப் பார்த்தால் இக்கருதுகோள் உண்மையெனத் தோன்றும். 90 -களுக்குப் பின் எழுந்த புதிய தலித் தலைமைகள் தலித் அல்லாதோரை இனி தலைமையாக ஏற்க மாட்டோம் என தலித் அரசியல் அறிக்கையாக உறுதி மொழிந்த சாரம்சம் கண்டு சாதிய உளவியலில் தவித்த  பல சூத்திர அறிவுஜீவிகள் அப்போதே தங்களை  தலித் அரசியலில் இருந்து முற்றிலும் விடுவித்துக் கொண்டனர். திருமாவளவன், கிருஷ்ணசாமி அணியில் இனி நமக்கு தலைமைப் பொறுப்பு இல்லை என்பதை அறிந்து வெளியேறிய சூத்திரக் கூட்டத்தின் அற்ப – சொற்ப நீட்சி தான் தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே இன்று திராவிட மாயை கொண்ட சூத்திர தலைமைக்கு உருமா கட்டுகிறது. ஆனால் தலித் கட்சிகள் நேர் மாறாக இன்றைக்கு தங்கள் அமைப்பில் முக்கிய தலைமைப் பொறுப்புகளை இப்போது சூத்திரர்களுக்கும் வழங்கிய சமூக நீதியைக்கூடவா மறைத்துவிட‌ முடியும் !
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
வைகோ இன்று யாராக வேண்டுமானாலும் எழுந்து வரட்டும். ஆனால் யார் இந்த வைகோ?
இதே ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடங்கிய காலக்கட்டத்தில் நிர்வாகத்திடமிருந்து 27 லட்சம் பெற்றவர் எனும் சர்ச்சைக்குள்ளானவர் தானே இந்த வைகோ !
பண பலவீனம் கொண்டவராக பெட்டி வாங்கிய தேர்தலில் விசுவாசமாக நடந்து கொள்ளாததால் ஈழம் விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் சிக்கி 500 நாள் சிறைவாசம் சென்று, பா.ஜ.க ஆட்சியின் போது தனது சுய சாதி அபிமானி வெங்கையா (நாயுடு) தூதுரையால் விடுவிக்கப்பட்டவர் தானே இந்த வைகோ !
கருணாநிதி என்கிற ஒற்றை வில்லன் அரசியல் அஜென்டாவைத் தவிர, கருணாநிதியை எதிர்க்கிறவர்களை அரவணைத்து அரசியல் பண்ணுகிற தார்ப்பரியத்தை தவிர, மாற்றுக் கொள்கை எதுவுமற்ற, படிநிலையமைப்பை ஏற்றுப் போகிற ஷேக்ஸ்பியர் பேச்சாளர் தானே இந்த வைகோ !
அம்பேத்கரையோ, பெரியாரையோ, காரல் மார்க்சையோ  துணிச்சலாகப்பேச முடியாத‌ வடுக அநாகரிகத்தை மறந்து, தமிழ்த் தேசியம் பேசிக்கொண்டே கரூரில் சூத்திர- திராவிட இய‌க்க நூற்றாண்டு கண்டவர் தானே இந்த வைகோ !
சாதிய அமைப்புகளுக்கு உள்ளே பாதுகாப்பாக நின்று கொண்டு போராட்டங்களை முன்னெடுக்கும் பார்ப்பனர் அல்லாதோரின் லாவக அரசியலைப் பார்த்துப் பழகி, அதிலிருந்து மாறுபட்டு சாதியக் கட்டமைப்பை உடைக்கும் போராட்டத்திற்கான புது வடிவங்களை முன்னிறுத்த அடம் பிடிப்பவர் தானே இந்த வைகோ !
பார்ப்பனர்களை எதிர்த்து, தலித் பேச்சுகளைக் காட்டி அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு போன்றவற்றில் பெரும்பாண்மைப் பங்குகளை பெறுவதைத் தவிர அல்லது பெற்ற பின்னர் பா.ம.க. இராமதாசைப்போல பாதி தூரத்தில் திரும்பி ஓடி சுயசாதிகளுக்கு விசுவாசமாக இயங்குவதை விட வேறென்ன மாற்றுப் பொருளாதாரக் கொள்கை லட்சியங்கள் வைகோ -வுக்கு இருக்க முடியும்.
தமிழ்நாட்டில் இதுவரையிலும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – 1989 -ன் படி முக்குலத்தோர், வன்னியர், கவுண்டரைவிட, நாயுடு – நாயக்கர் வகையறா தான் அதிக அளவிலான வன்கொடுமைகளை தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தியிருக்கிறது எனும் ஆதாரங்களுக்கு வைகோ என்ன மறுமொழி கூறப்போகிறார்? அல்லது இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனப்போராடும் முக்குலத்தோர், யாதவர், வன்னியர், முத்தரையர், கவுண்டர், வரிசையில் அன்னாரின் அரசியல் கொள்கை நிலைப்பாடு என்னவாக இருக்கும்?     
மதிப்பிற்குரிய வைகோ வாதாடிகளே ! முதலாளித்துவ, சாதிய, ஆணாதிக்க பிம்பங்களைக் கழற்றிய வைகோ -வை சேரியில் தூக்கி நிறுத்துங்கள் பார்ப்போம்.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
ஆனால், ஒரு கனவு கண்டது உண்மை. அந்தக் கனவின் கதை அவரது வாதாடிகளுக்கும் நன்கு தெரியும். வயது தளர்ந்த கருணாநிதி என்றைக்காவது ஒரு நாள் அல்லது ஒருவேளை அல்லது எப்போது வேண்டுமானாலும் மெரீனா கடற்கரை நோக்கி இறுதிப் பயணம் மேற்கொள்ளக் கூடும். மூன்றெழுத்து மந்திரம் கொண்ட திமுக நிச்சயம்  மூன்றாக சிதறக் கூடும். சிதறினால் ஒன்று ஸ்டாலின் பக்கம், மற்றொன்று அழகிரி நோக்கி. இதில் விடுபடும் அவிசுவாசிகளும், சுயசாதி அபிமானிகளும் வைகோ -விடம் தஞ்சமடையக் கூடும் அல்லது தார்மீகப் பொறுப்பேற்று வைகோ அவர்களை அரவணைப்பார். அதற்கான சமிக்ஞைகள் தற்போது குடும்ப சச்சரவுகளையும் கடந்து பி.ஆர்.பி. விவகாரத்தில் வெளிப்பட்டு விட்டதும் நல்ல சகுனமாகி விட்டது. துரை தயாநிதியின் எதிர்காலம் பிரகாசமாக வேண்டுமெனில் அழகிரி திமுக -வை உடைக்க வேண்டும் என்கிற கமாண்ட்டும் ஆக்க்ஷனில் இருக்கிறது. எது நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடந்தாலும் அது வைகோ -வுக்கு சாதகமாக அமையலாம் என்கிற  சூத்திர விதி அறுவடையில் ஜெயலலிதாவும் இடம் பெறலாம்.. இதற்கு விஜயகாந்தும், வெங்கைய்யாவும் (நாயுடு) எதிர்காலத்தில் பக்க பலமாகலாம்.
வழக்கம்போல் சூத்திர த‌மிழ்த் தேசியத்திலும், திராவிட மாயையிலும் உழன்று, இந்த சோகக் கதையால் முட்டுச் சந்தில் நிற்கப்போவது தலித் கட்சிகள் மட்டுமே. ஏனெனில் தலித் அரசியலின் அடுத்தக் கட்ட நகர்வை ஒவ்வொரு முறையும் நவீன பார்ப்பனிய பலம் கொண்ட சூத்திர எதிரணியினர் தான் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறார்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற  தலித் தலைவர்களும் தலித் அரசியல் உலகளாவியது என்பதை மறந்து விட்டு, பஸ்வான், மாயாவதி போன்ற தேசிய தலித் அரசியல் இயக்கங்களின் நேச உறவையும் கை விட்டு விட்டு, செக்கு மாடாக மாநிலக் கட்சியாக மட்டுமே இயங்கும் பரிதாபகரம்  தலித் அரசியல் கட்சிக்கு இருக்கும் வரை இது போன்ற முட்டுச் சந்து நிலை எதிர்பாராத திசை நோக்கியும் செல்லக் கூடும் என்பது நடைமுறையானதே.
இருப்பினும், இதன் பின்னர் நிகழும் தலித் அரசியலின் தக்க பதிலடி கொண்ட நேர் – எதிர் கூட்டணி வினைகளுக்கு, எழுச்சி பெறும் பெரும்பாண்மை சூத்திர அரசியல் பொறுப்புடன் பதில் சொல்லியாக வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

விமர்சனங்களை ஒருபோதும் விரும்பாத : “இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்”

அமெரிக்க சீயோனியக் கிறித்துவம் “இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்” (http://www.youtube.com/watch?v=2E55rwmKSyg) என்கிற படத்தைத் திரையிட்டு இசுலாம் எதிர்ப்பு மனோபவத்துடன் தனது பாசிசசத்தை, ஊடக ஏகாதிபத்தியமாக்கி வருவது அனைவரும் கண்டிக்கத்தக்கது. அமெரிக்க யூத சீயோனிய கிறித்துவ ஏகாதிபத்தியத்துக்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் தான். அதே சமயத்தில் இஸ்லாமின் உலகளாவிய பெரும்பான்மைவாத பிற்போக்குக்கும் கூட நாம் எதிரானவர்களே என்பதை தொடக்கத்திலேயே தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏதோ ஒரு வகையில் இந்திய இஸ்லாம் இங்குள்ள தலித்துகளையும் உள்ளடக்கியுள்ளதால், சிறுபாண்மையினராக அடையாளம் காணப்படுவதால் திறந்த மனம் கொண்ட இத்தகைய விமர்சனம் எழுத வேண்டி ஏற்பட்டுவிட்டது.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
எகிப்திய அடையாளத்தில் அமெரிக்காவில் குடியேறிய ‘நகொலா பாஸ்லே’ என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளனர். நகொலா அடிப்படையில் ஒரு இஸ்ரேலிய யூத வெறியன். கி.பி.451 -ல் கால்சிடோனியன் விவாதங்களில் முளைத்தெழுந்த காப்டிக் பிரிவின் ஆர்த்தடாக்ஸ் கிறித்துவன். யூத சீயோனிய வெறியின் தூய்மைவாதம் கொண்ட கிரிமினல் குற்றவாளி. இஸ்லாம் வெறுப்பு மனோபவத்துடன் திட்டமிட்டு, நிதி திரட்டி தயாரிக்கப்பட்ட இப்படம் 2011 -ல் ‘பாலைவன போர்ச்சேவகன்’ (Desert Warrior) என பெயரிடப்பட்டு பிறகு ‘பின் லேடனின் இயலாமை’ (Innocense of Bn Laden) என பெயர் மாற்றம் பெற்று 2012 ஜூலை 2 -ல் 14 நிமிடம் ஓடக்கூடிய இதன் முன்னோட்டம் ‘ The Real Life of Muhammad and Muhammad Movie Trailer’ என வெளியானது. பின்னர் அரபு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 11 -ல் அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், ‘எகிப்திய அமெரிக்கன்’ இணைய தளத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. வெளியான படம் முன்னோட்டம் என்பதால் இன்னும் அதன் முழு சாரமும் அன்று விவாதிக்க வாய்ப்பில்லாமல் போனது. இருப்பினும் அந்த 14 நிமிட படத்தைக் குறித்து ஸ்கை நியூஸ், என்.பி.சி, பி.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் முன்னோட்டப் படத்தைக் குறித்தும், அதன் காட்சி சித்தரிப்புகளைக் குறித்தும் உடனடியாக கருத்து தெரிவித்ததால் பரபரப்பு மிகவும் கூடியது.
குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான, அவர்களை கோபப்படுத்துகிற வகையில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது முடிவாகிறது. அதாவது முகம்மது ஒரு முட்டாள், பெண் பித்தர், போலி மதவாதி, ஓரினச்சேர்க்கையாளர், குழந்தை வக்கிரர், அவரின் அடியார்கள் கொலை வெறிப்பிடித்த காட்டுமிராண்டிகள், பெண்களையும் குழந்தைகளையும் கொல்பவர்கள் . .  . என நீண்டு கொண்டே செல்கின்றன. இதன் முதல் காட்சியானது எகிப்திய இஸ்லாமியர்கள் எவ்வாறு எகிப்திய கிறித்துவர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்தினார்கள் என்பதிலிருந்து தொடங்குகின்றது. அடுத்ததாக முகம்மதுவின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. ஒரு காட்சியில் முகம்மதுவின் துணைவியார் கதீஜா, தோரா (அய்ந்தாகம நூல்) மற்றும் புதிய ஏற்பாடு நூலின் (தவ‌றான) கலப்பு வசனங்களைக் கொண்டு குரான் எழுத வேண்டும் என ஆணையிட்டதாக அமைகிறது. இன்னொரு காட்சியில் இஸ்லாமின் முதல் விலங்கான கழுதையும் முகம்மதுவின் ஆளுமையை சித்தரித்து இழிவு படுத்தியுள்ளது. ஒரு திரைப்படம் என்பதற்கான அழகியல் கலையம்சம் எதுவும் இல்லாமல் கோர‌மான, வக்கிரமான, விகாரமான காட்சிப்படிமங்களைக் கொண்டு காமிராக்கள் நகர்வதாக ‘நியூயார்க் டெய்லி நியூஸ்’ பதிவு செய்துள்ளது.
புகழ்பெற்ற இஸ்லாமிய திரைப்படத் தயாரிப்பாளர் கம்ரான் பாஷா ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ‘முகம்மது யாருக்காக பாடுபட்டாரோ அவர்களே இப்படியொரு படம் எடுத்திருப்பது வியப்பிற்குறியது. முகம்மதுவை கலவரக்காரராக, வன்முறையாளராக சித்தரிக்க வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக புலப்படுகின்றது என ‘ஹஃப்ஃபிங்டன் போஸ்ட்’டில் (Huffington Post.) கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் ஒரு யூத கூட்டுச்சதி நடந்துள்ளதாக உலகம் முழுதும் கருத்து தென்படுகிறது. நகொலா மற்றும் சாம் பாசில் இருவருக்குமான அடையாள மோதல் இன்னும் முற்று பெறாமல் இருப்பினும்  இஸ்லாம் மதத்தை, முகம்மது நபியை கொச்சைப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது நன்கு புலனாகிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் இது ஒருவகையான கருத்துச் சுதந்திரம் எனவே தடை விதிப்பதில் சிக்கல் உள்ளது என்பதாக தெரிவித்த விளக்கத்தை  இஸ்லாமியர்கள் ஏற்பதாக இல்லை.
வெளியிடப்பட்ட முன்னோட்டத்தில் முகமது நபியை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் உலகம் முழுவதும் போராட்டத்தை தொடங்கின. உலகில் எங்கெல்லாம் இஸ்லாமியர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் போராட்டங்கள்  நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக எகிப்திய அதிபர் முகம்மது மோர்சி உடனடியாக படத்தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடர அமெரிக்காவை வலியுறுத்தினார். ஆப்பிரிக்கா, மத்திய தரைக்கடல் நாடுகள், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகங்கள் சூறையாடப்பட்டன. லிபியாவில் அமெரிக்க தூதர் ஜே. கிறிஸ்டோபர் ஸ்டீவன் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர். இதற்கிடையே அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளில் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்று ‘அல் கொய்தா’  எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தாக்க அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது. சூடானில் கார்த்தோம் பகுதியில் அமெரிகக் தூதரகம் தகர்க்கப்பட்டுள்ளது. நாமும் போராடாமல் இருந்தால் சிறுபாண்மையினரின் ஆதரவாளர் என சொல்லாமல் விட்டுவிடுவார்களோ என்கிற குற்ற உணர்விலிருந்து விடுபடாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி கை நழுவும் என்பதாலோ, இந்தியாவிலும், தமிழகத்திலும் தலித் இயக்கங்கள், தலித் கிறித்துவர்கள் உட்பட, கடவுள் மறுப்புக் கோட்பாட்டாளர்களும் இணைந்து போராட்ட எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இத்தகைய எதிர்வினையில் “விமர்சனம் – பழித்துரை” என்கிற ரீதியில் ஊடகங்களில் விளக்கங்கள், புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதாவது இஸ்லாம் பலவிமர்சனங்களை உள்வாங்கி வளர்ந்து வரும் ஒரு மார்க்கம். ஆனால் இஸ்லாத்தின் மீதான பழித்துரையை தான் நாங்கள் கண்டிக்கின்றோம் என்பதாக ஒரு பூடகம் சொல்லப்படுகிறது. அதனை கட்டுடைத்து, இஸ்லாம் ஒருபோதும் எவ்வித விமர்சனங்களையும், எந்த காலத்திலும்  ஏற்காத ஒரு மதம் என்கிற விமர்சனத்தை மத நல்லிணக்க அக்கறையோடு இக்கட்டுரை முன்வைக்கிறது.  செப்டம்பர் 11 சம்பவத்தையொட்டி சாமுவேல் ஹட்டிங்டன் வெளியிட்ட “War of Civilization – The Clash of Civilisations and the Remaking of World Order (1996)” என்கிற நூல் பட்டும் படாமலும் இத்தகைய மத அடிப்படைவாதத்தை அப்போது விவாதத்திற்குட்படுத்தியது நினைவிருக்கலாம். அப்போதே உலகம் தழுவிய ஒரு மாபெரும் விவாதம் இதனையொட்டி உருவாகி இருக்க வேண்டும். கிறித்துவ – இஸ்லாமிய அறிவுசார் சமய உரையாடலாக அது நீட்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி ஒன்று நிகழாமல் போனதன் தொடர்ச்சி தான் “தி இன்னோசன்ட்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்”.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
இந்து மதம் என்றால் எத்தகையது? என்பதற்கு இந்தியாவில் இந்து கோயில்களின் கோபுரங்களில் உள்ள சிற்பங்களும், ஓவியங்களும், சிலைகளும் போதுமான சான்றுகளாக மிக வெளிப்படையாக உள்ள போதிலும்,  அதனை காட்சி ஊடகத்திலோ, அச்சு ஊடகத்திலோ “இந்துவாக அல்லாத ஒருவர்” மீண்டும் விமர்சித்து கருத்து தெரிவித்தால் அது விமர்சிப்பவரின் மத அடையாள அரசியலைப் பொறுத்து தீவிரம் பெறும். இந்த விமர்சனம் இந்து மதத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் பொருந்தும். காரணம் இந்தியாவைப் பொருத்தவரை பல மதங்கள் இருந்த போதிலும் ஒவ்வொரு மதத்திலும் கடவுளர்கள் தான் வித்தியாசப்படுகிறார்களேயொழிய அந்தந்த மதங்களின் அடிப்படைவாத அரசியல் மாறுபடவில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் உள்ள எல்லா மதங்களும் இந்து மதத்தின் பழமைவாதத்தைச் சார்ந்தும், அதன் ஆபத்தான இயங்கியலைக் கண்டும் தான் வளர்ந்து வருகின்றன. இந்த விமர்சனம் கிறித்துவத்துக்கும் பொருந்தும். சில மதங்கள் பெயரளவில் வேறானவையாக இருந்தாலும் அவை இந்து மதத்தின் அசல் பிரதியாக செயல்படுவதையும் ந‌ம்மால் உணர முடியும். இந்திய இஸ்லாமுக்கும் இது பொருந்தும். மாறாக இந்திய இஸ்லாம் இங்குள்ள இந்துமதப் பழமையையும் உள்வாங்கி விட்டுக்கொடுக்காமல் மத அடிப்படைவாதத்தையும் தக்க வைத்துக் கொண்டு, சர்வதேசிய அடிப்படைவாதத்திலும் அடையாளம் காண்கின்றது. பர்தா உட்பட இந்தியாவில் இஸ்லாமுக்குள் நிகழ்ந்த பல சம்பவங்களை சொல்ல முடியும். இஸ்லாம் அடிப்படைவாதம் வளர்ந்தோங்கிய ஈரான், பாங்களாதேஷ் போன்ற நாடுகளில் கூட இஸ்லாம் பெண் தலைவர்கள் வர முடிகின்றது. இந்து உளவியலால் பாதிக்கப்பட்ட இந்தியாவில் உள்ல மதங்களில் இது சாத்தியமாகாமல் இருக்கின்றன. எனவே தான் இத்திரைபட விமர்சனத்தை இந்திய இஸ்லாம் தனித்த பார்வையில் தன் எதிர்ப்பை பதிவு செய்யாமல் மேலே குறிப்பிட்ட இரட்டை அடையாள மனோபவத்துடன் போராட்டத்தில் செயல்பட்டுள்ளது. எந்த மதத்திலும் பற்றில்லாத அரை வேக்காட்டு அஞ்ஞானிகளும் இதனை நியாயப்படுத்தியுள்ளார்கள். செக்குலரிஸ்ட் என சொல்லிக்கொள்ளும் இது போன்றவர்களின்  கண்மூடி நியாயங்கள் கூட அம்மதத்தை சீர்திருத்துவதற்கு வழி செய்யாமல் முட்டுக்கட்டையாகிறது.
மதம் சார்ந்த படங்களை இயக்குபவர் எவராக இருந்தாலும் அவர் ஒரு மதச்சார்பற்றவராக (Seccularist) இருந்து அப்படத்தை தயாரித்தால் தான் அது ஆக்கப்பூர்வாமாக அமையும். அப்போது தான் விமர்சனம் என்பது ஒருவகையான தீர்க்க தரிசனமாக (Criticism with Prophetic) காட்சிப்படும். திறந்த மனதுடன் விம‌ர்சிப்பதற்கும் ஆரோக்கியமாக இருக்கும். ஈரானில் வெளியான பல படங்கள் அவ்வாறு இருந்துள்ளன என்பது மறுப்பதற்கில்லை. ந‌கொலா கூட்டம் அப்படி செய்யவில்லை.  மூன்றாம் தரமான, மஞ்சள் வாடை கொண்ட இப்படம் நிச்சயம் இஸ்லாத்தையும், முகம்மதுவையும் கொச்சைப்படுத்தி, யூத‌சர்வதேசிய ஏகாதிபத்திய‌த்தை அமெரிக்காவில் நிரந்தரப்படுத்திக் கொள்வதற்கான முயற்சி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அருண்சோரி அம்பேத்கரைப் பற்றி எழுதினால் என்னவாக இருக்கும் என்பது போல.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
இருப்பினும், அன்புறவு கொண்ட இஸ்லாமியச் சொந்தங்களே ! எத்தனை நாளைக்கு அமெரிக்காவின் யூத ஏகாதிபத்திய எதிர்ப்பை முன் வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நியாயப்படுத்தப் போகிறோம் என்பதே நம் முன் வைக்கப்பட்டுள்ள நேர்மறைக் கேள்வி. இந்தியாவில் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் பெருமளவில் இருக்கின்ற வளைகுடா நாடுகளிலோ, ஈரானிலோ அப்படியொரு படம் எடுத்திருந்தாலும் இதே நிலையில் போராட்டம் தொடரும். ஒரு வேளை முற்போக்கு சிந்தனையுள்ள இஸ்லாமியரே இப்படத்தை இயக்கியிருந்தாலும் கூட இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக அவரின் தலையை இறைவன் பெயரால் கொய்து வர ஆள் அனுப்பியிருப்போம் என்பது அனைவரும் அறிந்ததே. தவிர்க்கப்பட முடியாமல் எப்போதும் நமக்கு அமெரிக்கா ஒரு காரண கர்த்தாவாகக் கிடைத்து விடுகிறது. அதனால் இந்திய இஸ்லாமியர்களின் எதிர்ப்பு நியாயம் என்பது ஏற்கக்கூடியதல்ல. சுருக்கமாகச் சொன்னால் இதனுள் ஓடும் விமர்சனம் என்பது வரலாற்றில் இஸ்லாமியர்கள் எத்தகைய விமர்சனங்களையும் ஏற்றது இல்லை, ஏற்கப்போவதும் இல்லை. அப்படி ஒன்று எந்த சூழலிலும் நிகழாது என்பதன் ஒத்திகை தான் இந்த போராட்டங்கள் என்பதை சமகாலத்தில் திரும்பவும் சொல்வதாக அமைகின்றது.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியிலும் இஸ்லாம் அடிப்படைவாதம் செய்து வரும் பல நிகழ்வுகளின் சான்றுகளை சொல்ல முடியும். ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் புனித இலக்கியங்களின் பிரச்சனையை இங்குள்ள வாழ்வுச் சூழலில் பொருத்திப்பார்த்து விளக்குவதோ, உரை நிகழ்த்துவதோ இல்லை. நீங்கள் கேள்வி கேளுங்கள் நாங்கள் பதில் சொல்லுகிறோம். அதாவது இஸ்லாமில் நான் காணும் சந்தேகங்களை தங்களிடம் தான் கேட்டு தெரிந்து தெளிவு பெற‌ வேண்டும் என்பதே ஒரு வகை பிற்போக்குவாதம் தான். மாறாக, இஸ்லாம் தழுவுகிற ஒருவர் இஸ்லாம்-குரான்- என்பதையே த‌ன்னுடைய கண்ணோட்டத்தில், புதிய பார்வையில் கூட பார்க்கலாமே. அதற்கு இடமுண்டா?  ஏனெனில் இஸ்லாம் பரவ வேண்டும் எனில் அது இங்குள்ள மக்களின் பண்பாட்டைச் சார்ந்து தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டால் உழைக்கும் வர்க்க பாட்டாளி ஒருவனின் “கடவுள் – மதம் – புனித இலக்கியம்” என்பனவற்றின் மீதான பார்வை முற்றிலும் மாறுபடும். எந்த மதத்திலும் இப்பார்வை தவிர்க்க முடியாதது. காரணம் இங்கு ஒடுக்கப்பட்ட, உழைக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கு பல நூறு வட்டார நாட்டார் தெய்வங்கள் பற்றிய அனுபவங்கள் உண்டு. அத்தகைய பார்வையை அல்லது ஒரு தலித் இஸ்லாமியரின் ஒரு தலித் நபிகள் நாயகம் காட்சியை இஸ்லாம் அனுமதிக்குமா? இதே விமர்சனப் பார்வை இஸ்லாம் பெண்ணியத்துக்கும் பொருந்தும். உலகில் எல்லா கடவுளும் விமர்சனத்துக்கு உரியவர்கள். காரணம் மக்களுக்காகத்தான் கடவுளும், மதங்களும். கடவுளுக்காக மனிதர்கள் அல்ல. அப்படியானால் மக்களின் பார்வையில், பிரச்சனைகளில் கடவுளும், மதங்களும் எல்லாக் காலச்சூழலுக்கும் மாறுபட்ட விமர்சனத்துக்குறியவர்கள். இது ஒரு வகையில் ஆசியாவுக்கே உரிய ஆன்மிகப் புரிதல் என்று கூட சொல்லலாம். இத்தகைய புரிதலை இங்குள்ள இந்திய இஸ்லாம் அனுமதிக்குமா? நபிகள் நாயகத்தையோ, குரானையோ இங்குள்ள சூழலில் பொருத்திப் படிக்க அனுமதிக்குமா? ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்ட பின்னும் புனித இலக்கியங்களின் பழைமைவாதத்தைச் சுமக்க விரும்பும் இஸ்லாத்தில் இவற்றுக்கு துளியும் அனுமதி இல்லை. இஸ்லாமிற்கு இந்தியாவில் சிறுபாண்மையினர் என்கிற அனுதாப ஆதரவு உண்டு என்றபோதிலும் அதன் போராட்ட நடவடிக்கைகளில் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்ட, அச்சுறுத்தும் உலகளாவிய பெரும்பான்மைவாத இஸ்லாம் அடிப்படைவாதத்தின் வழிகாட்டுதலை தான் இன்றுவரை முன் நிறுத்தி, தலைமையேற்றுச் செயல்படுகிறது. இந்த விமர்சனம் ஏதோ ஒரு திரைப்படத்துக்கு என்று மட்டும் அல்ல.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
ஒரு உதாரணத்துக்குச் சொல்கிறேன். இஸ்லாம் மத அடிப்படைவாதமானது கிறித்துவத்தையும், பைபிளையும், இயேசுவையும் கொச்சைப்படுத்துவதில் அப்படி ஒன்றும் சளைத்த ஒரு மதமல்ல. உதாரணமாக தமிழில் “Is Bible God’s Word SAN VS TNTJ” யூ ட்யூபில் காணப்படும் கிறித்துவத்திற்கு எதிரான, பைபிளுக்கு எதிரான, இயேசுவுக்கு எதிரான இஸ்லாம் பிரசங்கங்கள் மிக மிக அதிகம். இயேசுவை நேரடியாக ஒரு பொம்பள மோப்பம் பிடித்தவர், மகதலேனா மரியாள், மார்த்தாள், சமாரியா ஸ்திரீ போன்றவளுகளுக்கு பின்னாடியே சுத்தன வுமனைசர், பைபில் ஒரு காம நூல் என்கிற தொனியில் தமிழக ‘தவ் ஈ ஜமாத்’ நண்பர்கள் ஏராளமான பிரசங்கங்களை பெரம்பூரில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக லேவியராகமம், ஏசாயா, உன்னதப்பாட்டு, லூக்கா, யோவான் போன்ற பல‌ பகுதிகளை விவிலியத்தில் இருந்து கையாண்டுள்ளனர். பாகிஸ்தான், ஹாங்காங், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் இதனைவிட ஏராளமான குறுந்தகடுகள் “கிறித்துவ – இஸ்லாம்” உரையாடல் என்கிற பெயரில் கிறித்துவத்தைக் கொச்சைப்படுத்தி வெளிவந்துள்ளன. இருப்பினும் இத்தகைய இஸ்லாம் மத அடிப்படைவாதத்தினால் கிறித்துவம் தீட்டாகி விட்டது என்றோ, விவிலியம் தரம் தாழந்திவிட்டது என்றோ, இயேசுவின் போராளித்தன்மை குன்றிவிட்டது என்றோ எந்த நாட்டிலும் எந்த கிறித்துவரும் போர்க்கொடி தூக்கியது இல்லை. விடுதலைக் கண்ணோட்டத்தில் கிறித்துவத்தையும், பைபிளையும், இயேசுவையும் எப்படி வேண்டுமானாலும் ஆழமாக விமர்சிக்கலாம் என்பதை கிறித்துவ, பெண்ணிய, விடுதலை மற்றும் தலித் இறையியலே கொண்டாடும்போது இஸ்லாம் மற்றும் இந்துத்வா மத அடிப்படைவாத விமர்சனங்கள் அதன் மீது எந்த காயத்தையும் எளிதாக ஏற்படுத்திவிட முடியாது. Davinci Code (Dan Brown), The Good Man Jesus and the Scoundrel Christ (Philip Pullman), Why I am Not a Christian (Bertrand Russel ), The gospel according to the son (Norman Mailer), Jesus Lived in India (Holger Kersten ), The gospel according to Christ (Jose Saramago), The Last Temptation of Christ (Nikos Kazantzakis), Come unto me (Osho), The second settlement (Paul Zachariah) போன்றவை கிறித்துவத்தையும், இயேசுவையும் விமர்சித்து சமகாலத்தில் வெளிவந்தவை தான். இந்த விமர்சனத்தை எந்த இஸ்லாமியரும் கருத்தியல் தளத்தில் இருந்து தத்துவார்த்தமாக முன்மொழியவில்லை. கிறித்துவத்தையும், பைபிளையும், இயேசுவையும் விடுதலைக் கண்ணோட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கின்ற அனைத்து விமர்சனத்தையும் கிறித்துவம் எல்லா நாடுகளிலும் வரவேற்கின்றன. அதனாலேயே கிறித்துவத்தில் குடிகொண்டுள்ள எல்லா யூத ஏகாதிபத்திய, பாசிச, சீயோனிய, சாதிய ஊடுருவலைக் களைந்து, ரோமானிய, யூத ஏகாதிபத்தியத்தின் விளைச்சலே கிறித்துவம் என்பதை மறுத்து, மாற்றி, சீர்திறுத்தி, மறுமலர்ச்சி செய்து, இந்தியா போன்ற நாடுகளில் கிறித்துவ திருச்சபைகளுக்கு ஒரு பெண் அல்லது ஒரு தலித் பேராயராக வர முடியும் என்பது கிறித்துவத்தின் மீதான பல விமர்சனங்களின் பாடங்களால் மாற்றம் பெற்றுள்ளது. இன்னும் கூட இஸ்லாமியர்களுக்கு எதிரான குஜராத் கலவரங்களில் இந்துத்வா சக்திகளுடன் யூத சீயோனியக் கிறித்துவமும் இணைந்து செயல்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளிருந்து பெருமளவு நிதியும் ஊடுருவியுள்ளது என்கிற முதல் தகவலை முற்போக்குக் கிறித்துவர்கள் தான் அன்றைக்கு விவாதப்படுத்தினர்.
ஆனால் “இஸ்லாம் – குரான் – நபிகள் நாயகம்” என்பதில் ஒரு அச்சுப்பிழையையோ, யதார்த்த மாற்றத்தையோ, விடுதலைக்கண்ணோட்டத்துக்காண இஸ்லாம் இறையியல் விளக்கங்களையோ அடிப்படையில் ஒரு இஸ்லாமியர் விமர்சிப்பதையே ஏற்காத மத அடிப்படைவாதம் இஸ்லாத்தில் தீவிரம் கொண்டுள்ளது. தஸ்லிமா நஸ்றீன் (Lajja), சல்மன் ருஸ்டி (The Satanic Verses), ரசூல் (இஸ்லாத்தில் குடி கலாச்சாரம்), அஸ்கர் அலி எஞ்சினீர் (Articles of Seccularism) போன்றோரை உதாரணமாக சொல்லலாம். மும்பை விமான நிலையத்தில் வயதான அஸ்கர் அலி எஞ்சினீரை ‘தவுதி போரா’ இஸ்லாமியர்கள் ஓட ஓட விரட்டி அடித்தார்கள். நாகர்கோவிலைச் சேர்ந்த மரியாதைக்குரிய இஸ்லாம் சிந்தனையாளர் ரசூலுக்கு எதிராகவும் இதே மனோபவம் தான் செயல்பட்டது. ஒரு படி மேலே போய் அவரை இஸ்லாத்திலிருந்தே தள்ளி வைத்தோம். இவை அனைத்துக்கும் மேற்சொன்ன கற்பிதங்கள் பொருந்தும்.
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
புர‌ட்சியாளர் அம்பேத்கர் மதம் பற்றிய தனது ஆய்வுகளில் இஸ்லாம் என்பதை சிறிதளவு மாற்றத்துக்குரியதாக பார்த்தாரே தவிர, விடுதலைக்குறியதாக அணுகவில்லை. குறிப்பாக அதன் ஆணாதிக்க, பகுத்தறிவுக்கு எதிரான, பெண்விடுதலையை ஏற்காத மதப்பிடிவாதத்தை அவர் விமர்சித்தார். அதனால் கிறித்துவம் சூப்பர் என்கிற முடிவுக்கும் அவர் வரவில்லை. சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பவுத்தத்தை தான் தேர்ந்தெடுத்தார். ஆனால் ஆப்கனில் பவுத்தமும் அதன் குறியீடுகளும் இஸ்லாம் அடிப்படைவாததால் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டன. பவுத்தர்கள் பெருமளவு வாழ்ந்து வருகின்ற இந்தியாவில் உள்ள பவுத்தர்களின் மனம் புண்படுமே என்பதற்காக எத்தனை இஸ்லாமியர்கள் ஆஃப்கான் இஸ்லாம் அடிப்படைவாத சேட்டையைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டார்கள்? இந்தியாவில் டிசம்பர் 6 என்பது அம்பேதகர் எனும் மாபெரும் போராளியின் வீரவணக்க நாள் என்பதை என்றைக்காவது பாபர் மசூதி இடிப்பு கறுப்பு நாளில் நினைவு கூர்ந்ததுண்டா? சிறுபாண்மையினர்-தலித் தோழமையின் வெளிப்பாடு என்பது எது? இன்றைக்கு இஸ்லாம் படத்திற்கான விமர்சனத்தை மட்டும் இஸ்லாம் சிதைக்கப்படுவதாக கூக்குரல் இடுகிறோம்! மற்றவரின் மத உணர்வுகளை, ஒடுக்கப்படும் அனுபவங்களை  இஸ்லாமோ, முஸ்லீம்களோ உணர்வுப்பூர்வ‌மாக அல்லாமல் அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்டிருந்தால் இப்போராட்டத்தை நியாயப்படுத்தலாம்.
# இந்தியாவில் மதம் – அரசியல் பற்றிய செயல்பாட்டுப் பார்வையில் மிகப்பெரிய கீறல் ஏற்படுத்தியவர்களில் அம்பேத்கர் – பெரியார் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த இரு அணியினரோடும் கடந்த நூறு ஆண்டுகளில் கருத்தியல் சார்ந்து இஸ்லாத்தின் தோழமை வளர்ச்சி என்ன? குறைந்த பட்சம் பொதுவுடைமைச் சிந்தனையையாவது உள்வாங்கியதுண்டா?
# சர்வ‌தேசியம் சார்ந்து இந்திய சமூகத்தில் சுய மரியாதையை ஒரு போதும் விட்டுக்கொடுக்காத இஸ்லாம், மதம் சார்ந்து ஒருவரை சுயமரியாதைக்குட்படுத்தும் பகுத்தறிவை இஸ்லாத்திற்குள் மதம் மாறும் ஒருவருக்கு அனுமதிக்குமா?
# பெண்ணிய விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஆணாதிக்கமே. இந்த ஆணாதிக்கத்தை ஷரியத் போன்ற சட்டங்களால் நியாயப்படுத்தும் பெண்விடுதலைக்கு எதிரான வாசகங்களின் மீது ஒரு புதிய அத்தியாயத்தை பெண்களுக்கு வழங்குமா? அதாவது பெண்களின் பிரச்சனைகளை ஒரு பெண்ணாக இருந்து புரிந்து கொள்வதற்கு, இறைவறே (னே) ஒரு பெண் என்பதை ஒப்புக்கொள்ளுமா?
# கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் எனும் ஜிகாத் போன்ற ஆணாதிக்க உயிர்ப்பலி மற்றும் வன்முறைக் கருத்தியல் ஆதரவு, இங்குள்ள ஜனநாயக நாடுகளுக்கு பொருந்துமா? உயிர் உற்பத்தியில் ஈடுபடும் பெண்கள் வன்முறையால் கட்டவிழ்த்து விடப்படும் உயிரிழப்பை ஏற்பார்களா?
இன்றைக்கும் இது போன்ற விமர்சனங்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாமல்  ‘இஸ்லாம் – முஸ்லிம்’ என்பது ஒருவகையான மதத்தூய்மைவாதமாக அதாவது உலகளாவிய பெரும்பாண்மைவாத “வெளியுறவுப் பார்ப்பணியமாக” உலாவருகிறது. இத்தகைய மத அடிப்படைவாத மனோபவம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளில் மத நல்லிணக்கப் பின்னடைவை, நட்பு முறிவை இஸ்லாத்திற்கு ஏற்படுத்தும். விமர்சனங்களே கூடாதென்றால் உலகளாவிய இஸ்லாம் பெரும்பாண்மைவாதம் எல்லா மதங்களுக்கும் ஆபத்தானவையாக வளரக்கூடும். குறிப்பாக இந்திய இஸ்லாம் தன்னை இங்குள்ள சூழலில் பொருத்தி புதிய இஸ்லாமாக வளருவது தான் ஜனநாயக நாட்டின் எல்லாவற்றுக்குமானதில் பொருத்தம் பெறும். அடிப்படையில் இஸ்லாமும், கிறித்துவமும் புனித இலக்கியம் சார்ந்து சகோதரத்துவ தோழமை மதங்களே என்கிற பார்வையில் இத்தகைய விமர்சனக் குரல் இல்லாமற் போயிருந்தால் இங்கும் லிபியா, ஏமன் வன்முறைகள் கட்டவிழ்த்தி விடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே தாழ்வு மனப்பாண்மையிலிருந்தும், ஒருவித குற்ற உணர்விலிருந்தும், பாதுகாப்பாற்றவர் எனும் மன ஓட்டத்திலிருந்தும் இந்திய, தமிழக இஸ்லாமியர்கள் வெளிவரவேண்டும். ஆ . . ஊ . . என்றால் அச்சுறுத்தும் சர்வதேசிய இஸ்லாம் வன்முறை அடையாளத்தைத் தூக்கிப்பிடிக்காமல், உணர்வுகளை மறுத்து, திறந்த மனம் கொண்ட அறிவுப்பூர்வமான விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய சூழலில் முற்போக்கான இஸ்லாம் சிந்தனையாளர்கள் அறிக்கை வெளியிட்டு பதற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்போது தான் மத நல்லிணக்க அடையாளத்தை மீட்டுருவாக்க முடியும். ஆனபோதிலும் புதிய இளம்தலைமுறையினரின் இஸ்லாம் பார்வை மாறுபட்டு நிற்பதும் வரவேற்கத்தக்கது. புனித இலக்கியங்களை நவீன இலக்கியங்களாக வளர்த்தெடுப்பதும், சூஃபி, ஃபகிர் போன்ற பண்பாட்டு அசைவுகளை மீட்டுருவாக்குவதும், இனக்குழு சமத்துவத்தை வரலாற்றுக் கதையாடல்களாக உருவாக்குவதும், போரின் அனுபவங்களில் வெளிப்படும் வாக்கு மூலங்களை விடுதலைக்கு நேராக விரிவாக்குவதும், மதச்சார்பற்ற பார்வையில் சமய உரையாடல் நிகழ்வதும்  வரவேற்கும் வகையில் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருப்பது ஜனநாயக நாட்டின் இறையாண்மைக்கும், தலித் இஸ்லாமியர்களுக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
Posted in Uncategorized | 8 பின்னூட்டங்கள்

BOOK RELEASE CEREMONY – ASHE PADUKOLAI (Assassination of Collector Robert William d’ Escourt ASHE)

ASHE PADUKOLAI (Assassination of Collector Robert William d’ Escourt ASHE)

Author: ANBUSELVAM

Sunday, August 12, 2012 – Evening  4 – 7pm  

Hotel Tamilnadu, Azhagar Koil Road, Madurai

Modertor: Dr. C.Laxmanan, MIDS – Chennai

Chief & Release of the Book: Thiru. Ku.Armstrong, State President, BSP – Tamilnadu

Featured Speakers: Rev.Dr.Dhyan Chand Carr

N.Pichai, Coordinator, Old Age Home, Kachaikatti, Vadipatti

Book Critique: Prof. Arangamallika, Ethiraj Women’s College, Chennai

Thiru.A.Jaganathan, Researcher, Madurai Kamaraj University, Madurai

Organised By: Intellectual Circle For Dalit Actions (ICDA), Tamilnadu – Puducherry

I chanced upon some rare documents I hadn’t read, during the shifting of the Dalit Resource Centre in Madurai. It was at that time of, that I leafed through copies of writings on the “Tinneveli Conspiracy Trial” (Tirunelveli Sadhi Vazhakku).  I was surprised to note that the documents contained only the case – related information on Vanchinathan and Ashe and no the mission and historical facts about the Tirunelveli of that period. When other caste groups were religiously celebrating the 100th anniversary of the imprisonment of V.O. Chidambaram Pillai, “The Assassination of Collector Ashe by Vanchi Iyer” took form as a short paper presented during a seminar organized on the 29th of March 2008 in connection with the ‘Dalit Cultural Festival’ (Dalit Kalai Vizha). After a long gap, it surfaced in 2011 in the ‘Dalit perspective’ for the centennial of Ashe’s Assassination.

A common adage is that one can rouse a sleeping man but not one who pretends to be asleep. One can indulge in a dialogue on annihilation of caste politics with the common working class who knowingly or unknowingly practice caste doctrines in their daily lives, with or without adequate knowledge on the origin, growth and opportunistic mechanisms of caste. In reality this is challenging and an effort that can annihilate caste. The small changes that it has brought about, in places where it has been possible, are apparent. In other words, the sleeping can be roused.

But what can one say of the caste consciousness of the “So called Intellectuals” who possess good knowledge or who concentrate subaltern views and understanding of the origin, growth and opportunistic mechanisms of caste, having learnt about it principle-wise and being educated about it, and go on to speak about social and Religious change! Phew! The dialogues on ‘Annihilation of Caste Politics’ with them never leads to social and religious change! From these subaltern histories it is apparent how this is securely stationed in their inner consciousness.  Where do we lament the direct and indirect so called intellectual hog wash that average Brahmins and an equal number of ‘Sutra Vellalas’ indulged in, in this history! The ones that pretend to be asleep …!

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஆஷ் படுகொலை – நூல் வெளியீடு – அழைப்பிதழ்

ஆஷ் படுகொலை - நூல் வெளியீடு - அழைப்பிதழ்ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை
ஆசிரியர்: அன்புசெல்வம்

நாள்: 2012 ஆகஸ்டு 12 ஞாயிறு மாலை 4 மணிக்கு
ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோயில் சாலை, மதுரை
ஏற்பாடு: தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம், தமிழ்நாடு, புதுச்சேரி

பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திருநெல்வேலி பகுதியில் நிலவிய சமூகச்சூழலை அக்கறையோடு திரும்பிப்பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் எழுச்சியை கூர் உடையச் செய்த அன்றைய சமூகம், அரசியல், மதம் இலக்கியம், பொருளாதாரம் போன்ற வரலாற்றின் மீது இதுவரை கொண்டிருந்த பார்வைகளில் நேர் – எதிர் மாற்றங்களை செய்ய வலியுறுத்தும் “திருநெல்வேலி சதி வழக்கு” பற்றிய ஒரு நூல் “ஆஷ் படுகொலை: மீளும் தலித் விசாரணை”. குறிப்பாக 1911 வருஷம் ஜூன் மீ 17 உ அன்று வாஞ்சிநாதனின் சகாக்களால் மணியாச்சியில் சுட்டுக்கொல்ல‌ப்பட்ட கலெக்டர் ஆஷின் படுகொலைக்கான காரணங்களையும், படுகொலையில் ஈடுபட்ட சராசரி பார்ப்பனர்களின் எடைக்கு எடை வேளாளர்களின் சாதியச் சேட்டைகளையும், படுகொலைச் சதியில் ஈடுபட்டு தனது சர்வ தேசிய சகாக்களாலும், தமிழ்ச் சாதிய செல்வாக்காலும் தப்பித்துக்கொண்ட, இரண்டாவதாக கப்பலோட்டியத் தமிழன்  வ.உ.சிதம்பரம் பிள்ளைமார்  போன்ற விடுபட்டக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நூறாண்டுக்குப் பின்னும் கிரிமினல் வழக்கில் பதிவு செய்ய வலியுறுத்தும் உண்மை கண்டறியும் தலித் விசாரணை நூல்.

விலை: 60 உருவா

நூல் கிடைக்குமிடம்:
புலம் வெளியீடு
332/216 திருவல்லிக்கேணி முதன்மைச் சாலை
திருவல்லிக்கேணி
சென்னை – 600 005

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

OBC or Intermediate Caste Enumeration: In the Name of Socio-Economic Profile of Caste Survey – 2012

The Intellectual Circle for Dalit Actions (ICDA) organised a discussion on “Socio-Economic profile of Caste Survey 2012” under the Ministry of Rural Development, Govt of India in Madurai on the 12th May 2012. Dalit activists, Writers, Intellectuals participated in this discussion. The objective of the deliberation on the ongoing exercise on collecting socio, economic profile of Indian society. It also took note of the diverse opinions propagated by different caste organisations/parties and expressed its criticism and serious apprehension of these.

At the outset the forum categorically affirms that this is not the caste based census at all. Rather it is clearly an OBC or intermediate caste enumeration, since the data on SC/ST is already carried out every census. The current exercise also was not enumerated by census of India. This survey, rather, is a response to the cases filed against OBC reservation in central government employment and educational institutions, also the 69% of reservation policy of Tamilnadu and the Parliament approval of the same. Following these cases the apex court made an observation and directed the state to support and rationalise the extension of reservation to the OBCs with effect from 2008. The apex court also made a direction to produce or collect data on OBCs. The current exercise carried out by Rural Ministry has to be understood against this background.

The forum anxiously raises the following pertinent points and questions:

1)      What is the state’s justification for carrying out this costly and complicated process?

2)      Is this an attempt by the state to legitimise caste?

3)      Does this survey provide legal or secular recognition for caste as the cultural manifesto of this state?

4)      This survey is supposed to help streamline and rationalise OBC reservations, but doesn’t this process strengthen caste majoritarianism?

5)      Will this lead to the further oppression of the numerically smaller caste communities?

6)      The forum raised concerns about the definition of ‘Backwardness’. Although castes are described as Backward Classes as they are socially and educationally deprived, many of those registered as MBCs and BCs are economically, socially and politically dominant or powerful. There is, therefore, a need to redefine and re-classify ‘backwardness’. If the survey is carried out using existing categorisation then it will only benefit currently powerful communities.

7)      The fulcrum of the Indian democratic polity lies in establishing a just and casteless social order through the process of democratic social transformation. This survey is contrary to the Constitution itself because it legitimises and rationalises the caste-based structure. It is, therefore, antithetical to the concept of social justice by supporting numerical caste majoritarianism.

8)      The forum also observed that the survey paved the way for the establishment of Hindu majoritarianism, because those caste-based forums and leaders who are upholding rather than negating their Hindu identity are in favour of this exercise. It could enhance and revive the caste structure which is very fragile and complex.

9)      There is no space in the survey for people to register themselves as Dalit Christians or Muslims or to say that they have no caste. This negates attempts to escape or eradicate caste through conversion, mixed marriage or radical politics.

10)   Further, the forum also expresses anguish about the non-implementation of SC/ST reservation and the emancipation of the most under-privileged sections of society over the past 65 years.

In conclusion the forum also highlighted the changing character of the state in a globalised and neo-liberal political economy. In this changed scenario the role of the state has been radically diminished such that welfare schemes and spaces in the public sector have been squeezed. This adversely affects Dalits and the landless working class the most. The forum questioned how the current survey addressed this predicament or furthered the annihilation of caste.

C. Lakshmanan, Assistant Professor, Madras Institute of Development Studies – MIDS and Hugo Gorringe, Senior Lecturer, School of Social and Political Studies, University of Edinburgh and author of ‘Untouchable Citizens: Dalit Movements and Democratisation in Tamil Nadu’ participated as special invitees. Stalin Rajangam, prominent Dalit writer; J.Balasubramanian, Assistant Professor, Department of Journalism and Science Communication, Madurai Kamaraj University; Anbuselvam, Independent Researcher, Puducherry; Paari Chelian, Founder, Iyothee Thassar Research Centre; A.Jaganathan PhD scholar, Guru Nanak Study Centre, Madurai Kamaraj University, participated.

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

My Lecture on: Towards an Understanding of the Response to Dalit Aesthetics

University of Madras

The Faculty members, Students and Alumni of The Department of English Organized and cordially invite you to attend

India Studies Endowment Lecture on

 “ Towards an Understanding of the Response to Dalit Aesthetics ” 

Lecture By

Prof. Anbuselvam

Researcher,Activist and Chronicler

French – Dalit Studies, Puducherry 

Date    : 29th March, 2012

Time    : 2.00 pm

Venue : Modern Classroom

Department of English – University of Madras

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தேர்ந்தெடுங்கள்: வேலூர் பேராயராக அருள்பணி முனைவர். அய்சக் கதிர்வேலு தகுதியானவர்

ஒரு தகுதி வாய்ந்த தலைவரை வியந்து போற்றுதலும், அவ‌ர் மீது அன்பு, பாசம், மரியாதை இருப்பதிலும் தவறில்லை. . .  எந்த மக்களிடையே பிறந்தோமோ! அந்த மக்களுக்காகப் பணியாற்ற வேண்டியது நம் கடமை என்று விழிப்புணர்வு பெற்று, வீறு கொண்டு எழுந்தவர்கள் வாழ்த்துக்குறியவர்கள் ! . . . பெருமைக்குறியவர்கள் ! . . . புகழுக்குறியவர்கள் !
(புரட்சியாளர் அம்பேத்கரின் 55 -ஆவது பிறந்த நாள் செய்தி. ‘ஜெய்பீம்’ மாத இதழ் – 13. 4. 1947)

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் . . . அவர் என்னை அனுப்பியுள்ளார்   (லூக்கா 4: 18f)

காந்தியவாதிகளுக்குப் பிடிக்காத கசங்கியக் கதராடை
ஏழ்மையைக் கொப்பளிக்கும் இயேசுவின் இயக்கத் தோற்றம்
ஆத்துமாக்களை இரட்சிக்கும் அணிகலணற்ற கரம் – சிரம்
செருப்புக்கும் விடுதலை கொடுத்த சேரிப்போராளி.
எப்போதும் மக்களோடு கை குலுக்கிச் சிரிக்கும் கறுப்பு மணவாளன்
கரிவேடு கரிசல் காட்டின் திருச்சபைக் கதாநாயகன்
அய்யாக்கண்ணு, அன்னம்மாளுக்குப் பிறந்த‌ அடைக்கலான் குருவி
காணிக்கைக்கும், காட்டுப்புறாவுக்கும், ஒரு சோடு செருப்புக்கும் விலை போகாத வேலூர் பேராயத்தின் எதிர்கால வினை தீர்த்தான்.
விண்ணுலக இறையாட்சியை மண்ணுலகில் கோறும் மாமறைதிரு வேட்பாளர், நம்ம அண்ணன்
அருள்பணி. முனைவர். அய்சக் கதிர்வேலு (52)

நம்மில் பலருக்கும் பரிச்சயமானவர். மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூக ஆய்வுத்துறையில் பேராசிரியாகப் பணியாற்றிக் கொண்டே, இந்தியாவின் அதி உன்னத தலித் ஆதார மய்யத்தில் இயக்குனராகப் பொறுப்பேற்றவர் (1999-2005). சிலகாலம் கிராமிய இறையியல் நிறுவனத்தின் இயக்குனராகக் களப்பணியாற்றியவர் (2002). மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் கல்வி தொடங்கக் காரணமானவர். ஆயர்களின் மேசைகளை அசிங்கப்படுத்திய‌ அன்றன்றுள்ள மலஜலங்களை துப்புரவுப்பணி செய்த தலித் பார்வையின் அருளுரையாளர்.
விதையை பாறையின் மீது விதைத்தாலும் பத்தாக, நூறாக பலன் தரும் என்பதை பணித்தளத்தில் பறையொலித்தவர். விதிக்கப்பட்ட விமர்சங்களினூடே ஒரு சராசரி ஆயராக இருந்து கொண்டு ஜெனிவா உலக கிறித்துவ மாமன்றத்திலும் (89), ஹாங்காங் சி.சி.ஏ அரங்கிலும் (93), தென் ஆப்பிரிக்கா சி.டபிள்யு.எம் இறையியல் பட்டறையிலும் (2003), தென் கொரியா டபிள்யு.ஏ.ஆர்.சி வேளாண் அரங்கிலும் வேதாகமத்தின் விடியலைத் தொட்டவர். இறையியல் கல்லூரிகளில் பயிலும் கருத்தோட்டங்களை திருச்சபையில் ஜெனிப்பிக்க‌ முடியாது என கற்கள் வீச‌ப்படும் புலம்பல் அதிகாரத்தை புடம் போட்டவர். அதன் ஆதார சூத்திரமாக வந்தவாசி (89), ஜவ்வாது மலை – ஜோலார்பேட்டை (89-91), ஒரத்தூர் (91-94), சத்துவாச்சாரி (2007-2011), பாகலா (2010-2011), விண்ணம்பள்ளி (2011) ஆகிய திருச்சபைகளை விளக்குத் தண்டின் மேல் தூக்கி நிறுத்தியவர். ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளில் விடுதலைக்கான விழுது ஒடிக்க வெறுங்காலால் பயணித்தவர். தனது அருள்பணித்தோழர் நான்சியுடன் இணைந்து இல்லறத்தை திருப்பணிக் கழகமாக்கியவர். சமகால மக்கள் இயக்கங்களை திருச்சபைகளின் நிகழ்ச்சியோடு இணைத்தவர். எழுச்சித்தமிழர் அண்ணன் தொல். திருமாவளவனின் கெத்சமனே பாசறைச் சீடர்.
நீங்கள் பசியாக இருந்தாலும், தாகமாக இருந்தாலும், தற்கொலைக்கு முயன்றாலும் “ஒரே தரம்மத்திரம் அண்ணே அய்சக் கதிர்வேலுவை சந்திச்சிப் பாருவே”  உங்கள் காயங்கள் குணமாகும் என மதுரைப் பக்கத்து வாடிப்பட்டி மக்கள் வசனம் எழுதி வைத்துள்ளார்கள்.
தோழர்களே ! நண்பர்களே ! ஆயர்பெருமக்களே ! திருச்சபைச் சொந்தங்களே !
திருச்சபைகளை அதிகார நுகத்தடியில் சுமக்கும் பேராயத்துவ அந்தகார அரசியல் அலுப்பூட்டி வரும் சூழலில், சொத்துக்களை விற்பதும்,  நிறுவனங்களை விலை பேசுவதும், திருப்பணித்தளங்களை பழிவாங்கும் அரசியலாக்குவதும், எழுச்சிபெறும் இறையியலைக் காயடிப்பதும், வருத்தப்பட்டு பாரஞ்சுமந்து ஓடிவரும் ஒடுக்கப்பட்ட மக்களையே ஒடுக்குவதும், பணத்தையும் – சாதியையும் கர்த்தரால் ஆசீர்வதிப்பதும் இன்றைய திருச்சபைகளின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமல்ல. பாவமன்னிப்புக்கேதுவான‌ குற்றச்சாட்டுகளும் கூட. இதன் விளைவு ஆன்மீகத்தை விதைத்து ஜனநாயக‌த்தை அறுவடைசெய்ய வேண்டிய திருச்சபைகளின் கிறித்துவம் சர்வாதிகாரமாக மாறிவிட்டதை உலகமே மேசியாவைத்தேடி முறையிடுகின்றன. இந்த உண்மையை உணராமல் விட்டோமானால் கோலியாத்துகளின், ஏரோதுகளின், பிலாத்துகளின் பாபேல் கோபுரங்களாக, அந்தப்புர‌ங்களாக, ஆட்சிப்பீடங்களாக, அரசியல் மைதானங்களாக, ஏகாதிபத்தியத்தின் விலை நிலங்களாக  இன்றைய திருச்சபைகள் தீவட்டி ஏந்திவிடும்.
இதிலிருந்து மீள்வதும், கடவுளுக்கும் மக்களுக்கும் நீதி செய்வதும், இறையாட்சியை மண்ணுலகில் நிறைவேற்றுவதும், இயேசு கிறிஸ்துவின் உன்னத நேயங்களை உலகத்துக்கு உரைப்ப‌தும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகக் கிறித்துவத்தை சாட்சியாக விதைப்பதும் பேராயத்துவ‌ உடன்படிக்கையின் ஊழித்தீ. அந்த ஊழித் தீயின் தீவட்டியேந்தி, காடியின் கசப்பை ருசித்த ஒரு முள்முடி மணவாளன், வேதாகமத்தைச் சுமந்து, பரிசுத்த அப்பத்தை தனது பாத்திரத்தில் வார்த்து, திருரத்தத்தின் விலைமதிப்பற்ற இரட்சிப்பை காணிக்கையாக்கி, சிலுவையின் கீழ் சில்லறைகளை விதைக்காமல், ஜீவ தண்ணீருக்காக வறண்டு தவிக்கும் திருச்சபைகளுக்கு மெய்யான மேய்ப்பராக, அருள்பணி. முனைவர். அய்சக் கதிர்வேலு உங்கள் திருச்சபைகளின் வாசல் கதவைத் தட்டுகின்றார்.
ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்  களமிறங்கியுள்ள தென்னிந்திய திருச்சபையின் வேலூர் பேராயர் வேட்பாளர், அண்ணன் அருள்பணி. முனைவர். அய்சக் கதிர்வேலு அவர்களை, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த பொன்னாளில் (14 ஏப்ரல் 2012) பேராயாராகத் தெரிவு செய்து, சிலுவையின் நிழலில் எதிர்காலத் திருச்சபையை இளைப்பாற்றுவோம். வேதாகம எழுத்துக்களின்படி விலைபோகாத, விலைமதிப்பற்ற உங்களின் பொன்னான வாக்குகளை உமது ஊழியனுக்கு வாக்களியுங்கள். இறையாட்சியைக் காண்பிக்கும் கடவுளின் திருவுளம் மண்ணுலகில் நிறைவேறட்டும்.

– அன்புசெல்வம்

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்

பௌத்தத்தின் நடைமுறையில் பாலி மொழி: பண்டிதர் அயோத்திதாஸரை முன்வைத்து

(சென்னை பல்கலைக்கழகத்தின் பவுத்தம் கல்வி மய்யம் ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாள் ஏற்பாடு செய்திருந்த “Religious Harmony and Cooperation for Ensuring Social Justice Role of Buddhism” என்கிற சர்வதேச கருத்தரங்கில் சமூக நீதியை வலியுறுத்தும் மத நல்லிணக்கத்துக்கு ஏற்ற ஒரு கட்டுரையல்ல இது என ஜைன பார்ப்பனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட இக்கட்டுரை உங்களின் விமர்சனத்துக்காக)
பௌத்தத்தின் நடைமுறையில் பாலி மொழி: பண்டிதர் அயோத்திதாஸரை முன்வைத்து
  • அன்புசெல்வம்
இந்தியாவில் பவுத்தம் வெறுமனே ஒரு மதம் என்கிற தளத்தில் மட்டும் செயல்படாமல் அதனைக் கடந்து இன்று விவாதப் பொருளாக்க முற்படுகின்ற விடுதலைக்கான கருத்தியல் தளங்களில் மிக விரிவானதாக நீண்டு கிடக்கின்றது.  பவுத்தத்தின் நடைமுறையைப் பிரதிபலிக்கும் பாலிமொழி அரசியலும் அதன் ஒரு நீட்சியே. பவுத்தத்தின் தத்துவார்த்த, மரபு சார்ந்த, சமுக இயங்கியலின் பன்முக அடையாளங்களை அசைபோடும்போது பவுத்தத்தை அடையாளப்படுத்தும் பாலிமொழியின் அவசியத்தையும். அதன் இன்றையத் தேவையையும் எடுத்துச் சொல்லியாக வேண்டும்.  ஏனெனில், “புத்த தம்மத்தின் சாரமும் அதன் நடைமுறைகளும்” எங்கெல்லாம் வியாபித்திருக்கின்றதோ அல்லது இன்றைய பவுத்ததை விளங்கிக் கொள்வதில் எங்கெல்லாம் குழப்பங்கள் நீடிக்கின்றதோ அவற்றைக் கட்டுடைத்து மீட்டுருவாக்குவதற்கு பாலிமொழியே மூலக்கருவி.  குறிப்பாக, ஒரு பவுத்தரின் தேடுதல் அல்லது ஒரு சாக்கியக்குடி தலித்தின் புரிதல் பவுத்தத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்பதையும், மொழி அடையாள அரசியலில் பவுத்தத்தின் சாராம்சத்தையும், பாலி மொழியின் தேவையையும் தமிழோடு எவ்வாறு பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதற்கான அளவுகோலாக பாலிமொழி புரிதல் அமைந்துள்ளது.
கிறித்துவத்தின் விவிலியத்தைப் புரிந்து கொள்ள எபிரேயமும், கிரேக்கமும், இஸ்லாத்தின் குரானைப் புரிந்து கொள்ள உருது மொழியும் அதன் மறை இலக்கிய ஆழத்தை எவ்வாறு வெளிக் கொணர்கிறதோ அது போன்றே பவுத்தத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ள பாலிமொழி அடித்தளமாக அமைகின்றது.  பாலிமொழியை இந்திய-அய்ரோப்பிய அல்லது மத்திய இந்தோ-ஆரிய மொழிகளில் ஒன்று என மேற்கத்திய மொழி அறிஞர்கள் சிலர் வாதிட்டாலும் அது “ஆசிய ஆன்மீகத்தின் தோற்றுவாய்” (Origin of Asian Spirituality) என்பதே சாலத்தகும்.  ஏனெனில் இன்று ஆசியாவில் உலவும் எல்லா மதங்களுக்கும் அதன் தத்துவார்த்த ஆன்மீக இறை நம்பிக்கையைப் பெற்றெடுத்ததில், புனித ஏடுகளின் வழியாகப் பாதுகாத்த்தில், பவுத்தமும் அதன் வாழ்வியல் இலக்கிய நடைமுறையான பாலியும் அளப்பறிய பங்காற்றியுள்ளது. அசோகர் ஆட்சி புரிந்த மகத (Māgadhī) நாட்டின் தொன்மை மொழியாகவே பாலி இருப்பதால் இலக்கிய ரீதியில் செவ்வியல் சமஸ்கிருத மொழியை விட மிகப் பழமையானது.  தமிழில் ஏதேனும் ஒரு ஸ, ஜ, ஷ, ஹ எழுத்து தென்பட்டு விட்டால் உடனே அதனை வடமொழி அல்லது சமஸ்கிருதம் என புறக்கணிக்கின்ற சாஸ்திரிய தமிழ்ச்சாதி மனோபாவம் ஒரு பவுத்தருக்கு நேர்ந்து விடக்கூடாது என்பதை நேர் செய்வது பாலி.  மொழி சார்ந்து ஆசியாவில் உலவும் 30 மொழிகளுக்கு தமிழ் முலாம்பரமாக அமைவது போல, தத்துவார்த்த, கருத்தியல் சார்ந்து தமிழுக்கு பவுத்தம் மூலாம்பரமாகவும் இருப்பதை பாலி மொழியிலும் அதன் இலக்கியத்திலும் உணர முடிகின்றது.
உதாரணத்துக்கு: தமிழில் ‘அ’ என்கிற எழுத்தைக் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் அருகில் இருக்கிற அல்லது நம்மை ஈன்றெடுத்த தாயை மய்யமாக, ஆசிரியராக முன் வைத்தே ‘அம்மா’ என்பதில் ‘அ’ தொடங்குகிறது.  அதாவது ‘A for Apple’ என்பது போல ‘அ’ என்றால் ‘அம்மா’. பெரும்பாண்மையான ஆண்களால் புணரப்பட்ட ஆணாதிக்கம் கோலோச்சும் தந்தை மொழியாக இருந்துகொண்டே தாய்மொழி என செல்வாக்காக கோலோச்சும் தமிழ்ச்சாதி சாதுர்யம் இன்றைய தமிழுக்கு உண்டு என்பது நன்கு அறிந்ததே.  ஆனால் பாலிமொழியில் ‘அ’ என்றால் அருகில் இருக்கிற அல்லது நம்மை ஈன்றெடுத்த ‘அம்மா’ என்கிற பிறவற்றிலிருந்து சுட்டு தொடங்காமல் ‘அ’ अ என்றால் அஹம் – अहम् – aham (அஹங்க: – अहङ्’ )  அதாவது ‘நான்’ என தன்னில் இருந்து, தன்னிடத்தில் உள்ள தனது உடலில் இருந்து, தன்னையே முதலில் கற்றுக் கொள்ளுதலாக, தன் உள்ளொளியாக பிறப்பெடுக்கும் பவுத்த தத்துவார்த்தத்தை உள்ளடக்கியது.
பொதுவாக பாலி மொழி 60 -லிருந்து 70 விழுக்காடு இலக்கணம் நிரம்பியது. “கச்சாயனா” என்கிற இலக்கண ஆழமானது பவுத்த தத்துவார்த்த மொழி இலக்கணமாக இருக்கிறது.  அதாவது  ஒரு குழந்தை பிறந்ததில் இருந்து இறக்கும் வரை செல்கின்ற வாழ்க்கையின் பண்பாட்டுப் படிநிலைகள் போன்று புத்த தம்மத்தின் வாழ்வியல் நடைமுறையைத் தொடக்கத்தில் இருந்து கற்பிக்கும் வழிமுறையை பாலி இலக்கணம் இயல்பாகவே கொண்டுள்ளது.  யூதர்களின் எபிரேயத்தைக் கடந்து பார்க்கப்பட வேண்டிய‌ சிறப்பம்சம் இது.  புத்த நூல்களின் களஞ்சியம் என சொல்லப்படும் “விசுதிமஹா” மற்றும் “திபவம்ஸா”, “மஹவம்ஸா”, “அபிதம்மப்பதிகா” போன்ற பவுத்த எழுத்தேடுகளில் இழையோடும் இலக்கண அழகியலைச் சுவைக்கும் போது பவுத்தத்தை எல்லை கடந்து ருசிக்க முடியும்.
எல்லாவற்றையும் விட பாலி கவுதம புத்தரின் தாய்மொழி.  அவரின் போதனைகள் அனைத்தும் பாலி மொழியிலேயே உள்ளன  (Buddha-Vacana – The word of the Buddha).  குறிப்பாக. “பிடகா”, “திரிபிடகம்” – Tipiṭaka”என்று அழைக்கப்படும் ‘சுத்தா’ (சமய உரை – Discourses), ‘வினய்’ (துறவு முறைகள் – Monastic Rules), ‘அபிதம்மா’ (போதனைகளின் பகுப்பாய்வு – Analysis of the Teaching) எனும் மூன்று தொகுப்புகளிலும் உள்ள மொழி நூல் சாராம்சங்களையும் (Philology), சொல்லாடல்களின் மூலாம்பர வரலாற்றையும் (Ancient History) விளங்கிக் கொள்வதற்கு பாலி மொழியறிவு மிக இன்றியமையாதது.
ஆர்.சி. சில்டர்ஸ் என்கிற மொழியறிஞர் திரிபிடகத்தை “புத்த மார்க்கத்தின் திருச்சட்டம்” (Covenant of Buddha) என்கிறார்.  இத்திருச் சட்டமானது பவுத்தர்களால் மிகுந்த புனிதத்துடன் போற்றப்படுகிறது.  இதில் சொல்ல‌ப்படும் அனைத்தும் புத்தரின் வார்த்தைகள்.  ஒரு தனி மனிதரின் அல்லது ஒரு சமுகத்தின் எல்லாத் தேடலுக்கும், நம்பிக்கைக்கும், நடத்தைக்கும் நல்வழி காட்டும் பதில் கொண்டது.  கிறித்துவத்தின் திருவிவிலியத்தை விட 11 மடங்கும், மஹாபாரதத்தை விட 3 மடங்கும் மனித உறவுகளை மிக ஆழமாக‌, விளக்கத்துடன் கூறுவதே திரிபிடகம் என்கிறார் (“Grammer and Dictionary of Pali Language” by Dr. B.R. Ambedkar (1998), P-2, Dr. Baba Saheb Ambedkar writings and Speeches, Vol – 11. Maharastra.). பவுத்த அருட்பணியாளர் மஹிந்திராவால் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அத்தகைய திரிபிடக சிங்களப் பிரதியையும், பாலியின் மூல மொழிப் பிரதிகளையும் பவுத்தத்தின் எதிரிகளான மலபார் மன்னர்கள் 12 -ஆம் நூற்றாண்டில் இலங்கையைக் கைப்பற்றியபோது முற்றிலும் அழித்தார்கள்.  அதில் புத்தரின் மஹாபரிநிர்வாணத்துக்குப் பிந்தைய, அதாவது இருநூறு ஆண்டுகளுக்குப் பின் தொகுக்கப்பட்ட “அர்த்தக்கடகா” -வும் உள்ளடங்கும்.  தென் இந்தியாவில் அழிக்கப்பட்ட, சிதைக்கப்பட்ட பாலி, பவுத்த எழுத்தேடுகள் சில இன்றும் பண்டைய‌ சிங்களக் குறிப்புகளில் இருந்துதான் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன.  நேபாளம், சியாம், பர்மாவுக்கு அடுத்தபடியாக பாலி செவ்வியல் மொழியாக பவுத்த எழுத்தேடுகளில் பாதுகாக்கப்பட்டிருப்பது இலங்கை மொழிபெயர்ப்புகளே.  இந்த பணிகள் முதல் நூற்றாண்டிலேயே தொடங்கி செயல்பட்டன.
பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அய்ரோப்பிய மொழி அறிஞர்கள் பலர் பாலியைக் கற்று பல நூல்களையும், அகராதிகளையும், பாலி மொழி ஆய்வு மய்யங்களையும் உருவாக்கினர்.  இருந்த போதிலும் இந்திய அளவில் இதனை பவுத்த தத்துவார்த்த, பண்பாட்டு நடைமுறைக்குள் செயல்படுத்திக் காட்டியதில் புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாச‌ர் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். தமிழர் அல்லது இந்தியர் என சொல்லிக் கொள்பவர் எவராக இருப்பினும் பவுத்தத்தைக் கற்க வேண்டுமெனில் அதனை தமிழ்-பாலி அனுபவத்தில் இருந்தே கற்க வேண்டும் என்கிற பேருண்மையை விளக்கி, பவுத்தத்தில் நடைமுறைப்படுத்தியவர்கள் இவர்களே.
அம்பேத்கரின் பாலி மொழி அறிவொளி
புரட்சியாளர் அம்பேத்கர் புத்தரையும் அவர் தம்மத்தையும் காதல் கொண்டு நேசித்தவர். இன்னும் ஒரு படி மேலே கூற வேண்டுமெனில் “பார்ப்பனியத்துக்கும், பவுத்தத்துக்குமான யுத்தமே இந்திய வரலாறு” என்பார் (Dr. Baba Saheb Ambedkar, “Writings and Speeches” Vol.3, P-267. Maharastra). 1935 அக்டோபர் 13,14 –ல் நிகழ்ந்த அயோலா மாநாட்டில் “நான் இந்துவாக சாகமாட்டேன்” (I Will Not Die a Hindu) என அவர் விடுத்த “இந்து பேரடையாள எதிர்ப்பு” இடிமுழ‌க்கமானது அவரை பவுத்தத்தை நோக்கி மட்டுமல்ல, பாலி-தமிழ் ஒப்பீட்டு பவுத்த உள்ளீடுகளையும் ஆய்வு செய்யத் தூண்டியது.  அதன் விளைவாக “பாலி மொழி இலக்கணம்- அகராதி” (Grammer and Dictory of Pali Language) ஒன்றை உருவாக்கினார்.  ஒரு மொழியின் வார்த்தைகள் மற்றும் சொல்லாடல்களுக்கு இலக்கணம்-சொல் அகராதி தொகுப்பது மிகவும் சிரமமான ஒன்று.  அதுவும் இந்தியாவில் பார்ப்பனிய வைதீகத்தால் அழித்தொழிக்கப்பட்ட, பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழிக்கு இவ்வாறு செய்வது மிக மிகக் கடினம்.  1950 ஜுன் 6 -ஆம் நாள் அம்பேத்கர் தனது இலங்கைப் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும்  இப்பணியைத் தொடங்கினார்.  அப்போது அவர் 50 வயதைக் கடந்து விட்டார்.  1755 -ஆம் ஆண்டு வாக்கில் டாக்டர் சாமுவேல் ஜான்சன் ஆங்கில மொழிக்கு அகராதி தயாரித்த பணிக்கு இணையான பணியாக அம்பேத்கரின் பாலி மொழி அகராதித் தொகுப்பு அமைந்துள்ளது என இந்திய அரசு அம்பேத்கரை கவுரவித்து, அவரது 11 -ஆவது தொகுதியாக பாலி மொழி இலக்கணம்-அகராதியை வெளியீடு செய்தது.
  • புத்தர் கால இந்திய வரலாற்றை அறிந்து கொள்ளவும்
  • நிகழ்கால பவுத்த நடவடிக்கைகளை பண்பாட்டுத் தளத்தில் வளர்த்தெடுக்கவும்.
  • சாக்கிய சமுகத்தின் மானுட தலித் அழகியலை மீட்டுருவாக்கி எதிர்காலத்தில் வாழ்ந்துணரவும்
  • சாஸ்திரிய மயமாக்கப்படாத தமிழும்-பாலியும் ஒன்றே என நிறுவவும்
ஏதுவாக இந்த அரிய முயற்சியில் அம்பேத்கர் ஈடுபட்டார். தத்துவ-மெய்யியலாளர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும். மொழி அறிஞர்களுக்கும், நாட்டுப்புறவியல் மாணவர்களுக்கும், மத ஒப்பீட்டு ஆய்வாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த அகராதி இன்று பாலி மொழி கல்வித் தளத்திலும், பவுத்த இறையியல் நடைமுறையிலும் (Theologizing of Buddha) பெரும் பங்காற்றி வருகின்றது.
புரட்சியாளர் அம்பேத்கரும், பண்டிதர் அயோத்திதாசரும் பாலி மொழி மூலங்களை அடையாளப்படுத்தும் போது இருவரும் இலங்கை, பர்மா பள்ளிக்கூட (The classical language of the Buddhists of Ceylon, Burma and Siam) பாலி எழுத்தேடுகளையே ஆதாரமாகக் கொண்டுள்ளனர்.  இருப்பினும் அம்பேத்கர் தனது மதங்கள் பற்றிய ஆராய்ச்சியில் பவுத்த தேடுதலோடு பாலியை மேற்கத்திய அறிவொளி செல்வாக்கில் நின்று வழிநடத்தினார் என்கிற விமர்சனம் இலங்கை பாலி ஆசிரியர்களால் முன் வைக்கப்படுகிறது.  அதற்கு காரணம் அம்பேத்கர் ஏதேனும் ஒரு குப்பையைக் கிளறினால் கூட அதில் ஏதோ புதைந்து கிடக்கிறது என அமெரிக்க, மேற்கத்திய, இந்திய ஆய்வாளர்களும் அவருக்குப் பின்னாலிருந்து குப்பையைக் கிளறி அம்பேத்கருடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதினால் வந்த விளைவு அது.  அதாவது அம்பேத்கர் அவரது பயன்பாட்டுவாதச் சார்பு கொண்டே (Pragmatism) பவுத்தத்தை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான சப்பைக்கட்டுக்காகச் சொல்லப்பட்டவை. இவ்விமர்சனத்திலிருந்து நவீனத்துவ, பின் நவீனத்துவ ஆராய்ச்சியாளர்களும் வேறுபட்டு நிற்கவில்லை.
பேராசிரியர் வி. ஃபுஸ்போல், எச். ஓல்டன்பெர்க், டி, டபிள்யூ. ரைஸ்டேவிட் போன்றோர் மேற்கு அய்ரோப்பிய, ஸ்காண்டிநேவிய நாடுகளில் இருந்து பாலி ஆய்வுகள் பலவற்றை இறக்குமதி செய்த போதிலும், இலங்கையிலும், தமிழகத்திலும் இன்று காணப்படும் பாலி பாடநூல்கள் மேற்கத்திய அணுகுமுறைகளை உள்வாங்காமல் சிறிதளவு ஆசிய ஆன்மிகத்தின் வழியில் தனித்து நிற்கின்றன. ரங்கூன் கல்லூரி  பாலி மொழித்துறை பேராசிரியர் சாஸ். துரைசெல், இந்திய-பர்மாவில் கிரேய்ஸ் பாலி பாடநூல்கள், இலங்கையில் எஸ், சுமங்களாவின் எழுத்தேடுகள் மற்றும் புத்ததத்தா, சங்கை போதிபால, சங்கை ரத்தினஜோதி தேர‌ போன்றோரின் நூல்கள் அனைத்தும் கிழக்கு ஆசிய பவுத்த ஆன்மீகத்தின் வெளிச்சத்தில் நின்று போதிக்கப்பட்டு வருகின்றன.  இந்த உண்மையை மேற்கத்திய பாலி ஆய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  இலங்கை ஆனந்தா கல்லூரி, கொழும்பு பாலி பவுத்தப் பல்கலைக்கழகம் முயற்சிகளில் வெளியான பாலி “பாஷாவதாரணா” தான் தற்போது பாலி மொழிக் கல்வியை தமிழ்ச் சூழலில், பவுத்த்துடன் புரிந்து கொள்ள பேருதவி செய்கிறது. பாலி பேராசிரியர் சங்கைக்குரிய போதிபால அவர்களால் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நடப்பில் பயிற்றுவிக்கப்படும் பாலி மொழிக்கல்வி இந்த பின்னணியத்தில் உருவானதே, இவை “தேரவாத எழுத்தேடுகள்” (Pali canon of the Theravada school) என போகிற போக்கில் இன்றைய நவீனத்துவ, பின் நவீனத்துவ பவுத்த-பாலி ஆராய்ச்சிகளில் பொருத்தி விமர்சிக்கப்படினும், இந்தியாவில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும்  பாலி-பவுத்த அணுகுமுறையில் இருந்து சிறிதளவு மாறுபட்டு, பாலி-தமிழ் பவுத்தம் என்கிற பண்பாட்டுத் தளத்திலும், கிரேக்க-எபிரேய மொழி ஒப்பிலக்கியக் கூறுகளின் ஊடாகவும் கற்பிக்கும் தனித்தன்மை இதற்கு உண்டு. ஆதாரமாக பண்டிதர் அயோத்திதாசரின் பாலி மொழி ஆய்வுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பண்டிதர் அயோத்திதாசரின் சகட -மகட பாஷை அரசியல்
புத்த தன்மத்தை – மகட பாஷையென்றும், சத்திய தருமத்தை – சகட பாஷையென்றும், மெய்யறத்தை – திராவிட பாஷையென்றும் விளக்கும் பண்டிதர் அயோத்திதாசர், பாலி மொழியையும், வட மொழியையும் நன்கு கற்றறிந்தவர்.  புரட்சியாளர்  அமபேத்கருக்கு முன்பே 1898 -ல் பஞச்மர் பள்ளி ஆசிரியர் பி. கிருஷ்ணசாமியுடன் கொழும்பு சென்று. பவுத்தம் தழுவி சென்னை திரும்பியதும் இராயப்பேட்டையில் “தென் இந்திய சாக்கைய பௌத்த சமயம்” என்கிற பவுத்த சங்கத்தை நிறுவி,  பவுத்தத்தையும் பாலி மொழியையும் தனது தமிழன் பத்திரிக்கை மூலம் இலங்கை, இந்தோனேசியா, பினாங்கு, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரப்பினார்.  பவுத்தக் கோட்பாடுகளை பெரும்பாலும் சாஸ்திரியமயமாக்கப்படாத தமிழ்  இலக்கியங்களைக் கொண்டே விளக்குவதும், புத்த வரலாற்றையும் கூட  அவற்றைக் கொண்டே மீட்டுருவாக்குவதும் பண்டிதரின் தனிச்சிறப்பு. இதனைத் தெளிவுபடுத்தவே அவர் பவுத்த தன்மப் பாலிப் பிரிதிகளைக் கொண்டும், தமிழ்ப்பிரிதிகளைக் கொண்டும், பரம்பரை சுருதி வாக்கியங்களைக் கொண்டும், “பூர்வத் தமிழொளியம் ஸ்ரீ புத்தரது ஆதிவேதம்” பயின்றார். (க. அயோத்திதாஸப் பண்டிதர் (1921) புத்தரது ஆதிவேதம், பக். 1, தலித் சாகித்ய அகாடமி, சென்னை-73.) புத்தரது ஆதிவேதத்தில் அவர் ஒப்பீடு செய்யும் தமிழ் பவுத்த இலக்கியங்களின் சாரம் அனைத்தும் பாலி மொழியின் பவுத்தக் கோட்பாடுகளை விளக்குவதாக அமையும்.
“பிறவியை ஜெயித்துத் தேவனாகும் பலனை விரும்புவோர் புத்தரையும், புத்த தன்மத்தையும் சிந்திக்க வேண்டியதே செயலாதலின் அவரது பிறப்பு வளர்ப்பின் சரித்திரத்தையும், அறமொழிகளாம் சத்திய தன்மத்தையும் அன்னிய மதத்தோர்களுமான பெரியோர்களால் வரைந்துள்ள நூற்களை விசேஷமாகக் கவனியாது அவர் பிறந்து வளர்ந்த இத்தேசத்துள் நாட்டிய சங்கத்தவர்கள் வரைந்துள்ள அருங்கலைச் செப்பு, அறநெறி தீபம், அறநெறிச் சாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிவாசகம், திரிகடுகம், மணிமேகலை. சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி, சூளாமணிஇ நிகழ்காலத் திரங்கல், நிகண்டு, திவாரகம், பெருங்குறவஞ்சி, சிறுகுறவஞ்சி, பெருந்திரட்டு, குறுந்திரட்டு மற்றுமுள்ள  சமண முனிவர்களின் நூற்களைக் கொண்டும் புராதன பௌத்த விவேவிகள் கர்ண பரம்பரையாக வழங்கிவரும் சுருதிகளைக் கொண்டும் அனுபவச் செயல்களைக் கொண்டும் ஆராய்வதாயின் சத்ய தன்மம் நன்கு விளங்கும் என்கிறார் (ஞான அலாய்சியஸ், 1999, பக் – 190, அயோத்திதாசர் சிந்தனைகள் -2   நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை-2) புத்தனை பின்கலை நிகண்டில் அருகன், சக்கரப் பெருஞ்செல்வன், தருமராசன், முனீந்திரன், ஆதிதேவன், சாக்கையன், விநாயகன், சாத்தன் என்றும் சீவகசிந்தாமணியில் அறன், பகவன், அந்தணர் தாதை என்றும், ஐந்து இந்திரியங்களையும் அடக்கி வெற்றி கொண்ட புத்தரும் அவரது அடியார்களும் இந்திரர் என்றும் சூளாமணியில் சினவுணர் கடந்த செல்வன் என்றும், ஆசியா கண்டம் முழுவதும் பவுத்தம் பரவியிருந்த காலத்தில் புத்தரையே சிவனென்றும், சிவகதி நாயகன் என்றும் சுட்டப்படுவதாகக் கூறுவார்.
மேலும், ஆத்திச்ஆடியின் “அறம் செய விரும்பு” எனும் முதற் செய்யுள் “அறன் செயல் விரும்பு” என்றும், ‘சனி நீராடு’ எனும் வரிக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல் பொருந்தாது, ‘உலோக ஊற்றுகளில் உடல்முழுவதும் அழுந்தக்  குளித்தெழு’ என்றும், ‘அரனை மறவேல்’ என்பதை “அறனை மறவேல்” என்றும், பூர்வ புத்த மத அரசர்கள் வாழ்ந்த பகுதியை ‘சேரி’ என்றும், திரிபிடகம், திரிக்குறள். திரிமந்திரம், திரிகடுகம், திரிவாசகம் முதலிய நூற்கள் யாவற்றிலும் பாலி மொழிகளே மலிந்து கிடக்கின்றன எனக் கூறிக் கொண்டே செல்கிறார்.  வெற்றிவேற்கையின் காப்புச் செய்யுளில் வரும் ‘வெற்றி ஞான வீரன்’ புத்தனையேக் குறிக்கும் என்று சொல்லும் தாசர், ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ எனும் முதற்பாடலில் ‘இறைவன்’ என்றும், அவன் காலத்தில் பாலி மொழி வரிவடிவம் எழுத்துகளின்றி இருந்ததென்றும், அவனே சகடபாஷையாம் சமஸ்கிருத அட்சரங்களையும், திராவிட பாஷையாம் தமிழ் அட்சரங்களையும் இயற்றி வரிவடிவமாய்க் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்துக் கொண்டு ‘எழுத்தறிவித்தவன்’ என்றும் வாதிடுகிறார். இருப்பினும், ஒலி வடிவத்தில் இருந்த மகட பாஷையை வரிவடிவமாக்கி சகல மக்களுக்கும் சகட பாஷையையும், திராவிட பாஷையையும் அருளிய ஞானி புத்தர் என்கிறார் (ப. மருதநாயகம், 2006, பக். 117 – 129 ‘ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்’ : அயோத்திதாசரின் சொல்லாடல், கல்லாத்தி, மகாராஜா நகர், திருநெல்வேலி-627 011).
மேற்கண்ட விவாதங்களை நுட்பமாகக் காணும்போது அயோத்திதாசரின் எழுத்துகளில் வெளிப்படும் சொல்லாடல்கள் மகட பாஷையாகிய பாலியைச் சார்ந்ததே என்றும், சமஸ்கிருதத்தையும், தமிழையும் அருளியவன் புத்தனே என்பதால் சாஸ்திரிய மயமாக்கப்படாத தமிழில் புரண்டோடும் சொல்லாடல்கள் பெரும்பான்மையானவை பாலியின் வெளிப்பாடே என்றும் மிகச் சரியாக எடுத்துரைக்கிறார்.  எனவே, பாலி எது? சமஸ்கிருதம் எது? தமிழ் எது? என்பதில் பண்டிதருக்கு அறிவார்ந்த பாண்டித்யம் உண்டு.  அதே சமயத்தில் காலப்போக்கில் அசுவகோசர் போன்றோரின் பார்ப்பனிய மயமாக்கப்பட்ட வடமொழி மூலங்களைத் தவிர்த்துவிட்டு தமிழிலுள்ள பௌத்த, சமண சார்புடைய இலக்கியங்களைக் கொண்டும், பாலிமொழி நூல்களைக் கொண்டும் பவுத்தத்தையும் அதன் சடங்குகளையும் பண்பட்டுத் தளத்தில் மீட்டுருவாக்கம் செய்கிறார்.
“இந்து சமயமும், வேத உபநிடதங்களும் வேத பிராமணர்களால் புத்தர் காலத்திற்கும் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு கற்பிதம் செய்து கொள்ளப்பட்டவை என்பது அவரது அழுத்தமான நம்பிக்கையும் முடிவும் ஆகும்.  தாம் எழுதும் நூலில் புத்தரின் வரலாற்றுச் செய்திகளை விட புத்த சமயக் கொள்கைகளுக்கே அதிக இடமும் முக்கியத்துவமும் தருகிறார்.  புத்தரை தமிழுக்கு நெருக்கமானவராக ஒரு தமிழ்க் காப்பியத் தலைவனாகக் கருதப்படும் வரலாற்று நிகழ்ச்சிகளும், பாத்திரங்களும், இடங்களும் இவைகளின் பெயர்களும், சடங்குகளும், விழாக்களும், தொடக்கத்தில் புத்த சமயத் தொடர்புடையன என்பதை எடுத்துக் காட்டுகிறார் (ப. மருதநாயகம், 2006, பக். 178).  இவ்வாறான இலக்கிய வெளிச்சத்தில் நின்று ஆடி அம்மன் வழிபாடு, மாளிய அமாவாசை, தீபாவளி என்னும் தீப‌வதி ஸ்னானம், கார்த்திகை தீபமென வழங்கும் கார்த்துல தீபம், ஆயுத பூஜை, ஸ்ரீ பாத சேவை, இலிங்க பூசை, காமன் பண்டிகை, சங்கராந்தி பண்டிகை என அனைத்து பண்பாட்டு அசைவுகளுக்கும் புத்துயிர் அளிக்கிறார்.
பாலியின் இலக்கண – இலக்கிய அழகியலைப் பறைசாற்றிய இத்தகைய மேன்மை பொருந்திய பவுத்த இலக்கியம் எங்கே? என்னவானது? பவுத்தமும், பாலி மொழியும் அதைப் பேசுகிற, நடைமுறையில் பிரதிபலிக்கிற மக்கள் கூட்டத்தினர் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்? என்கிற தேடுதலை நோக்கி காலப்போக்கில் அவரின் பாலி மொழி அரசியல் நீட்சி பெற்றது.  “ஒரு மொழி தாழ்த்தப்படும் போது அதைப் பேசுகிற மக்கள் உயர்ந்த நிலையில் இருக்க முடியாது.  அது போலவே ஒரு மக்கள் கூட்டம் தாழ்த்தப்படும் போது அவர்கள் பேசும் மொழி உயர்ந்த  நிலையில் விளங்க முடியாது” என்று குறிப்பிடுகிறார் ஞான அலாய்சியஸ், 1999, பக் – 548, அயோத்திதாசர் சிந்தனைகள் – 2).  அவ்வாறு பார்த்தால் பொது மொழி பேசும் அனைவரும் இங்கு சமமாக பாவிக்கப்பட்டு மேன்மை நிலையில் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் இங்கு நடைமுறையில் தமிழ் பேசும் ஒரு பகுதி மக்களை தாழ்த்தப்பட்டவர்களாகவும், ஒரு பகுதி மக்களை உயர்த்தப்பட்டவர்களாகவும் நடத்தப்படுகிற நிலையை இன்றைய தமிழ் போதிக்கிறது என்றால் அது தமிழ்தானா? அதில் பேசப்படும் இலக்கண-இலக்கியங்கள் யாரைப் பற்றியது? அவர்கள் பேசுகிற தமிழ்த் தேசியம் என்றால் என்ன?  அதில் தாழ்த்தப்படும் சாக்கியக்குடி தலித்துகளின் மொழி உள்ளிருப்பு வரலாறு என்னவாக இருக்கிறது? என்பனவற்றை கேள்வி எழுப்பும் அளவுகோலாக பாலி மொழி இருப்பதால் பாலி மொழியையும், அதனைப் பேணி வளர்த்த சாக்கியக்குடி பவுத்தர்களையும் தாழ்த்தினார்கள் என்பது அயோத்திதாசரின் ஆழமான ஆய்வு.  பொதுவாக அயோத்திதாசரின் எழுத்துகளை வாசிப்பவர்கள் எடுத்த எடுப்பிலேயே அவர் தமிழுக்கு எதிரி, ஸ, ஜ, ஷ, ஹ‌  போன்ற எழுத்துகளைப் பயன்படுத்தி, பாலியையும் தமிழையும் இழையோட்டி எழுதும் தனித்த தமிழ் நடை கொண்டதால் அவரை வடமொழி ஆதரவாளர் என போகிறபோக்கில் விமர்சிக்கும் தமிழ்ச்சாதி விசுவாசிகளுக்கு பண்டிதரின் பாலி மொழி பட்டறிவு பற்றிய பார்வை தென்படாமல் போனதே காரணம்.  பாலிமொழியை, தான் ஒரு பூர்வ பவுத்தன் என்கிற பார்வையில் இருந்து மட்டுமே அணுகாமல் இச்சமுகத்திற்கு அறத்தையும், புத்தியையும், நீதியையும், சமத்துவத்தையும் வலியுறுத்தும் தான் ஒரு சாக்கிய தலித் குடி என்கிற உள்ளோட்டமே அவரது எழுத்துகளில் நிரம்பிக் கிடக்கிறது.  எனவே, தமிழகத்திலும், இந்திய அளவில் பரோடா, மும்பை, அவுரங்காபாத், டெல்லி, ஜவஹர்லால்  நேரு போன்ற பல்கலைக்கழகங்களிலும் பாலி மொழியை போதிப்பவர்கள் பண்டிதர் அயோத்திதாசரின் தமிழ் – பாலி மொழி அரசியலை அவ்வளவாக உச்சரிப்பதில்லை. இது தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும், ஆதிதிராவிட – ஆதித்தமிழர் பாரம்பரியத்திலும் பண்பாட்டு ரீதியாக பவுத்தத்தை மீட்டுருவாக்குவதற்கு பண்டிதர் முன்வைத்த காரண காரியங்களே இங்கு மிக அதிகமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அது பாலி மொழி அரசிய‌லாகவோ, தமிழ்ப் பவுத்தமாகவோ இருப்பினும்.
” தாழ்த்தப்பட்ட எங்கள் இனம் உயர்வதும், எங்களுக்கு வஞ்சம் புரிந்து உயர்ந்தோர் தாழ்வதும் காலப்போக்கில் தவிர்க்க முடியாதவை.  ஆயினும் எங்கள் இனம் அவர்களுக்கு எவ்விதக் கொடுமையும் செய்யாது.  செய்யக்கூடாது” என அழுத்தமாகக் கூறும் பண்டிதர்  எதிர்காலத்தில் மொழி வழி தேசிய அரசியலில் சாக்கியக்குடி தலித்துகளின் பண்பாட்டு வரலாறு மீண்டும் தமிழ்ச்சாதி விசுவாசிகளால் சிதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் வைக்கிறார்.  இந்த வாதத்துக்கு யாரெல்லாம் மொழி வழி தேசிய அரசியலில் கட‌ப்பாடு கொண்டிருக்கிறார்களோ அவர்களனைவரும் பண்டிதரின் பாலி – தமிழ் மொழி அரசியலை உள்வாங்கி அசை போட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் பாலிமொழியைக் கற்பதும், மீட்டுருவாக்குவதும் பண்டிதரின் தமிழ்-பாலி மொழி அரசியலோடு தொடர்புடையது.
  • பண்டிதரை மீட்பதென்பது தமிழ்-பாலியில் புதைந்துள்ள பவுத்தத்தை அகழ்ந்தெடுப்பது
  • பவுத்தத்தை மீட்பதென்பது பூர்வத் தமிழொளியான புத்தரின் சாக்கிய தலித் குடிகளின் மூலாம்பர வரலாற்றை மீட்டெடுப்பது.
என்கிற சங்கிலித் தொடரைத் தமிழ்த் தேசியம் பேசும், தமிழ் அடையாள‌த்தில் புரளும், தமிழ்ச் சாதியை விசுவாசிக்கும், ஆசீவகத்தை வலியுறுத்தும், சாஸ்திரிய வள்ளுவத்தில் புரளும், இந்து சமஸ்கிருதத்தைப் போற்றும் அனைவரும் நிச்சயம் மறுவாசிப்பு செய்ய வேண்டும்.  அதற்கு அம்பேத்கரின், பண்டிதரின் பாலிமொழி அனுபவங்கள் மூலாம்பரச் சூத்திரங்களாக அமைகின்றன.  ஒரு நிலத்தைப் பண்படுத்த வேண்டுமெனில் அகலமாக மட்டுமல்ல, ஆழமாகவும் உழ வேண்டும்.  அந்த அகலமும் ஆழமும்தான் காற்றையும், நீரையும் தன்னகத்தே நிறுத்தும் என்பது மண்ணின் வேளாண் நியதி.  இங்கே பாலி மொழியைப் பண்படுத்தி வளர்க்க அதை மேற்கத்திய அறிவொளி செல்வாக்கில் நிறுத்தி முழுமை நோக்கி உலகு தழுவிய பார்வையில் அம்பேத்கர் அகல உழுதார் என்றல், பண்டிதல் அயோத்திதாசர் ஒரு மானுடத்தின் தலைநிமிர்வை தமிழ்ப் பவுத்த இலக்கியப பண்பாட்டுத் தளத்தில் தூக்கி நிறுத்தி, அடுத்த தலைமுறையினருக்கு வழிகாட்டவே ஆழமாக உழுதார்.  அத்தகைய பாலி மொழி ஆய்வின் அகலத்தையும், ஆழத்தையும் ஒவ்வொரு தமிழரும் காற்றும், நீரும் போல பண்படுத்திக் கொள்வது தமிழ் மண்ணின் கால நியதி.
துணை நின்ற நூல்கள்
1.    ஞான அலாய்சியஸ் (1999), ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’, பாகம் 1, 2.   நாட்டார் வழக்காற்றியல் மையம், தூய சவேரியர் கல்லூரி, பாளையங்கோட்டை-2
2.    க. அயோத்திதாஸப் பண்டிதர் (1921), ‘புத்தரது ஆதிவேதம்’, தலித் சாகித்ய அகாடமி, சென்னை-73.
3.    ப. மருதநாயகம் (2006), ‘ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்: அயோத்திதாசரின் சொல்லாடல்’, கல்லாத்தி, மகாராஜா நகர், திருநெல்வேலி – 627 011.
4.    A New Course in Reading Pali: (1998), Entering the Word of the Buddha, Motilal Banarsidass Publishers, New Delhi.
5.    Ven. A.P. Buddhadatta, Buddhadatta’s Manuals, ed. 2 volumes (1915, 1928), Buddhist Cultural Centre, 125, Anderson Road Nedimala, Dehiwela, Sri Lanka.
6.    “Grammer and Dictionary of Pali Language” by Dr. B.R. Ambedkar (1998), Dr. Baba Saheb Ambedkar writings and Speeches, Vol – 11. Maharastra.
7.    Dr. Baba Saheb Ambedkar, “Writings and Speeches” Vol.3, Maharastra.

(This Paper was presented in the International Seminar on “Religious Harmony and Cooperation for Ensuring Social Justice Role of Buddhism, held on 2012 January 19-20” Organised by Centre for Buddhist Studies, University of Madras, Chennai)

Posted in Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக